சிப்பாங் மக்களவைத் தொகுதி
சிப்பாங் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Sepang; ஆங்கிலம்: Sepang Federal Constituency; சீனம்: 瓜拉冷岳国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P113) ஆகும். சிப்பாங் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து சிப்பாங் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. சாலாக் திங்கி நகரம்சாலாக் திங்கி நகரம், சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பதும் உண்டு.[5] இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சிப்பாங் மாவட்டத்தின் நிர்வாக மையம் இந்த நகரில் அமைக்கப்பட்டு உள்ளது.[6] சிப்பாங் மாவட்டம்சிப்பாங் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி. மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது. உலு லங்காட் மாவட்டம் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1975 சனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[7] சிப்பாங் மக்களவை தொகுதி
சிப்பாங் மக்களவை தேர்தல் முடிவுகள்
சிப்பாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia