காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
![]() வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது. இட அமைப்புஇந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் இரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150க்கும் அதிகமான பயணிகள் இரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் இரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 329 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11]
வசதிகள்
போக்குவரத்துகாட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே இரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன. இரயில் பயணிகள்சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia