பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு
பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு (Potassium octachlorodimolybdate) என்பது K4Mo2Cl8 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் பிசு (நாற்குளோரிடோமாலிப்டேட்டு) என்பது இதனுடைய வேதிமுறைப் பெயராகும். இச்சேர்மத்தின் வேதி வாய்ப்பாட்டை K4[Cl4MoMoCl4]) என்றும் எழுதுவர். சிவப்பு நிறத்துடன் நுண்படிகத் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் பொதுவாக இளஞ்சிவப்பு நிற இருநீரேற்றாக கிடைக்கிறது. முற் காலத்தில் இவ்வெதிர்மின் அயனி நான்மடி பிணைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்பட்டது. மாலிப்டினம் அறுகார்பனைலில் இருந்து இரண்டு படிநிலைகளில்:[1][2] பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டைத் தயாரிக்க முடியும்.
![]() அசிட்டேட்டுடன் HCl புரியும் வினை மும்மாலிப்டினம்[3] சேர்மங்களுக்கு வழிசெய்வதாக முதலில் விவரிக்கப்பட்டது. ஆனால் விளைபொருளில் Mo2Cl4– 8 அயனி D4h சீரொழுங்குடனும், Mo—Mo பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.14 Å. ஆகவும் காணப்படுவதை அடுத்து நிகழ்ந்த படிக அமைப்பு ஆய்வியல் உறுதி செய்தது[4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia