காஸ்கஞ்ச்
காஸ்கஞ்ச் (Kasganj), வட இந்தியாவி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கன்ஷிராம் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மாநிலத் தலைநகரமான லக்னோவிற்கு வடமேற்கே 297 கிலோ மீட்டர் தொலைவில் காஸ்கஞ்ச் நகரம் உள்ளது. இது ஆக்ராவிற்கு வடகிழக்கே 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகள் கொண்ட காஸ்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 101,277 ஆகும். அதில் ஆண்கள் 53,552 மற்றும் பெண்கள் 47,725 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,376 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.36% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,376 மற்றும் 30 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.34%, இசுலாமியர் 22.94%, பௌத்தர்கள் 0.68%, சீக்கியர்கள் 0.21%, கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[2] போக்குவரத்துஆக்ரா-பதாவுன்-பரேலி நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 33 காஸ்கஞ்ச் நகரம் வழியாகச் செல்கிறது. காஸ்கஞ்ச் இரயில் நிலையம்[3] மதுரா, கான்பூர், பரேலி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia