ஆசம்கர்
ஆசம்கர் (Azamgarh), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த ஆசம்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். தமசா ஆற்றின் கரையில் அமைந்த ஆசம்கர் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 268 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஆசம்கர் நகரத்தின் மக்கள் தொகை 1,10,983 ஆகும். அதில் ஆண்கள் 57,878 மற்றும் பெண்கள் 53,105 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,352 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 70.22%, இசுலாமியர் 29.06%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3] போக்குவரத்து![]() ஆசம்கர் ரயில் நிலையம்[4]வாரணாசி,லக்னோ, புது தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. வானூர்தி நிலையம்ஆசம்கர் நகரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் மந்தூரி வானூர்தி நிலையம் உள்ளது. கல்வி
மேற்கோள்கள்
வெள் இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Azamgarh என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia