கனோவிட் மக்களவைத் தொகுதி
கனோவிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kanowit; ஆங்கிலம்: Kanowit Federal Constituency; சீனம்: 加诺威联邦选区) என்பது மலேசியா, சரவாக், சிபு பிரிவின் கனோவிட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P210) ஆகும்.[5] கனோவிட் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கனோவிட் மாவட்டம்கனோவிட் மாவட்டம் (Kanowit District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கனோவிட் நகரம்.[7][8] இந்த மாவட்டத்தின் முக்கிய இனக்குழுக்கள்: இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் பூர்வீக மக்கள். வரலாற்றுப் பதிவுகளின்படி, 1851-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மாவட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. 1851-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். அதன் பெயர் எம்மா கோட்டை. அப்போது கனோவிட் நிலப்பகுதி, புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1853-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆற்றின் நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கட்டப்பட்ட எம்மா கோட்டை, ராஜாங் ஆற்றைப் பயன்படுத்திய மக்களுக்கு டயாக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தது. கனோவிட் மக்களவைத் தொகுதிகனோவிட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9] சரவாக் பூமிபுத்ரா (84.6%) மலாயர் (3.3%) சீனர் (11.3%) இதர இனத்தவர் (0.8%)
கனோவிட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.94%) பெண் (50.06%)
கனோவிட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.28%) 21-29 (19.45%) 30-39 (20.88%) 40-49 (16.43%) 50-59 (16.27%) 60-69 (11.83%) 70-79 (5.78%) 80-89 (2.11%) + 90 (0.98%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia