மாநிலங்களவைத் தேர்தல்கள் 2006 (2006 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின்மேலவையானமாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2006ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சிக்கிமிலிருந்து ஒரு உறுப்பினரையும்,[1] 15 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களையும்,[2] ஜார்கண்டிலிருந்து இரண்டு உறுப்பினர்களையும்,[3] கேரளாவிலிருந்து மூன்று உறுப்பினர்களையும்,[4][5] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2006-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.
28/03/2006 அன்று ஒரிசாவில் காலியாக உள்ள பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 23 திசம்பர் 2005 அன்று சத்ரபால் சிங் லோதா வெளியேற்றப்பட்டதால் இத்தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் 1 சூலை 2010 அன்று முடிவடைந்தது.[7]
15.06.2006 அன்று 16.03.2006 அன்று வரை பதவி உள்ள உறுப்பினர் ஜெயா பச்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. 29.03.2006 அனில் அம்பானி பதவி விலகியதால் உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள பதவிக்கு 15/06/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[8]
15/06/2006 அன்று இடைத்தேர்தல் 03.05.2006 அன்று உறுப்பினர் பிரமோத் மகாஜன் மரணமடைந்ததாலும், உறுப்பினர் குலாம் நபி ஆசாத் 29.04.2006 அன்று பதவி விலகியதாலும் மகாராட்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[8]
31 மே 2006 அன்று உறுப்பினர் ஆர். சரத் குமார் பதவி விலகியதால் தமிழகத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 13/07/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, இவரது பதவிக்காலம் 24 சூலை 2007 அன்று முடிவடைந்தது.[9]
18/09/2006 அன்று மகாராஷ்டிராவிலிருந்து காலியாக உள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வசந்த் சவான் 11 சூலை 2006 அன்று இறந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2012 வரை இருந்தது.[10]
10 அக்டோபர் 2006 அன்று, லலித் சூரி இறந்ததால் உத்தரப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 11/12/2006 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக்காலம் 4 சூலை 2010 அன்று முடிவடைந்தது.[11]