அவோகேட்ரைட்டு
அவோகேட்ரைட்டு (Avogadrite) என்பது (K,Cs)BF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பொட்டாசியம்-சீசியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்ற சேர்மமாக ஓர் ஆலைடாக இது வகைப்படுத்தப்படுகிறது. செஞ்சாய்சதுர வடிவத்தில் Pnma என்ற இடக்குழுவில் 8.66 Å, b 5.48 Å மற்றும் c Å 7.03 அளவுருக்களில் அவோகேட்ரைட்டு படிகமாகிறது. வரலாறுஇத்தாலியக் கனிமவியலாளர் பெரூக்சியோ சாம்போனினி 1926 ஆம் ஆண்டில் அவோகேட்ரைட்டு கனிமத்தைக் கண்டறிந்தார். இதற்காக அவர் வெசுவியசு மலைக்கு அருகில இருந்த பல நீரவித்துளைகளிலும், இலிபாரி தீவிலும் கிடைத்த பல மாதிரிகளை ஆய்வுசெய்தார். இயற்கையில் எரிமலை நீராவித்துளைகளைச் சுற்றி ஒரு பதங்கமாகும் பொருளாக அவோகேட்ரைட்டு காணப்படுகிறது [1]. 1776-1856 காலத்தில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி அமெடியோ அவோகேட்ரோவின் பெயரை இக்கனிமத்திற்கு இவர் சூட்டினார் [4]. பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அவோகேட்ரைட்டு கனிமத்தை Avg[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia