மோடிநகர்
மோடிநகர் (Modinagar), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கில் அமைந்த காசியாபாத் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது காசியாபாத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும்; புது தில்லியிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசியத் தலைநகர வலையத்தில் மோடிநகர் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 26 வார்டுகளும், 24,777 வீடுகளும் கொண்ட மோடிநகரின் மக்கள் தொகை 1,30,325 ஆகும். அதில் ஆண்கள் 69,268 மற்றும் பெண்கள் 61,057 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 881 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,808 மற்றும் 10 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.04%, இசுலாமியர் 5.1%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.64%, சீக்கியர்கள் 0.74%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர்.[2] கல்வி
மேற்கோள்கள்
https://web.archive.org/web/20110528213837/http://www.acledu.co.in/
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia