பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batang Sadong; ஆங்கிலம்: Batang Sadong Federal Constituency; சீனம்: 峇丹沙隆国会议席) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவில்; அசா ஜெயா மாவட்டம்; சிமுஞ்சான் மாவட்டம்; கெடோங் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P200) ஆகும்.[5] பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1990-ஆம் ஆண்டில் இருந்து பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] அசா செயா மாவட்டம்அசா செயா மாவட்டம் (Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம். சமரகான் மாவட்டம்; அசா ஜெயா மாவட்டம்; சாடோங் ஜெயா துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[7] அசா ஜெயா நகரம்அசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு அசா ஜெயா நகரம் மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[8] பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதிபத்தாங் சாடோங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9] சரவாக் பூமிபுத்ரா (22.6%) மலாயர் (72%) சீனர் (5%) இதர இனத்தவர் (0.4%)
பத்தாங் சாடோங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.37%) பெண் (50.63%)
பத்தாங் சாடோங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.67%) 21-29 (19.73%) 30-39 (20.49%) 40-49 (16.47%) 50-59 (16.68%) 60-69 (11.8%) 70-79 (6.01%) 80-89 (1.62%) + 90 (0.53%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia