சரதோக் மக்களவைத் தொகுதி
சரதோக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Saratok; ஆங்கிலம்: Saratok Federal Constituency; சீனம்: 沙拉托联邦选区) என்பது மலேசியா, சரவாக், பெத்தோங் பிரிவு;பெத்தோங் மாவட்டம்; காபோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P205) ஆகும்.[5] சரதோக் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து சரதோக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பெத்தோங் பிரிவுபெத்தோங் பிரிவு (Betong Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரவாக் மாநிலத்தில் உள்ள நிர்வாகப் பிரிவுகளில் மிகச் சிறியப் பிரிவு. மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. இபான் மக்கள்பெத்தோங் பிரிவில் பெத்தோங் மாவட்டம்; சரதோக்கு மாவட்டம் என இரு மாவட்டங்கள் உள்ளன. பெத்தோங் பிரிவு சரிபாஸ் (Saribas) பகுதியில் உள்ளது. சரிபாஸ் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாஸ் பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.[7][8] சரதோக் மக்களவைத் தொகுதிசரதோக் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9] சரவாக் பூமிபுத்ரா (54.4%) மலாயர் (38.7%) சீனர் (6.5%) இதர இனத்தவர் (0.5%)
சரதோக் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.91%) பெண் (50.09%)
சரதோக் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.64%) 21-29 (20.71%) 30-39 (20.84%) 40-49 (15.92%) 50-59 (16.55%) 60-69 (11.94%) 70-79 (5.56%) 80-89 (1.43%) + 90 (0.41%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia