எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம்
எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் (Hexafluorophosphoric acid) என்பது H3OPF6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு HPF6 என்றே எழுதப்படுகிறது. நீரேற்று நிலையில் கிடைக்கக்கூடிய ஒரே சேர்மம் எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் ஆகும். வலிமையான பிரான்சுடெட் அமிலமாகிய இது எக்சாபுளோரோபாசுபேட்டு (PF−6) என்ற ஒருங்கிணைவில் ஈடுபடாத எதிர்மின் அயனியைக் கொண்டுள்ளது. ஐதரசன் புளோரைடுடன் பாசுபரசு பெண்டாபுளோரைடு வினைபுரிவதால் எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது [2]. வலிமையான பல அமிலங்களைப் போல எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலத்தை பிரித்தெடுக்க முடிவதில்லை. ஆனால் ஒரு கரைசலாக இதைப் பயன்படுத்தமுடியும். நீர்த்த கரைசலில் ஐதரோனியம் அயனியும் (H3O+) எக்சாபுளோரோபாசுபேட்டு அயனியும் (PF−6) உள்ளன. கூடுதலான இத்தகைய கரைசல்களில் P-F பிணைப்புகள் நீராற்பகுப்பு செய்வதால் உருவாகும் HPO2F2, H2PO2F மற்றும் H3PO4 உள்ளிட்ட அமிலங்களும் அவற்றின் இணைகாரங்களும் காணப்படுகின்றன [3]. எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் கண்ணாடியைத் தாக்குகிறது. சூடுபடுத்தும்போது சிதைவடைந்து HF ஆக மாறுகிறது. அறுநீரேற்றாக படிகவடிவ HPF6 பெறமுடியும். இங்கு PF−6 உச்சிநீங்கிய எண்முக கூடுகளில் நீர் மற்றும் புரோட்டான்களால் வரையறுக்கப்படுகிறது. இந்த அறுநீரேற்றுகளிலிருந்து வருவிக்கப்படும் கரைசல்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு HF காணப்படுவதாக அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் அளவீடுகள் தெரிவிக்கின்றன [3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia