மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019 (2019 Rajya Sabha elections) என்பது 2019ஆம் ஆண்டில் சூன் 7, சூலை 5 மற்றும் சூலை 18 ஆகிய தேதிகளில், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சூன் 7, 2019 அன்று அசாமிலிருந்து 2 உறுப்பினர்களையும், தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க 2019 சூலை 5 அன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக 10 இடங்களைப் பெற்று நிகர வெற்றியுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டது.
தேர்தல்கள்
இடைத்தேர்தல்
தன்னியக்க தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவிவிலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும்.
- 23 மே 2019 அன்று அமித் ஷா காந்திநகரிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
- 24 மே 2019 அன்று ஸ்மிருதி இரானி அமேதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
ஒடிசா
- 24 மே 2019 அன்று அச்யுதா சமந்தா கந்தமால் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒடிசா மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
- 6 சூன் 2019 அன்று சௌமியா ரஞ்சன் பட்நாயக் ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
- 6 சூன் 2019 அன்று பிரதாப் கேசரி தேப் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜஸ்தான்
- 24 சூன் 2019 மதன் லால் சைனி இறந்தார்
உத்தரப்பிரதேசம்
கர்நாடகா
எண்
|
பதவி காலம் முடியும் உறுப்பினர்
|
கட்சி
|
காலியிடத்தின் தேதி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
நியமனம் தேதி
|
ஓய்வு பெறும் தேதி
|
1
|
கே.சி.ராமமூர்த்தி
|
|
இந்தியத் தேசிய காங்கிரசு
|
16 அக்டோபர் 2019
|
கே.சி.ராமமூர்த்தி
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
5 திசம்பர் 2019
|
30 சூன் 2022
|
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்