பெர்புளோரோடிரைபென்டைலமீன்
பெர்புளோரோடிரைபென்டைலமீன் (Perfluorotripentylamine) என்பது C15F33N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். மின்னணுவியல் குளிரூட்டியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். நிறமற்றும், நெடியற்றும் உயர் கொதிநிலை கொண்டும் இச்சேர்மம் காணப்படுகிறது. பெர்புளோரோடிரைபென்டைலமீன் நீரில் கரைவதில்லை. சாதாரான அமீன்களை போல அல்லாமல் பெர்புளோரோ அமீன்கள் குறைவான காரத்தன்மையை கொண்டவையாகவும் புளோரோபாய்மங்களின் பகுதிக்கூறுகளாகவும் உள்ளன. இவை மீக்கணினிகளில் அமிழ் குளிரூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன[1]. ஐதரசன் புளோரைடை கரைப்பானாகவும் புளோரின் மூலமாகவும் பயன்படுத்தி அமீனை மின்வேதியியல் புளோரினேற்ற தொகுப்பு வினைக்கு உட்படுத்தி பெர்புளோரோடிரைபென்டைலமீன் தயாரிக்கப்படுகிறது[1].
பாதுகாப்புபொதுவாக புளோரோ அமீன்கள் குறைவான நச்சுத்தன்மை என்பதால் அவை செயற்கை இரத்தமாக மதிப்பிடப்படுகின்றன[1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia