பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Rengas; ஆங்கிலம்: Padang Rengas Federal Constituency; சீனம்: 硝山国会议席) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P061) ஆகும்.[7] பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பாடாங் ரெங்காஸ்பாடாங் ரெங்காஸ் நகரம் பேராக் மாநிலத்தில் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் கோலாகங்சார் ஆகும். பாடாங் ரெங்காஸ் நகரம்; கோலாகங்சார் - தைப்பிங் நகரங்களுக்கு இடையிலான ஒரு முக்கியமான துணை நகரமாக விளங்கி வருகிறது. இந்த நகருக்கு அருகில் புக்கிட் பெராபிட் ராபிட் (Bukit Rabit) எனும் இடத்தில் 1897-ஆம் ஆண்டில் ஒரு தொடருந்துச் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது.[8] மலைச் சுற்றுலா வளாகம்தற்போது வரை, பாடாங் ரெங்காஸ் மற்றும் குனோங் பொண்டோக் ஆகியவை மிகவும் முக்கியமான நிலத் தடங்களாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை கோலாகங்சார் மற்றும் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகியவற்றின் இடையிலான எல்லைகளாக அமைகின்றன.[8] இங்கு ஒரு மலைச் சுற்றுலா வளாகம் உள்ளது. அதன் பெயர் குனோங் பொண்டோக் சுற்றுலா வளாகம். இந்த மலைக்கு அருகில் சுண்ணாம்புக் கற்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் செழிப்பாக வளர்ந்திருந்த ரெங்காஸ் மரங்களின் பெயரில் இருந்து பாடாங் ரெங்காஸ் என்ற பெயர் பெறப்பட்டதாகக் அறியப்படுகிறது. பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாடாங் ரெங்காஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia