பொலோனியம் நாற்குளோரைடு
பொலோனியம் நாற்குளோரைடு (Polonium tetrachloride) என்பது PoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு [[கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இச்சேர்மம் அடர் மஞ்சள் நிறப் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இச்சேர்மம், செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போல 200° செ வெப்பநிலைக்கு மேல் பொலோனியம் இருகுளோரைடு மற்றும் அதிகளவு குளோரின் எனச் சிதைவடைகிறது[1]. அமைப்புபொலோனியம் நாற்குளோரைடானது ஒற்றைச்சரிவு அல்லது முச்சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது. தோற்றம்அறை வெப்பநிலையில் பொலோனியம் நாற்குளோரைடு அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனுடைய உருகுநிலையான 300° செல்சியசு வெப்பநிலையில் வைக்கோல் நிற மஞ்சளாகவும் கொதிநிலையான390° செல்சியசு வெப்பநிலையில் நல்ல சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. இச்சேர்மத்தின் ஆவியானது 500° செல்சியசு வெப்பநிலை வரை பழுப்பு நிறமாகவும் அதற்கு மேல் நீலம் மற்றும் பச்சை நிறத்திற்கும் மாறுகிறது.[1] தயாரிப்புபொலோனியம் நாற்குளோரைடு பினவருமாறு தயாரிக்கப்படுகிறது.
பொலோனியம் வேதியியல்இரு மோல்கள் முப்பியூட்டைல் பாசுபேட்டுடன் பொலோனியம் நாற்குளோரைடு சேர்ந்தால் அணைவுச் சேர்மம் உருவாகிறது. செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போலவே பொலோனியம் நாற்குளோரைடும் PoCl− மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia