குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள்குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பவர்கள் இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா என அழைக்கப்படுகின்ற அவையில் குஜராத் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். 1952 முதல், பம்பாய் மாநிலம் 17 இடங்களையும், சௌராஷ்டிரா மாநிலம் 4 இடங்களையும், கட்ச் மாநிலம் 1 இடத்தையும் தேர்ந்தெடுத்தது. 1956-ல் அரசியலமைப்பு (ஏழாவது திருத்தம்) சட்டத்திற்குப் பிறகு, பம்பாய் மாநிலம் 27 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. 1960ஆம் ஆண்டின் பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு, மூன்று இடங்கள் அதிகரிக்கப்பட்டது. மே 1, 1960 முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய குஜராத் மாநிலம் 11 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது, புதிய மகாராட்டிரா மாநிலம் 19 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. மாநில சட்டமன்றங்களுக்குள் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் உடன் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. [1] உறுப்பினர்கள் பட்டியல்தற்போது குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது. தற்போதைய உறுப்பினர்கள்
மேனாள் உறுப்பினர்கள்
இதையும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia