காசியாபாத்
காசியாபாத் (Ghaziabad, Hindi: ग़ाज़ियाबाद, Urdu: غازی آباد) உத்தரப் பிரதேச மாநிலத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஓர் தொழிற்பேட்டை நகரமாகும். இந்தியத் தலைநகர் தில்லிக்கு கிழக்கே 19 கி.மீ. தொலைவிலும் மீரட்டிற்கு தென்மேற்கே 46 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரம் காசியாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரை உருவாக்கிய காசி-உத்-தின் இதனை காசியுத்தின் நகர் எனப் பெயரிட்டார். பின்னர் இப்பெயர் தற்போதைய காசியாபாத் என சுருக்கப்பட்டது. தொடர்வண்டி மற்றும் நெடுஞ்சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ள இந்த நகரம் பெரும் தொழிலக நகரமாக வளர்ந்துள்ளது. முரத்நகரில் உள்ள படைக்கருவிகள் தொழிற்சாலையும் பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் சில முதன்மையான நிறுவனங்களாகும். மேற்கோள்கள்http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HD/2011/09/21/ArticleHtmls/Opening-up-new-vistas-21092011605004.shtml?Mode=1[தொடர்பிழந்த இணைப்பு] வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia