விந்தியாச்சல்
விந்தியாச்சல் (Vindhyachal) ⓘ, வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். மிர்சாபூர்-விந்தியாச்சல் நகராட்சியின் கீழ் விந்தியாச்சல் நகரம் உள்ளது. இந்நகரத்தில் குடிகொண்டுள்ள விந்தியவாசினி அம்மன் கோயில் பெயரால் இந்நகரத்திற்கு விந்தியாச்சல் எனப்பெயராயிற்று. இந்நகரத்தில் கங்கை ஆறு பாய்கிறது. ![]() அமைவிடம்விந்தியாச்சல் நகரம் வாரணாசியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும்; அலகாபாத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மிர்சாபூர்]]-விந்தியாச்சல் நகராட்சியின் மக்கள் தொகை 2,45,817 ஆகும். அதில் ஆண்கள் 1,31,534 மற்றும் பெண்கள் 1,14,283 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,619 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.85% ஆகவுள்ளது. [2] இரயில் நிலையம்விந்தியாச்சல் இரயில் நிலையம் [3]இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கிறது. மேற்கோள்கள்
25°10′N 82°30′E / 25.167°N 82.500°E வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia