ஈரானின் வரலாறு
ஈரானின் வரலாறானது (ஆங்கிலம்: History of Iran) (இது பாரசீகம் என்றும் கூட அறியப்படுகிறது) பெரிய ஈரான் என்று அழைக்கப்படும் பகுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஈரான் என்பது ஈரானிய மக்கள் மற்றும் ஈரானிய மொழிகளால், முதன்மையாக பாரசீகர்கள் மற்றும் பாரசீக மொழியால், குறிப்பிடத்தக்க அளவு குடியமர்வு அல்லது செல்வாக்கைக் கண்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு சமூக-பண்பாட்டு பகுதி ஆகும். இப்பகுதிக்கு மையமாக ஈரானியப் பீடபூமி உள்ளது. தற்போது இப்பீடபூமியானது நவீன கால ஈரானால் பெருமளவு பொதியப்பட்டுள்ளது. ஈரானிய வரலாற்றின் மிக கவனிக்கத் தக்க தாக்கமானது மேற்கே அனத்தோலியாவில் இருந்து, கிழக்கே சிந்துவெளி வரை விரிவடைந்துள்ளதை நம்மால் காண முடியும். இதில் லெவண்ட், மெசொப்பொத்தேமியா, காக்கேசியா, மற்றும் நடு ஆசியாவின் பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. வேறுபட்ட அளவுகளில் இந்தியா, சீனா, கிரேக்கம், உரோம் மற்றும் எகிப்து போன்ற பல பிற முதன்மையான நாகரிகங்களின் வரலாற்றுடன் இந்நாட்டின் வரலாறானது பகிரப்பட்டோ அல்லது கலந்தும் கூட உள்ளது. உலகின் மிகப் பழமையான தொடர்ந்து நீடித்திருக்கும் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றுக்குத் தாயகமாக ஈரான் உள்ளது. இந்நாட்டின் வரலாற்று ரீதியிலான மற்றும் நகர்ப்புறக் குடியிருப்புகளானவை பொ. ஊ. மு. 4,000-ஆம் ஆண்டிற்குக் காலமிடப்படுகின்றன.[1] ஈலாமியர் (ஈலாம் மற்றும் கூசித்தானில் உள்ளவர்கள்), காசிட்டு மக்கள் (குக்தேசுத்தில் உள்ளவர்கள்), குதியர்கள் (உலுரித்தானில் உள்ளவர்கள்), மற்றும் பிறகு பிற மக்களான உருமியா ஏரிக்கு அருகில் இருந்த உரர்தியர்கள் (ஒசுனவியே மற்றும் சர்தசுத்தில் உள்ளவர்கள்)[2][3][4][5] மற்றும் குர்திஸ்தானில் உள்ள மன்னேயர் (பிரான்சாக்ர், சாக்கேசு மற்றும் புக்கானில் உள்ளவர்கள்) ஆகியோருடன் பண்டைய அண்மைக் கிழக்கின் எஞ்சிய பகுதிகளுக்குள் ஈரானியப் பீடபூமியின் மேற்குப் பகுதிகளானவை ஒன்றிணைக்கப்பட்டன.[6][7][8][9][10][11][12][13][14] தன்னுடைய உலக வரலாற்றின் தத்துவம் குறித்த விரிவுரைகள் என்ற நூலில் செருமானிய தத்துவவாதி எகல் பாரசீகர்களை "முதல் வரலாற்று வாய்மையுடைய மக்கள்" என்று அழைக்கிறார்.[15] நீண்ட காலம் நீடித்திருக்கும் ஈரானியப் பேரரசானது இரும்புக் காலத்தின் போது மீடியாப் பேரரசின் எழுச்சியுடன் தொடங்கியதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அப்போது மீடியா இராச்சியத்தின் கீழ் ஒரு தேசமாக ஈரான் பொ. ஊ. மு. 7-ஆம் நூற்றாண்டில் ஒன்றிணைக்கப்பட்டது.[16] பொ. ஊ. மு. 550-இல் சைரசுவின் படையெடுப்புகளால் மீடியர்கள் புறந்தள்ளப்பட்ட நிலைக்கு ஆளாயினர். அகாமனிசியப் பேரரசை நிறுவியதன் மூலம் பாரசீகர்களை சைரசு அதிகாரத்திற்குக் கொண்டு வந்தார். பின் நிகழ்வாக நிகழ்ந்த சைரசுவின் படையெடுப்புகள் பாரசீக ஆட்சி எல்லையின் விரிவாக்கத்தைப் பெரும்பாலான மேற்கு ஆசியா மற்றும் பெரும்பாலான நடு ஆசியாவுக்கு விரிவடைய உதவின. சைரசுவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பகுதிகளை இறுதியாக வென்றனர். உலகம் அதுவரையில் கண்டிராத மிகப் பெரிய பேரரசை அமைத்தனர். பொ. ஊ. மு. 4-ஆம் நூற்றாண்டில் அகாமனிசியப் பேரரசானது பேரரசர் அலெக்சாந்தரின் மாசிடோனியப் பேரரசால் வெல்லப்பட்டது. முந்தைய அகாமனிசிய நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதி மீது செலூக்கியப் பேரரசு நிறுவப்படுவதற்கு அலெக்சாந்தரின் இறப்பு காரணமானது. இதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டில் பார்த்தியப் பேரரசின் எழுச்சியுடன் ஈரானியப் பீடபூமியில் கிரேக்க ஆட்சியானது முடிவுக்கு வந்தது. செலூக்கியர்களின் அனத்தோலியா, மெசொப்பொத்தேமியா மற்றும் நடு ஆசியக் உடைமைகளின் பெரும்பாலான பகுதிகளையும் கூட பார்த்தியப் பேரரசு வென்றது. 2-ஆம் நூற்றாண்டில் பார்த்தியர்களுக்குப் பின் சாசானியப் பேரரசு ஆட்சிக்கு வந்த அதே நேரத்தில், உரோம-பாரசீகப் போர்களால் இக்காலகட்டத்தின் பெரும்பாலான பகுதியானது குறிக்கப்பட்டாலும் கூட, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு ஈரான் தொடர்ந்து ஒரு முன்னணி சக்தியாகத் திகழ்ந்தது. 7-ஆம் நூற்றாண்டில் பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பானது ராசிதீன் கலீபகம் சாசானியப் பேரரசை இணைத்துக் கொள்வதையும், ஈரான் இசுலாமியமயமாக்கப்பட்டதன் தொடக்கத்தையும் கண்டது. அரேபியர், துருக்கியர், மற்றும் மங்கோலியர், மேலும் பலர் போன்ற அயல்நாட்டு சக்திகளால் தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவர்களைத் தங்கள் நாட்டுக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டதன் மூலம் ஈரானிய தேசிய அடையாளமானது தொடர்ந்து நிலைநாட்டப்பட்டது. ஒரு தனித்துவமான அரசியல் மற்றும் பண்பாட்டு அமைப்பை இந்நாடு உருவாக்குவதற்கு அனுமதியளித்தது. தொடக்க கால முசுலிம் படையெடுப்புகளானவை அந்நேரம் வரை ஈரானின் பெரும்பான்மை மற்றும் அதிகாரப்பூர்வ சமயமாக இருந்த சரதுசம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமான அதே நேரத்தில், உருவாகத் தொடங்கிய இசுலாமியப் பேரரசுகளுக்குள் ஈரானிய நாகரிகங்களின் முந்தைய சாதனைகளானவை உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டன. இசுலாமியப் பொற்காலத்தின் போது அவை விரிவாக்கப்பட்டன. பிந்தைய நடுக் காலங்கள் மற்றும் தொடக்க நவீன காலத்திற்குள்ளான காலத்தின் போது ஈரானியப் பீடபூமியின் பகுதிகள் மீது நாடோடிப் பழங்குடியினங்கள் தாக்குதல் ஓட்டம் நடத்தின. இப்பகுதி மீது எதிர்மறையான விளைவுகளை இவை ஏற்படுத்தின.[17] எனினும், 1501 வாக்கில் இந்நாடானது சபாவிய அரசமரபால் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. உண்மையான முசுலிம் படையெடுப்புகளின் காலத்திலிருந்து ஈரானின் வரலாற்றின் மிக திருப்பு முனையாக அமைந்த சமய ரீதியிலான மாற்றமாக சியா இசுலாமுக்கு ஈரானை மாற்றியதை சபாவியர் தொடங்கி வைத்தனர்.[18][19] ஈரான் மீண்டும் ஒரு முன்னணி உலக சக்தியாக, குறிப்பாக துருக்கியர்களால் ஆளப்பட்ட உதுமானியப் பேரரசுடனான சண்டைகளில் தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசுடன் ஈரான் சண்டையிடத் தொடங்கியது. உருசிய-பாரசீகப் போர்களின் முடிவில் உருசியா தென்காக்கேசியாவை இணைத்துக் கொண்டது.[20] சபாவிய காலமானது (1501–1736) ஈரான் மற்றும் மேற்குலகம் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள அறிஞர்களால் ஈரானிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக அதிகரித்து வந்த நிலையாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. 1501-இல் ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்புக் காலத்திலிருந்து அனைத்து ஈரானையும் ஆட்சி செய்த முதல் உள்நாட்டு அரசமரபாக சபாவிய அரசமரபானது உருவானது. எட்டரை நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு சுதந்திரமான அரசாங்கமும் இல்லாத, பெரும்பாலும் வெறும் ஒரு புவியியல் பகுதியாகவே ஈரான் திகழ்ந்தது. அரேபியர், துருக்கியர், மங்கோலியர் மற்றும் தாதர்கள் போன்ற பல்வேறு அயல்நாட்டு சக்திகளால் ஆளப்பட்டது. ஈரானிய வரலாறு மற்றும் இசுலாமில் ஒரு திருப்பு முனையாக பதின்மூன்றாம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட மங்கோலியப் படையெடுப்புகள் திகழ்ந்தன. வரலாற்று ரீதியிலான கலீபகத்தை மங்கோலியர்கள் அழித்தனர். ஆறு நூற்றாண்டுகளுக்கு இசுலாமிய உலகுக்கான ஒற்றுமையின் ஒரு குறியீடாக கலீபகம் திகழ்ந்தது. நீண்ட கால அயல்நாட்டு ஆட்சியின் போது ஈரானியர்கள் தங்களது தனித்துவமான பண்பாடு மற்றும் தேசிய அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். தங்களது அரசியல் விடுதலையை மீண்டும் பெற இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தினர்.[21] 1950-களில் ஈரானில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மொசாத்தேக்கின் அரசாங்கத்தை கூட்டுச்சதி மூலம் பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக்காவும் முடிவுக்குக் கொண்டு வந்தன. ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் தற்போதைய எதிரி மனப்பான்மைக்கு இதுவே காரணம் ஆகும். ஈரானிய முடியாட்சியானது 1979-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஈரானியப் புரட்சி வரை நீடித்திருந்தது.[22][23] அந்த ஆண்டு இந்நாடானது அதிகாரப்பூர்வமாக ஓர் இசுலாமியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்நாடு குறிப்பிடத்தக்க அளவு அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்நாட்டின் அரசியல் அமைப்பானது ஒரு முதன்மையான மறுகட்டமைப்புக்கு உள்ளாவதற்கு இசுலாமியக் குடியரசின் நிறுவுதலானது வழி வகுத்துள்ளது. அன்றிலிருந்து ஈரானின் அயல்நாட்டு உறவு முறைகளானவை பிராந்திய சண்டைகளால் வடிவம் பெற்றுள்ளன; ஈரான்-ஈராக் போரில் தொடங்கி, பல அரபு நாடுகளின் வழியாக இச்சண்டைகள் நடைபெறுகின்றன; இசுரேல், ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துடனான நிகழ்ந்து வரும் பதட்டங்கள்; ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். பன்னாட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுச் சவால்கள் உள்ள போதிலும், ஈரான் தொடர்ந்து பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு முக்கிய நாடாகத் திகழ்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம்பழைய கற்காலம்ஈரானில் தொடக்க கால தொல்லியல் பொருட்களானவை கசபுருத் மற்றும் கஞ்ச் பார் தளங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடு பழைய கற்காலத்தில் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னராகக் காலமிடப்பட்டவையாக இந்தத் தளங்கள் எண்ணப்படுகின்றன.[24] நியாண்டர்தால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மௌசுதேரிய கற்கருவிகளும் கூட கண்டெடுக்கப்பட்டுள்ளன.[25] நடு பழைய கற்காலத்திற்குக் காலமிடப்படும் நியாண்டர்தால்களின் மேற்கொண்ட பண்பாட்டு எச்சங்கள் எஞ்சியுள்ளன. இவை முதன்மையாக சக்ரோசு பகுதி மற்றும் குறைவான அளவில் நடு ஈரானில் கோபெக், கஞ்சி, பிசுதுன் குகை, தம்தமா, வர்வாசி, மற்றும் யப்தே குகை ஆகியவற்றில் காணப்படுகின்றன.[26] 1949-இல் ஒரு நியாண்டர்தால் ஆரை எலும்பானது அமெரிக்க மானுடவியலாளர் கார்லடன் எஸ். கூனால் பிசுதுன் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது.[27] மேல் பழைய கற்காலம் மற்றும் நடுக் கற்காலத்திற்கான ஆதாரங்களானவை கெர்மன்சா மற்றும் கோர்ரமாபாத் குகைகளையுடைய சக்ரோசு மலைத்தொடரிலிருந்து முதன்மையாகவும், பிரான்சாகர், அல்போர்சு மற்றும் நடு ஈரான் பகுதிகளில் உள்ள ஒரு வெகு சில எண்ணிக்கையிலான தளங்களிலும் இருந்து அறியப்படுகின்றன. இக்காலகட்டத்தின் போது மக்கள் பாறை ஓவியங்களை உருவாக்கத் தொடங்கினர்.[28][29] புதிய கற்காலம் முதல் செம்புக் காலம் வரைபொ. ஊ. மு. 8,000-ஆம் ஆண்டில் தோன்றிய சோகா போனத் (ஈலாமில் உள்ள தொடக்க கால கிராமம்) போன்ற குடியிருப்புகளுடன் சேர்த்து,[30][31] பொ. ஊ. மு. 10,000-ஆம் ஆண்டில் சோகா கோலன்[32][33] போன்ற தொடக்க கால வேளாண்மை சமுதாயங்களானவை மேற்கு ஈரானில் சக்ரோசு மலைத்தொடர் பகுதியிலும், அதைச் சுற்றியும் செழிக்கத் தொடங்கின.[34] இதே காலகட்டத்தில் மேற்கு ஈரானில் கஞ்ச் தரேவில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட களிமண் பாத்திரங்களும், மனித மற்றும் விலங்குக் களிமண் பொம்மைகளும் உருவாக்கப்பட்டன.[34] பல பிற பண்டைக்கால பொருட்களுக்கு மத்தியில் கெர்மான்சா மாகாணத்தில் தீப் சராப்பைச் சேர்ந்த 10,000 ஆண்டுகள் பழமையான மனித மற்றும் விலங்குப் பொம்மைகளும் கூட உள்ளன.[35] ஈரானின் தென்மேற்குப் பகுதியானது வளமான பிறை பிரதேசத்தின் பகுதியாக உள்ளது. இங்கு தான் மனித குலத்தின் முதல் முதன்மையான பயிர்களில் பெரும்பாலானவை சூசா (பொ. ஊ. மு. 4395 ஆண்டுகளுக்கு முன்னரே கூட சாத்தியமான வகையில் இருந்திருக்கக் கூடிய ஒரு குடியிருப்பானது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது)[36]:46–47 மற்றும் சோகா மிசு (பொ. ஊ. மு. 6,800-ஆம் ஆண்டுக்குக் காலமிடப்படுகிறது)[37] போன்ற இடங்களில் பயிர் செய்யப்பட்டன. சக்ரோசு மலைகளில்[38] அகழ்வாய்வு செய்யப்பட்ட 7,000 ஆண்டுகள் பழமையான ஜாடிகள் (பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவை தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன) மற்றும் தீப் சியால்க் போன்ற 7,000 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளின் சிதிலங்கள் ஆகியவை இவற்றுக்கான மேற்கொண்ட ஆதாரங்களாக உள்ளன. கஞ்ச் தரே மற்றும் கோட்பாட்டு ரீதியிலான சயந்தே ஆற்றுப் பண்பாடு ஆகியவை இரு முதன்மையான புதிய கற்கால ஈரானியக் குடியிருப்புகளாக உள்ளன.[39] வெண்கலக் காலம்![]() அண்டைப் பகுதிகளான காக்கேசியா மற்றும் அனத்தோலியாவுக்குள்ளும் விரிவடைந்திருந்த குரா-அராக்சசு பண்பாட்டின் (அண். 3,400 பொ. ஊ. மு.—அண். 2,000 பொ. ஊ. மு.) ஒரு பகுதியாக நவீன கால வடமேற்கு ஈரானின் பகுதிகளானவை திகழ்ந்தன.[40][41] மத்திய கிழக்கில் தொல்பொருட்கள் மிக அதிகமாகக் காணப்படும் தொல்லியல் தளங்களில் ஈரானும் ஒன்றாகும். சிரோப்தில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளானவை பொ. ஊ. மு. நான்காம் ஆயிரமாண்டைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வழி வகுத்துள்ளது.[42] விலங்குகள், தொன் மரபியல் உருவங்கள் மற்றும் கட்டடக்கலை உருப்படிவங்கள் ஆகியவற்றின் அதிகப்படியாக தனித்துவமான செதுக்குருவங்களால் அழகுபடுத்தப்பட்ட ஒரு பெருமளவிலான பொருட்கள் உள்ளன. பொருட்களும், அதில் காணப்படும் உருவங்களும் தனித்துவமானவையாகக் கருதப்படுகின்றன. இதில் பெரும்பாலான பொருட்களானவை ஒரு சாம்பல்-பச்சை மென்மையான கல்லாகிய குளோரைடிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன; பிற பொருட்கள் செப்பு, வெண்கலம், சுடுமண் பாண்டம், மற்றும் லாபிசு லசுலி போன்ற கற்களிலிருந்தும் கூட உருவாக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வு தளங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய அகழ்வாய்வுகளானவை உலகின் மிக தொடக்க காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளன. இவை மெசொப்பொத்தேமிய கல்வெட்டுகளின் காலத்தையும் விட முந்தியவையாகும்.[43][44] தொடக்க இரும்பு காலத்தின் போது ஈரானிய மக்களின் தோற்றத்துக்கு முன்னர் ஈரானியப் பீடபூமியில் ஏராளமான பிற பண்டைக் கால நாகரிகங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. தொடக்க வெண்கலக் காலமானது அண்மைக் கிழக்கில் நகரமயமாக்கல் வளர்ச்சியடைந்து ஒருங்கிணைக்கப்பட்ட நகர அரசுகளாக மாறியதையும், எழுத்து வடிவம் உருவாக்கப்படுவதையும் (உரூக் காலம்) கண்டது. அதே நேரத்தில், வெண்கலக் கால ஈலாமானது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளது. அது ஆதி-ஈலாமிய எழுத்து முறை ஆகும். சிந்துவெளி வரிவடிவத்தைப் போல இதுவும் இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளது. ஈலாம் சார்ந்த சுமேர் பதிவுகளானவை அதிகமாகக் காணப்படுவதில்லை. உருசிய வரலாற்றாளர் இகோர் எம். தியாகேனோபின் கூற்றுப்படி ஈரானின் நவீன கால குடியிருப்புவாசிகள் முதன்மையாக இந்திய-ஐரோப்பிய குழுக்கள் சாராத வழித்தோன்றல்கள் ஆவர். மிக குறிப்பாக ஈரானியப் பீடபூமின் ஈரானியருக்கு முந்தைய குடியிருப்புவாசிகள் இவர்கள் ஆவர்: "இவர்களே ஈரானியப் பீடபூமியின் உண்மையான குடியிருப்புவாசிகள் ஆவர். ஐரோப்பாவின் ஆதி-இந்திய-ஐரோப்பிய பழங்குடியினங்கள் ஈரானியப் பீடபூமியின் குடியிருப்புவாசிகள் கிடையாது. உலகின் இயற்பியல் ரீதியிலான அறிவில், ஆதி-இந்திய-ஐரோப்பிய குழுக்கள் அல்லாத இவர்களே தற்கால ஈரானியர்களின் முன்னோர்கள் ஆவர்."[45] தொடக்க இரும்புக் காலம்![]() ![]() புது அசிரியப் பேரரசின் வளர்ச்சியுடன் பதிவுகளானவை மிக புரிந்து கொள்ளத் தக்கவையாக மாறத் தொடங்குகின்றன. ஈரானியப் பீடபூமியிலிருந்து வந்த ஊடுருவல்களை இவை பதிவு செய்துள்ளன. பொ. ஊ. மு. 20-ஆம் நூற்றாண்டிலேயே ஈரானியப் பீடபூமிக்குப் பழங்குடியினங்களானவை பான்டிக்-காசுப்பியப் புல்வெளியிலிருந்து வந்தன. ஈரானியப் பீடபூமிக்கு ஈரானியர்களின் வருகையால் ஈலாமியர்கள் தங்களது பேரரசின் ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இறுதியாக ஈலாம், கூசித்தான் மற்றும் அண்டைப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இதுவே பிறகு ஈலாமின் எல்லைகளுடன் ஒப்பிடக் கூடியதாக உருவானது.[47] பகுமான் பிரூசுமந்தி என்பவர் தெற்கு ஈரானியர்கள் பீடபூமியில் வாழ்ந்து வந்த ஈலாமிய மக்களுடன் அநேகமாகக் கலந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.[48] பொ. ஊ. மு. முதலாம் ஆயிரமாண்டின் நடுப்பகுதி வாக்கில் மீடியர், பாரசீகர் மற்றும் பார்த்தியர் ஆகியோர் ஈரானியப் பீடபூமியில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவருமே எஞ்சிய அண்மைக் கிழக்கைப் போலவே மீடியர்களின் வளர்ச்சி வரை அசிரிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தனர். பொ. ஊ. மு. முதலாம் ஆயிரமாண்டின் முதல் பாதியில் தற்போதைய ஈரானிய அசர்பைசானின் பகுதிகளானவை உரார்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. செவ்வியல் பண்டைக் காலம்மீடியா, அகாமனிசியப் பேரரசுகள் (678–330 பொ. ஊ. மு.)
பொ. ஊ. மு. 646-இல் அசிரிய மன்னனான அசூர்பனிபால் சூசாவைச் சூறையாடினார். இப்பகுதியில் ஈலாமிய முதன்மை நிலையை இது முடிவுக்குக் கொண்டு வந்தது.[49] 150 ஆண்டுகளுக்கும் மேலாக அருகிலிருந்த வடக்கு மெசொப்பொத்தேமியாவின் அசிரிய மன்னர்கள் மேற்கு ஈரானின் மீடியாப் பழங்குடியினங்களை வெல்ல விரும்பினர்.[50] அசிரியாவிடமிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் மேற்கு ஈரானியப் பீடபூமியிலிருந்த சிறிய இராச்சியங்கள் அதிகரித்து வந்த நிலையாக பெரிய மற்றும் மிக மையப்படுத்தப்பட்ட அரசுகளாக ஒன்றிணைந்தன.[49] ![]() பொ. ஊ. மு. 7-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் மீடியர்கள் தங்களது சுதந்திரத்தைப் பெற்றனர். தியோசசுவால் ஒன்றிணைக்கப்பட்டனர். பொ. ஊ. மு. 612-இல் தியோசசுவின் பேரனான சியாக்சரசு மற்றும் பாபிலோனிய மன்னனான நெபுலேசர் ஆகியோர் அசிரியா மீது படையெடுத்தனர். அதை முற்றுகையிட்டு இறுதியாக அசிரிய தலைநகரான நினிவேயை அழித்தனர். இது புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமானது.[51] உரார்துவும் பின்னர் வெல்லப்பட்டு மீடியர்களால் கலைக்கப்பட்டது.[52][53] ஈரானை ஒரு தேசம் மற்றும் பேரரசாகத் தொடங்கியதற்குக் காரணமானவர்களாக மீடியர் குறிப்பிடப்படுகின்றனர். முதல் ஈரானியப் பேரரசை இவர்கள் நிறுவினர். மீடியர்கள் மற்றும் பாரசீகர்களின் ஓர் ஒன்றிணைந்த பேரரசான அகாமனிசியப் பேரரசை (அண். 550–330 பொ. ஊ. மு.) சைரசு நிறுவும் வரை அக்காலத்தில் மிகப் பெரிய பேரரசாக இது திகழ்ந்தது. ![]() பதிலுக்கு பேரரசர் சைரசு மீடிய, லிடிய மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகளைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். அசிரியாவைக் காட்டிலும் மிகப் பெரிய ஒரு பேரரசை உருவாக்கினார். மிக கனிவான கொள்கைகளின் மூலம் பாரசீக ஆட்சிக்கு தன்னுடைய குடிமக்களை இணங்க வைக்க இவரால் முடிந்தது. இவரது பேரரசு மிக நீண்ட காலத்திற்கு நீடித்திருந்தது இதில் ஒரு விளைவாகும். அசிரிய மன்னனைப் போலவே பாரசீக மன்னனும் "மன்னர்களின் மன்னர்", xšāyaθiya xšāyaθiyānām (நவீன பாரசீகத்தில் ஷாஹன்ஷா) என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். இப்பட்டத்தைக் கிரேக்கர்கள் மெகாசு பசிலெயசு என்று அறிந்திருந்தனர். சைரசுவின் மகனான இரண்டாம் காம்பிசெஸ் இப்பகுதியின் கடைசி முதன்மையான சக்தியான பண்டைய எகிப்தை வென்றார். எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் வீழ்ச்சியடைவதற்கு இது காரணமானது. எகிப்திலிருக்கும் போதோ அல்லது எகிப்தை விட்டுப் புறப்படும் போதோ இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதன் காரணமாக பண்டைய எகிப்தியக் கடவுள்களிடம் பக்தியின்மை காரணமாக இவர் மரணமடைந்தார் என கதைகள் உருவாயின. இதை எரோடோட்டசு குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் காம்பிசெசின் இறப்பிற்குப் பிறகு முறைமை வாய்ந்த அகாமனிசிய முடியரசனான பர்தியாவைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விட்டு அகாமனிசிய அரியணையில் தாரியசு அமர்ந்தார். பிறகு தனது இராச்சியம் முழுவதும் கிளர்ச்சிகளை ஒடுக்கினார். ஒரு வெற்றியாளராக, அகாமனிசியப் பேரரசின் ஒரு துணை வழித் தோன்றலான தன்னுடைய உறுப்பினர் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்வதற்கான தனது கோரிக்கையை தாரியசு கொண்டிருந்தார். தாரியசின் முதல் தலைநகரமானது சூசாவில் அமைந்திருந்தது. பெர்சப்பொலிசில் ஒரு கட்டமைப்புத் திட்டத்தை இவர் தொடங்கினார். நைல் மற்றும் செங்கடலுக்கு இடையில் ஒரு கால்வாயை இவர் மீண்டும் கட்டமைத்தார். நவீன சுயஸ் கால்வாய்க்கு ஒரு முன்னோடி இதுவாகும். விரிவான சாலை அமைப்பை இவர் மேம்படுத்தினார். இவரது ஆட்சிக் காலத்தின் போது தான் அரச சாலை (வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) குறித்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. சீரான இடைவெளிகளுடன் கூடிய நிலையங்களுடன் சூசாவிலிருந்து சர்திசு வரையிலும் முழுவதுமாக அமைந்திருந்த ஒரு மிகப் பெரிய நெடுஞ்சாலை இந்த அரச சாலையாகும். தாரியசுக்குக் கீழ் முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தரிக் (தங்க நாணயம்) மற்றும் செகல் (வெள்ளி நாணயம்) ஆகிய வடிவங்களில் நாணயங்களானவை தரப்படுத்தப்பட்டன (நாணய முறையானது ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய காலத்தில் லிடியாவில் அண். பொ. ஊ. மு. 660-இல் உருவாக்கப்பட்டது. ஆனால், தரப்படுத்தப்படவில்லை.).[54] தாரியசின் ஆட்சியின் கீழ் நிர்வாகத் திறனானது அதிகரித்தது. பழைய பாரசீக மொழியானது அரசின் கல்வெட்டுகளில் தோன்றுகிறது. ஆப்பெழுத்தின் ஒரு தனிச் சிறப்பிற்குரிய பின்பற்றப்பட்ட வடிவத்தில் இது எழுதப்பட்டுள்ளது. பேரரசர் சைரசு மற்றும் தாரியசுக்குக் கீழ் அக்காலம் வரை மனித வரலாற்றிலேயே அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய பேரரசாக பாரசீகப் பேரரசு இறுதியாக உருவானது. அறியப்பட்ட உலகத்தின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து ஆட்சி செய்தது.[55] மேலும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் பரவியிருந்தது. இப்பேரரசு உருவாக்கப்பட்டதும் கூட இப்பேரரசின் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. உலகின் முதல் வல்லரசாக பாரசீகப் பேரரசு திகழ்ந்தது.[56][57] பிற பண்பாடுகள் மற்றும் சமயங்களுக்கு சகிப்புத் தன்மை மற்றும் மரியாதை வழங்கிய ஒரு மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாக இது அமைந்திருந்தது.[58] ![]() பொ. ஊ. மு. 6-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் தாரியசு தன்னுடைய ஐரோப்பியப் போர்ப் பயணத்தைத் தொடங்கினார். இப்பயணத்தில் இவர் பயோனியர்களைத் தோற்கடித்தார். திரேசுவை வென்றார். அனைத்து கடற்கரை கிரேக்க நகரங்களையும் அடிபணிய வைத்தார். தன்யூபு ஆற்றைச் சுற்றியிருந்த ஐரோப்பிய சிதியர்களைத் தோற்கடித்தார்.[59] பொ. ஊ. மு. 512/511-இல் மாசிடோன் பாரசீகத்திற்குக் குத்தகை இராச்சியமானது.[59] பொ. ஊ. மு. 499-இல் மிலீட்டசில் ஒரு கிளர்ச்சிக்கு ஏதென்சு தனது ஆதரவைக் கொடுத்தது. சார்திசு சூறையாடப்படுவதில் இது முடிவடைந்தது. கிரேக்க முதன்மை நிலத்திற்கு எதிராக அகாமனிசியப் படையெடுப்பு ஏற்படுவதற்கு இது காரணமானது. இவை கிரேக்க பாரசீகப் போர்கள் என்று அறியப்படுகின்றன. பொ. ஊ. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இவை நடைபெற்றன. ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான போர்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. கிரேக்கம் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பில் பாரசீகத் தளபதி மார்தோனியசு திரேசை மீண்டும் அடிபணிய வைத்தார். பாரசீகத்தின் ஒரு முழுமையான பகுதியாக மாசிடோனை ஆக்கினார்.[59] எனினும், இப்போரானது இறுதியாக பாரசீகத்தின் தோல்வியில் முடிந்தது. தாரியசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த முதலாம் செர்கசு கிரேக்கம் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பைத் தொடங்கினார். போரின் ஒரு முக்கியமான கட்டத்தில் கிரேக்க முதன்மை நிலத்தின் சுமார் பாதி பகுதியானது பாரசீகர்களால் தாக்குதல் ஓட்டத்திற்கு உள்ளானது. கொரிந்தின் பூசந்திக்கு வடக்கே உள்ள அனைத்து நிலப்பரப்புகளும் இதில் அடங்கும்.[60][61] எனினும், இது ஒரு கிரேக்க வெற்றியிலும் கூட முடிவடைந்தது. பிளாட்டீயா மற்றும் சலாமிசு யுத்தங்களைத் தொடர்ந்து கிரேக்க வெற்றியில் முடிவடைந்தது. இந்த யுத்தங்களில் ஐரோப்பாவில் தாங்கள் காலூன்றிய இடங்களைப் பாரசீகர்கள் இழந்தனர். இறுதியாக அங்கிருந்து பின் வாங்கினர்.[62] கிரேக்க பாரசீகப் போர்களின் போது பாரசீகர்கள் முக்கிய நிலப்பகுதி அனுகூலங்களைப் பெற்றனர். முதலில் பொ. ஊ. மு. 480 மற்றும் மீண்டும் பொ. ஊ. மு. 479 ஆகிய ஆண்டுகளில் அவர்கள் இரு முறை ஏதென்சைக் கைப்பற்றித் தரைமட்டமாக்கினர். எனினும், கிரேக்கர்களின் ஒரு தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு பாரசீகர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வாறாக, மாசிடோனியா, திரேசு மற்றும் ஐயோனியா ஆகிய இடங்களின் கட்டுப்பாட்டை பாரசீகர்கள் இழந்தனர். ஏதென்சின் புதிதாக உருவாக்கப்பட்ட டெலியன் கூட்டணிக்குக் கீழ் ஏராளமான கிரேக்க நகர அரசுகளுடன் சேர்ந்து இரண்டாவது பாரசீகப் படையெடுப்பை கிரேக்கமானது வெற்றிகரமாக முறியடித்ததற்குப் பிறகு சண்டையானது பல தசாப்தங்களுக்கு தொடர்ந்தது. பொ. ஊ. மு. 449-இல் கால்லியாசு அமைதி உடன்பாட்டுடன் கிரேக்க பாரசீகப் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. பொ. ஊ. மு. 404-இல் இரண்டாம் தாரியசின் இறப்பைத் தொடர்ந்து அமியுர்தயுசின் கீழான எகிப்து கிளர்ச்சியில் ஈடுபட்டது. பொ. ஊ. மு. 343 வரை எகிப்தை மீண்டும் வெல்லும் பாரசீக முயற்சிகளை பிந்தைய பார்வோன்கள் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினர். பொ. ஊ. மு. 343-ஆம் ஆண்டு எகிப்து மூன்றாம் அர்தசெராக்சசால் மீண்டும் வெல்லப்பட்டது. ![]() பெர்சப்பொலிசின் ஓர் அகல் பரப்புக் காட்சி கிரேக்க வெற்றியும், செலூக்கியப் பேரரசும் (312 –248 பொ. ஊ. மு.)![]() 334 முதல் பொ. ஊ. மு. 331 வரை பேரரசர் அலெக்சாந்தர் மூன்றாம் தாராவை கிரானிகசு, இசுசு மற்றும் கெளகமேலா ஆகிய இடங்களில் தோற்கடித்தார். பொ. ஊ. மு. 331 வாக்கில் அகாமனிசியப் பேரரசை வேகமாக வென்றார். அவரது இறப்பிற்குப் பிறகு அலெக்சாந்தரின் பேரரசானது உடனடியாகச் சிதைவடைந்தது. அலெக்சாந்தரின் தளபதியான செலூக்கஸ் நிக்காத்தர் ஈரான் மற்றும் மெசொப்பொத்தேமியா, பிறகு சிரியா மற்றும் அனத்தோலியாவின் கட்டுப்பாட்டைப் பெற முயன்றார். இவரது பேரரசானது செலூக்கியப் பேரரசு என்று அழைக்கப்படுகிறது. இவர் பொ. ஊ. மு. 281-ஆம் ஆண்டு தாலமி கெரவுனோசால் கொல்லப்பட்டார். பார்த்தியப் பேரரசு (248 பொ. ஊ. மு.–224 பொ. ஊ.)![]() வடமேற்கு ஈரானிய மக்களின் ஒரு குழுவான பார்த்தியர்களால் ஆளப்பட்ட பார்த்தியப் பேரரசானது அர்சசிய அரசமரபின் ஆட்சி எல்லையாகும். பார்த்தியாவை பர்னி பழங்குடியினம் வென்றதற்குப் பிறகு மற்றும் பொ. ஊ. மு. மூன்றாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் செலூக்கியப் பேரரசு தோற்கடித்ததற்குப் பிறகு அர்சசிய அரசமரபானது ஈரானியப் பீடபூமியை மீண்டும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யத் தொடங்கியது. அண். 150 பொ. ஊ. மு. மற்றும் 224 பொ. ஊ.-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த அரசாங்கமானது மெசொப்பொத்தேமியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கிழக்கு அரேபியாவை உள்ளிழுத்துக் கொண்டது. உரோமைப் பேரரசின் கிழக்கிலிருந்த முதன்மையான எதிரியாக பார்த்தியா திகழ்ந்தது. கப்படோசியா நகரத்தைத் (நடு அனத்தோலியா) தாண்டி உரோமின் விரிவாக்கத்தை இது தடுத்து வைத்தது. பார்த்திய இராணுவங்களானவை இரு வகை குதிரைப் படைகளைக் கொண்டிருந்தன: கதபிரக்துகள் எனும் கனரக ஆயுதங்களையும், கவசங்களையும் உடைய குதிரைப்படை, மற்றும் இலகுரக ஆயுதங்களையுடைய, ஆனால் உயர் நகரும் திறன் உடைய குதிரை வில்லாளர்கள். கனரக காலாட் படையைச் சார்ந்திருந்த உரோமானியர்களைப் பொறுத்த வகையில் பார்த்தியர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு மிகக் கடினமானவர்களாகத் திகழ்ந்தனர். ஏனெனில், காலட் படையினரை விட பார்த்தியர்களின் இருவகை குதிரைப்படையும் மிக வேகமானவையாகவும், அதிக நகரும் திறனை உடையவையாகவும் திகழ்ந்தன. பார்த்திய குதிரைப் படையினரால் பயன்படுத்தப்பட்ட பார்த்திய எய்வு எனும் போர் முறையானது உரோமானிய வீரர்களுக்கு மிகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. கர்ரே யுத்தத்தில் உரோமானியர்கள் நொறுக்கப்பட்டு தோல்வியடைந்ததில் ஒரு திருப்பு முனையாக இந்த ஆயுதம் நிரூபித்தது. மற்றொரு புறம், பார்த்தியர்கள் முற்றுகைப் போர் முறையில் திறனற்றவர்களாக இருந்ததால் வெல்லப்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது அவர்களுக்குக் கடினமானதாக இருந்தது. இந்தப் பலவீனங்கள் காரணமாக உரோமானியர்களாலோ அல்லது பார்த்தியர்களாலோ ஒருவர் மற்றொருவரின் நிலப்பரப்பை முழுவதுமாக இணைத்துக் கொள்வது என்பது இயலாததாக இருந்தது. கிழக்கிலிருந்த பெரும்பாலான பேரரசுகளை நீண்ட காலமாக, ஐந்து நூற்றாண்டுகளுக்கு பார்த்தியப் பேரரசு நீடித்திருந்தது. இப்பேரரசின் முடிவானது இறுதியாக பொ. ஊ. 224-ஆம் ஆண்டு வந்தது. அப்போது பேரரசின் அமைப்பானது தளர்வுற்றது. பேரரசின் குத்தகை மக்களில் ஒருவரான சாசானியர்களுக்கு கீழான பாரசீகர்களால் கடைசி பார்த்திய மன்னன் தோற்கடிக்கப்பட்டார். எனினும், ஆர்மீனியா, ஐபீரியா மற்றும் காக்கேசிய அல்பேனியா ஆகிய பகுதிகளில் பின் வந்த நூற்றாண்டுகளில் அர்சசிய அரசமரபானது தொடர்ந்து நீடித்திருந்தது. இவை அனைத்துமே ஒரே பெயரையுடைய இந்த அரசமரபின் பிரிவுகள் ஆகும். சாசானியப் பேரரசு (224–651 பொ. ஊ.)![]() சாசானியப் பேரரசின் முதல் ஷாவான முதலாம் அர்தசிர் நாட்டைப் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் சீர்திருத்தத் தொடங்கினார். 400-க்கும் மேற்பட்ட ஆண்டு காலத்திற்குப் பிறகு இவர்களது அண்டை நாட்டு எதிரிகளான உரோமானிய மற்றும் பைசாந்தியப் பேரரசுகளுடன் சேர்த்து ஈரான் மீண்டும் ஒரு முறை உலகின் முன்னணி சக்திகளில் ஒன்றாக உருவானது.[63][64] இப்பேரரசின் நிலப்பரப்பானது அதன் உச்சபட்ச பரபரப்பில் நவீன கால ஈரான், ஈராக்கு, அசர்பைசான், ஆர்மீனியா, சார்சியா, அப்காசியா, தாகெஸ்தான், லெபனான், யோர்தான், பாலத்தீனம், இசுரேல் ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளையும், ஆப்கானித்தான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளையும், பாக்கித்தான், நடு ஆசியா, கிழக்கு அரேபியாவின் பகுதிகளையும், எகிப்தின் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. சாசானியப் பேரரசின் காலத்தில் பெரும்பாலான காலமானது தொடர்ச்சியாக நடைபெற்ற பைசாந்திய-சாசானியப் போர்களில் மூழ்கியிருந்தது. உரோம-பார்த்தியப் போர்களின் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியிருந்த உரோம-பாரசீகப் போர்களின் ஒரு தொடர்ச்சி இதுவாகும். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட போரானது மனித வரலாற்றில் மிக நீண்ட காலம் நீடித்திருந்த சண்டையாகத் திகழ்கிறது. தங்களுக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களான பார்த்தியர்களாலும், உரோமானியர்களாலும் சண்டையிடப்பட்ட இந்தப் போர் பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்தப் போரில் கடைசி உரோம-பாரசீகப் போரானது ஏழாம் நூற்றாண்டில் சண்டையிடப்பட்டது. 260-இல் எதேசா யுத்தத்தில் பாரசீகர்கல் உரோமானியர்களைத் தோற்கடித்தனர். பேரரசர் வலேரியன் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் பாரசீகர்களிடம் கைதியாகக் கழித்தார். இதற்கு முன்னர் கிழக்கு அரேபியாவானது வெல்லப்பட்டது. இரண்டாம் கோசுரோவின் ஆட்சிக் காலத்தில் (590-628) எகிப்து, யோர்தான், பாலத்தீனம் மற்றும் லெபனான் ஆகியவையும் இப்பேரரசுக்குள் இணைக்கப்பட்டன. சாசானியர்கள் தங்களது பேரரசை எரான்ஷாஹர் ("ஆரியர்களின் மேலாட்சி", அதாவது ஈரானியர்களுடைய மேலாட்சி) என்றழைத்தனர்.[65] உரோமைப் பேரரசுடனான தோராயமாக சுமார் 600 ஆண்டு கால சண்டைக்குப் பிறகு ஈரானிய வரலாற்றில் ஒரு பகுதி பின் வந்தது. இக்காலத்தின் போது அனத்தோலியா, மேற்கு காக்கேசியா (முதன்மையாக லசிகா மற்றும் ஐபீரிய இராச்சியம்; நவீன கால சார்சியா மற்றும் அப்காசியா), மெசொப்பொத்தேமியா, ஆர்மீனியா மற்றும் லெவண்ட் தாகிய பகுதிகளில் செல்வாக்கிற்காக சாசானிய மற்றும் உரோமானிய-பைசாந்திய இராணுவங்கள் சண்டையிட்டன. முதலாம் ஜஸ்டினியனின் ஆட்சியின் கீழ் சாசானியருக்குத் திறை செலுத்துவது என்ற ஒரு அசௌகரிய உணர்வுடைய அமைதியுடன் போர் முடிவுக்கு வந்தது. எனினும், பைசாந்தியப் பேரரசர் மௌரிசு பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஒரு முறைமையாகக் கொண்டு சாசானியர்கள் பைசாந்தியப் பேரரசை மீண்டும் தாக்கினர். பல அனுகூலங்களைப் பெற்றதற்குப் பிறகு இசுசு, கான்ஸ்டான்டினோபில் மற்றும் இறுதியாக நினேவே ஆகிய இடங்களில் சாசானியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இது அமைதிக்குக் காரணமானது. இறுதிப் போரான 602-628 ஆம் ஆண்டின் பைசாந்திய-சசானியப் போரின் மூலமாக 700 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த உரோம-பாரசீகப் போர்கள் முடிவுக்கு வந்தன. கடைசிப் போரானது பைசாந்திய தலைநகரான கான்ஸ்டான்டினோபிலே முற்றுகையிடப்படுவதையும் உள்ளடக்கியிருந்தது. இப்போரானது பாரசீகர்களைச் சோர்வடைய வைத்திருந்தது. பின்னர் படையெடுத்து வந்த முசுலிம் படைகளிடம் கில்லாவில் (தற்கால ஈராக்கு) நடந்த அல்-கதிசிய்யா யுத்தத்தில் (632) பாரசீகர்கள் தோல்வியடைந்தனர். பிந்தைய பண்டைக் காலத்தின் நளம் முழுவதையும் உள்ளடக்கியிருந்த சாசானிய சகாப்தமானது ஈரானில் மிக முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுக் காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் மீதும் ஒரு முதன்மையான தாக்கத்தை இது ஏற்படுத்தியது. பல வழிகளில், பாரசீக நாகரிகத்தின் மிக உயர்ந்த சாதனையை சாசானிய காலமானது கண்டது. இசுலாமைப் பின்பற்றுவதற்கு முன்னர் கடைசி மிகப் பெரிய ஈரானியப் பேரரசை இது உள்ளடக்கியிருந்தது. சாசானிய காலங்களின் போது உரோமானிய நாகரிகம் மீது பாரசீகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.[66] சாசானியர்களின் பண்பாட்டுத் தாக்கமானது பேரரசின் நிலப்பரப்பு எல்லைகளைத் தாண்டியும் விரிவடைந்திருந்தது. மேற்கு ஐரோப்பா,[67] ஆப்பிரிக்கா,[68] சீனா மற்றும் இந்தியா[69] ஆகிய பகுதிகளையும் அடைந்தது. ஐரோப்பிய மற்றும் ஆசிய நடுக்காலக் கலை ஆகிய இரு கலைகளின் உருவாக்கத்திலும் ஒரு முக்கியமான பங்கையும் இது ஆற்றியது.[70] இந்தத் தாக்கமானது முசுலிம் உலகத்திற்குள்ளும் கொண்டு செல்லப்பட்டது. இந்த அரசமரபின் தனித்துவமான மற்றும் உயர்குடியினப் பண்பாடானது ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்பு மற்றும் அழிவை ஒரு பாரசீக மறுமலர்ச்சியாக மாற்றமடையச் செய்தது.[67] பிற்காலத்தில் இசுலாமியப் பண்பாடு, கட்டடக்கலை, எழுத்து மற்றும் நாகரிகத்திற்கான பிற பங்களிப்புகளில் பெரும்பாலானவை சாசானியப் பாரசீகர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அகண்ட முசுலிம் உலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.[71] ![]() எராக்ளியசின் இராணுவம் மற்றும் இரண்டாம் கோசுரோவுக்குக் கீழான பாரசீகர்களுக்கு இடையிலான யுத்தம். ஓவியர் பியெர்ரோ தெல்லா பிரான்செசுகாவின் சுவர் ஓவியம். ஆண்டு அண். 1452. நடுக் காலம்தொடக்க இசுலாமியக் காலம்பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு (633–651)![]() முகம்மதுவுக்குக் கீழான விரிவாக்கம், 622–632 இராசிதுன் கலீபகத்தின் கீழான விரிவாக்கம், 632–661 உமய்யா கலீபகத்தின் கீழான விரிவாக்கம், 661–750 633-இல் சாசானிய மன்னனான மூன்றாம் எசுதகர்து ஈரானை ஆண்டு கொண்டிருந்த நேரத்தில், சாசானியப் பேரரசானது ஒரு குருதி தோய்ந்த உள்நாட்டுப் போரில் மூழ்கியதற்குப் பிறகு அந்நாடு மீது இராசிதுன் கலீபா உமறு தலைமையிலான முசுலிம்கள் படையெடுத்தனர். கரேன் குடும்பத்தின் மன்னனான தினார் மற்றும் குராசானின் பிந்தைய கனரங்கியர்கள் போன்ற பல ஈரானிய உயர் குடியினரும், குடும்பங்களும் தங்களது சாசானிய மேல் பிரபுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு முதன்மையான தளபதிகளான பக்ரம் சோபின் மற்றும் சகர்பராசு ஆகியோரின் கீழான மிகிரன் குடும்பமானது சாசானிய அரியணைக்கு உரிமை கோரினாலும், அரேபியர்களுக்கு எதிரான சாசானியர்களது போராட்டத்தின் போது சாசானியர்களுக்கு அம்மன்னர்கள் தொடர்ந்து விசுவாசமாக இருந்தனர். ஆனால் மிகிரர்கள் இறுதியாக தங்களது சொந்த உறவினர்களான இசுபகுபுதான் குடும்பத்தினரால் துரோகம் இழைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர். இசுபகுபுதான் குடும்பமானது தங்களது தலைவர் பரூக்சாத்தின் கீழ் செயல்பட்டனர். பரூக்சாத் மூன்றாம் எசுதகர்துவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். மூன்றாம் எசுதகர்து ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குத் தப்பியோடிக் கொண்டிருந்தார். 651-ஆம் ஆண்டு மெர்வில் இவரைத் துரத்தி வந்த ஓர் உள்ளூர் ஆலையாளர் இவரைக் கொன்றார்.[72] 674 வாக்கில் முசுலிம்கள் குராசானை வென்றிருந்தனர் (இப்பகுதியானது நவீன ஈரானிய குராசான் மாகாணம் மற்றும் நவீன ஆப்கானித்தான், மற்றும் திரான்சாக்சியானாவின் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது). உமய்யா சகாப்தம்651-இல் சாசானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு உமய்யா கலீபகத்தின் அரேபியர்கள் பல பாரசீகப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். குறிப்பாக, நிர்வாக மற்றும் அரசவை நடத்தைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அரேபிய மாகாண ஆளுநர்களானவர்கள் பாரசீகமயமாக்கப்பட்ட அரமேயர்களாகவோ அல்லது பாரசீக இனத்தவர்களாகவோ திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டின் முடிவில் அரபி பின்பற்றப்படும் வரை கலீபகத்தின் அலுவல்பூர்வ வணிக மொழியாகப் பாரசீகமானது தொடர்ந்து இருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.[73] 692-இல் தலைநகரம் திமிஷ்குவில் நாணயங்கள் அச்சிடப்படத் தொடங்கிய போது இவ்வாறான நிலை இருந்தது. புதிய இசுலாமிய நாணயங்களானவை சாசானிய நாணயங்களின் (மேலும் பைசாந்திய நாணயங்கள்) ஒத்த படிவங்களிலிருந்து பரிணமித்திருந்தன. நாணயங்களில் இருந்த பகலவி எழுத்து முறையானது அரபு எழுத்து முறையால் இடமாற்றம் செய்யப்பட்டது. எனினும், ஈரானின் அனைத்து பகுதிகளும் அரேபியக் கட்டுப்பாட்டின் கீழ் இன்னும் வரவில்லை. தய்லம் பகுதியானது தய்லமியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அதே நேரத்தில், தபரிசுதானானது தபுயியர் மற்றும் பதுசுபனியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தமவந்த் மலைப்பகுதியானது தமவந்தின் மசுமுகன்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இப்பகுதிகள் மீது அரேபியர்கள் பல முறை படையெடுத்தனர். ஆனால், இப்பகுதிகளின் அடைய இயலாத இட அமைப்பு காரணமாக தீர்க்கமான வெற்றியை அவர்களால் அடைய இயலவில்லை. தபுயியர்களின் மிக முக்கியமான ஆட்சியாளரான மகா பரூக்கான் (ஆ. 712–728) அரேபியத் தளபதி யசீது இப்னு அல்-முல்லப்புக்கு எதிரான தன்னுடைய நீண்ட போராட்டத்தின் போது தன்னுடைய நிலப்பரப்புகளைத் தக்க வைத்துக் கொண்டார். தய்லமியர்-தபுயியரின் ஓர் ஒன்றிணைந்த இராணுவத்தால் யசீது தோற்கடிக்கப்பட்டார். தபரிசுதானிலிருந்து பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[74] 743-இல் உமய்யா கலீபாவான இசாம் இப்னு அப்த் அல்-மாலிக்கின் இறப்புடன் இசுலாமிய உலகமானது உள்நாட்டுப் போரில் மூழ்கியது. அபு முசுலிம் குராசானுக்கு அப்பாசியக் கலீபகத்தால் தொடக்கத்தில் ஒரு பரப்புரையாளராகவும், பிறகு அவர்கள் சார்பாகப் புரட்சி செய்யவும் அனுப்பப்பட்டார். உமய்யா ஆளுநர் நாசர் இப்னு சய்யரைத் தோற்கடித்ததற்குப் பிறகு அவர் மெர்வை வென்றார். குராசானின் நடைமுறை ரீதியிலான அப்பாசிய ஆளுநராக உருவானார். இதே காலகட்டத்தின் போது அப்பாசிய ஆட்சியாளரான குர்சித் உமய்யாக்களிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்தார். ஆனால், சீக்கிரமே அப்பாசிய அதிகாரத்தை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 750-இல் அப்பாசிய இராணுவத்தின் தலைவராக அபு முசுலிம் உருவானார். சாப் யுத்தத்தில் உமய்யாக்களைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிறகு திமிஷ்குவிற்குள்அபு முசுலிம் புகுந்தார். அப்பாசியக் காலமும், தன்னாட்சியுடைய ஈரானிய அரசமரபுகளும்![]() ![]() அப்பாசிய இராணுவமானது முதன்மையாக குராசானியர்களைக் கொண்டிருந்ததாகவும், அபு முசுலிமால் தலைமை தாங்கப்பட்டும் இருந்தது. இந்த இராணுவமானது ஈரானிய மற்றும் அரேபிய மக்களைக் கொண்டிருந்தது. அப்பாசியர்கள் ஈரானியர் மற்றும் அரேபியர் ஆகிய இரு பிரிவினரின் ஆதரவையும் பெற்றிருந்தனர். 750-இல் உமய்யாக்களை அப்பாசியர்கள் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர்.[75] அமீர் அர்சோமந்தின் கூற்றுப்படி அப்பாசியப் புரட்சியானது மத்திய கிழக்கில் அரேபியப் பேரரசின் முடிவையும், அனைவரையும் உள்ளடக்கிய பல-இன அரசின் தொடக்கத்தையும் குறித்தது.[76] உமய்யாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றதற்கு பிறகு அப்பாசியர்கள் செய்த முதல் மாற்றங்களில் ஒன்றானது பேரரசின் தலைநகரத்தை ஈராக்குக்கு மாற்றுவதாக அமைந்தது. ஈராக்கானது பாரசீக வரலாறு மற்றும் பண்பாட்டின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. பேரரசில் அரேபிய செல்வாக்கைக் குறைக்க பாரசீக மாவாலியரின் கோரிக்கையின் ஒரு பகுதியாக தலை நகரமானது மாற்றப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. அப்பாசியர்களின் தலைநகரமாக சேவையாற்றுவதற்காக 762-இல் டைகிரிசு ஆற்றின் கரையில் பகுதாது நகரமானது கட்டமைக்கப்பட்டது.[77] பார்மகியர்களைப் போலவே தங்களது நிர்வாகத்தில் விசியர் (உயர் அதிகாரி) பதவியை அப்பாசியர்கள் நிறுவினர். இப்பதவியானது "துணை கலீபா" அல்லது இரண்டாவது தலைவர் என்பதற்கு ஒப்பானதாகும். இறுதியாக இந்த மாற்றத்தின் பொருளானது அப்பாசியர்களின் கீழ் இருந்த பல கலீபாக்கள் அதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கு பெருமளவுக்கு ஒரு விழாக்காலப் பதவியாக மாறினர். உண்மையான அதிகாரமானது விசியர்களிடம் இருந்தது. பழைய அரேபிய உயர்குடியினரை ஒரு புதிய பாரசீக அதிகாரிகள் வர்க்கமானது இடமாற்றத் தொடங்கியது. ஒட்டுமொத்த நிர்வாகமும் இத்தகைய மாற்றங்களைப் பிரதிபலித்தன. உமய்யாக்களிடமிருந்து பல வழிகளில் புதிய அரசமரபானது வேறுபட்டிருந்ததை இவை விளக்கிக் காட்டின.[77] அப்பாசியக் கலீபகத்தின் மைய அதிகாரத்திற்குச் சவால் விடுக்க பேரரசின் தொலைதூர மூலைகளில் மாகாணத் தலைவர்கள் தோன்றிய போது ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் அப்பாசிய கட்டுப்பாடானது வலுவிழக்கத் தொடங்கியது.[77] ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே அடிமை போர் வீரர்களான நடு ஆசியாவிலிருந்து திரான்சாக்சியானவிற்குப் புலம் பெயர்ந்து கொண்டிருந்த துருக்கிய மொழி பேசிய போர் வீரர்களான மம்லூக்குகளை அப்பாசியக் கலீபாக்கள் இராணுவத்தில் சேர்க்கத் தொடங்கினர். இதற்குப் பிறகு சீக்கிரமே அப்பாசியக் கலீபாக்களின் உண்மையான சக்தியானது மங்கத் தொடங்கியது. இறுதியாக கலீபாக்கள் சமய ரீதியிலான தலைவர்களாக உருவாயிப் போயினர். அதே நேரத்தில், அடிமை போர் வீரர்கள் ஆட்சி செய்யத் தொடங்கினர்.[75] ![]() ஒடுக்கு முறையிலான அரேபிய ஆட்சிக்கு எதிராக குர்ரமியர் என்றழைக்கப்பட்ட, ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட சரதுசர்கள் கிளர்ச்சி செய்தயையும் கூட ஒன்பதாம் நூற்றாண்டானது கண்டது. இந்த இயக்கத்திற்கு பாரசீக விடுதலைப் போராளி பபக் கோர்ரம்தின் தலைமை தாங்கினார். பபக்கின் ஈரானியமயமாக்கும் [78]கிளர்ச்சியானது வடமேற்கு ஈரானில் அதன் அடித்தளப்பகுதியான அசர்பைசானில் தொடங்கியது.[79] ஈரானிய[80] முற்காலத்தின் அரசியல் மதிப்புடைய காலங்களுக்குத் திரும்புவதற்கு இந்த இயக்கம் அழைப்பு விடுத்தது. பபக்கின் கோர்ரம்தின் கிளர்ச்சியானது ஈரானின் மேற்கு மற்றும் நடுப் பகுதிகளுக்குப் பரவியது. 20 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் ஒரு மூத்த தளபதியான அப்சின் நம்பிக்கை துரோகம் செய்ததற்குப் பிறகு பபக் தோற்கடிக்கப்பட்டார். அப்பாசியக் கலீபாக்களின் சக்தியானது குறைந்து வந்த போது ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஒரு தொடர்ச்சியான அரசமரபுகள் தோன்றின. இதில் சில குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு மற்றும் சக்தியைக் கொண்டிருந்தன. நிலப்பரப்புக்களை பகிர்ந்து கொண்ட இந்த அரசமரபுகளில் மிக முக்கியமானவற்றில் சிலமாக குராசானின் தகிரியர் (821–873), சிசுதானின் சபாரியர் (861–1003, இவர்களின் ஆட்சியானது சிசுதானின் மாலிக்குகளாக 1537 வரை நீடித்திருந்தது) மற்றும் உண்மையில் புகாராவை அடிப்படையாகக் கொண்டிருந்த சாமனியர் (819–1005) ஆகியோர் அடங்குவர். சாமனியர் இறுதியாக நடு ஈரானிலிருந்து பாக்கித்தான் வரையிலான பகுதியை ஆட்சி செய்தனர்.[75] பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் புயிய அரசமரபு (934–1062) என்று அறியப்பட்ட, வளர்ந்து வந்த பாரசீகப் பிரிவினரிடம் அப்பாசியர்கள் தங்களது கட்டுப்பாட்டை கிட்டத்தட்ட இழந்து விட்டனர். அப்பாசிய நிர்வாகத்தில் பெரும்பாலானதானது பாரசீகமயமாக்கப்பட்டு இருந்ததிலிருந்து பகுதாதுவில் உண்மையான சக்தியை அமைதியாகப் பெற புயியரால் முடிந்தது. 11-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புயியர் செல்யூக் துருக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டனர். வெளிப்படையாக தங்களது கூட்டணி அப்பாசியர்களுடன் என்று அறிவித்த நேரத்தில் அதே நேரத்தில் அப்பாசியர்கள் மீதான தங்களது செல்வாக்கை செல்யூக் துருக்கியர்கள் நிலைநிறுத்தத் தொடங்கினர். பெயரளவில் மட்டுமே அப்பாசியர்களிடம் சக்தியானது இருந்தது என்ற நிலையில் பகுதாதுவில் அதிகாரச் சமநிலையை தொடர்ந்தது. இந்நிலையானது 1258-ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பானது பகுதாது நகரத்தைச் சூறையாடி அப்பாசிய அரசமரபை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும் வரை நீடித்திருந்தது.[77] அப்பாசியக் கலீபகத்தின் காலத்தின் போது மாவாலிகளுக்கு உரிமை அளிக்கப்படத் தொடங்கியது. முதன்மையாக அரேபியப் பேரரசு என்பதிலிருந்து ஒரு முசுலிம் பேரரசாக ஒரு மாற்றமானது அரசியல் கருத்துருவில் ஏற்படுத்தப்பட்டது.[81] அண். 930-ஆம் ஆண்டு பேரரசின் அனைத்து அரசு அதிகாரிகளும் முசுலிமாக இருக்க வேண்டிய தேவையைக் கொண்ட சட்டம் கொண்டு வரப்பட்டது.[82] இசுலாமியப் பொற்காலமும், சூபிய்யா இயக்கமும், பாரசீகமயமாக்கப்பட்ட செயல்பாடும்![]() ஈரான் இசுலாமியமயமாக்கப்பட்டதானது ஒரு நீண்ட செயல்பாடாக இருந்தது. இச்செயல்பாட்டின் மூலம் ஈரானின் பெரும்பாலான மக்களால் இசுலாமானது படிப்படியாக பின்பற்றப்படத் தொடங்கியது. அமெரிக்க வரலாற்றாளர் ரிச்சர்டு புலியேத்தின் "மதமாற்ற வளைவானது" ஒப்பீட்டளவில் அரேபியர்களை மையமாகக் கொண்டிருந்த உமய்யா காலத்தின் போது சுமார் வெறும் 10% ஈரான் மட்டுமே இசுலாமிற்கு மதம் மாற்றப்பட்டது என்பதைக் காட்டுகிறது. பாரசீக, அரேபிய ஆட்சியாளர்களின் கலப்பைக் கொண்டிருந்த அப்பாசியக் காலத்தில் தொடங்கி மக்கள் தொகையில் முசுலிம் சதவீதத்தினரின் எண்ணிக்கையானது அதிகரித்தது. பாரசீக முசுலிம்கள் இந்நாட்டில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்தியதுடன் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோராயமாக 40% என்பதிலிருந்து 11-ஆம் நூற்றாண்டின் முடிவில் கிட்டத்தட்ட 90% ஆக முசுலிம் மக்கள் தொகையானது அதிகரித்தது.[81] மதம் மாறுவதில் துரிதமான அதிகரிப்பானது ஆட்சியாளர்கள் பாரசீக தேசியத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் உதவி பெற்றது என ஈரானிய அறிஞர் செய்யெது ஒசெய்ன் நாசர் பரிந்துரைக்கிறார்.[83] தங்களை வென்றவர்களின் மதத்தை பாரசீகர்கள் பின்பற்றிக் கொண்டாலும் நூற்றாண்டுகளின் போக்கில் தங்களது தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து புத்தெழுச்சியூட்ட அவர்கள் பணியாற்றினர். இச்செயல்பாடானது பாரசீகமயமாக்கம் என்று அறியப்படுகிறது. அரேபியர்களும், துருக்கியர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்திருந்தனர்.[84][85][86] 9 ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளில் அரேபியர்களின் தனித்த உயர் நிலைக்கு எதிர் வினையாக சூபிய்யா என்றழைக்கப்பட்ட ஓர் இயக்கத்தை உம்மாவின் அரேபியர் அல்லாத குடிமக்கள் உருவாக்கினர். இந்த இயக்கத்தின் பின்புலத்திலிருந்த பெரும்பாலானவர்கள் பாரசீகர்களாவர். ஆனால், எகிப்தியர், பர்பர் மற்றும் அரமேயர்களைக் குறிப்பிடும் ஆதாரங்களும் கிடைக்கப் பெறுகின்றன.[87] அனைத்து இனங்களும், தேசங்களும் சமம் எனும் தமது அடிப்படை இசுலாமியக் கருத்துகளைக் கொண்டு இந்த இயக்கமானது ஒரு முசுலிம் சூழலுக்குள் பாரசீகப் பண்பாட்டைத் தக்க வைப்பது மற்றும் பாரசீக அடையாளத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை முதன்மையான கருத்தாகக் கொண்டிருந்தது. சாமனிய அரசாங்கமானது பாரசீகப் பண்பாட்டின் புத்தெழுச்சிக்குத் தலைமை தாங்கியது. இசுலாமின் வருகைக்குப் பிறகு மிக முக்கியமான பாரசீகக் கவிஞரான ருதாகி இந்த சகாப்தத்தின் போது பிறந்தார். சாமனிய மன்னர்களால் புகழப்பட்டார். சாமனியர்கள் பல பண்டைக் கால பாரசீக விழாக்களுக்கும் கூட புத்துயிர் கொடுத்தனர். அவர்களுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்களான கசனவியர் ஈரானியரல்லாத துருக்கியராக இருந்தனர். பாரசீகப் பண்பாட்டுக்குப் புத்துயிரூட்டியதில் அவர்களும் கூட காரணமாக இருந்தனர்.[88] ![]() பாரசீகமயமாக்கும் இயக்கத்தின் ஓர் இறுதி நிலையாக சா நாமா திகழ்ந்தது. ஈரானின் தேசிய இதிகாசம் இதுவாகும். இது கிட்டத்தட்ட முழுவதுமாக பாரசீக மொழியில் எழுதப்பட்டதாகும். மிக நீண்ட இந்நூலானது ஈரானின் பண்டைக்கால வரலாறு, அதன் தனித்துவமான பண்பாட்டு விழுமியங்கள், இசுலாமுக்கு முந்தையன் இந்நாட்டின் சரதுச சமயம் மற்றும் தேசியத்திற்கான நாட்டின் உணர்வு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. பிரித்தானிய-அமெரிக்க வரலாற்றாளர் பெர்னார்டு லீவிசின் கூற்றுப்படி:[91]
ஈரான் இசுலாமியமயமாக்கப்பட்டதானது ஈரானிய சமூகத்தின் பண்பாட்டு, அறிவியல் மற்றும் அரசியல் அமைப்பிற்குள் ஓர் ஆழமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. செழித்து வந்த பாரசீக இலக்கியம், தத்துவம், மருத்துவம் மற்றும் கலை ஆகியவை புதிதாக அமைக்கப்பட்ட முசுலிம் நாகரிகத்தின் முக்கியமான ஆக்கக் கூறுகளாக உருவாயின. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருந்த நாகரிகத்தின் பாரம்பரியத்தைப் பெற்றது மற்றும் "முதன்மையான பண்பாட்டுப் பாதைகள் இணையும் இடத்தில்" அமைந்திருந்தது[92] ஆகியவை பாரசீகம் வளர்ச்சியடைவதற்குப் பங்களித்தன. இச்செயல்பாடுகள் "இசுலாமியப் பொற்காலமாக" இறுதி முடிவை எட்டின. இக்காலத்தின் போது நூற்றுக்கணக்கான அறிஞர்களும், அறிவியலாளர்களும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்குப் பெருமளவு பங்களித்தனர். ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது ஐரோப்பிய அறிவியலின் வளர்ச்சியின் மீது பின்னர் இவை தாக்கத்தை ஏற்படுத்தின.[93] கிட்டத்தட்ட அனைத்து இசுலாமிய சிந்தனைப் பிரிவுகளின் மிக முக்கியமான அறிஞர்கள் பாரசீகர்களாகவோ அல்லது ஈரானில் வாழ்ந்தவர்களாகவோ இருந்தனர். இதில் சய்க் சதுக், சய்க் குலைனி, அக்கீம் அல்-நிசாபூரி, இமாம் முசுலிம் மற்றும் இமாம் புகாரி போன்ற சியா மற்றும் சன்னியின் மிக குறிப்பிடத்தக்க மற்றும் சார்ந்திருக்கத் தகுந்த ஹதீஸ் சேகரிப்பாளார்கள், சியா மற்றும் சன்னியின் மிகச் சிறந்த இறையியலாளர்களான சய்க் தூசீ, இமாம் கசாலி, இமாம் பக்ர் அல்-ரசீ, மற்றும் மிகச் சிறந்த மருத்துவரான அல்-சமக்சாரி, வானியலாளர்கள், தர்க்கவியலாளர்கள், கணிதவியலாளர்கள், மீவியற்பியலாளர்கள், தத்துவவாதிகள், மற்றும் இப்னு சீனா மற்றும் நசீருத்தீன் அத்-தூசீ போன்ற அறிவியலாளர்கள், ரூமி மற்றும் அப்துல்-காதிர் கிலானி போன்ற சூபித்துவதின் மிகச் சிறந்த சய்க்குகள் ஆகியோர் அடங்குவர். பாரசீகமயமாக்கப்பட்ட அரசுகளும், அரசமரபுகளும் (977–1219)![]() 977-இல் சாமனியர்களின் ஒரு துருக்கிய ஆளுநரான சபுக்திகின் கசனாவை (தற்கால ஆப்கானித்தானில் உள்ளது) வென்றார். 1186-ஆம் ஆண்டு வரை நீடித்திருந்த கசனவியர் எனும் ஓர் அரசமரபை நிறுவினார்.[75] பத்தாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் ஆமூ தாரியா ஆற்றின் தெற்கேயிருந்த அனைத்து சாமனிய நிலப்பரப்புகளையும் வென்றதன் மூலம் கசனவியப் பேரரசானது வளர்ச்சியடைந்தது. இப்பேரரசு இறுதியாக கிழக்கு ஈரான், ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது.[77] முதன்மையாக இந்துக்களைக் கொண்டிருந்த இந்தியாவிற்குள் இசுலாமைக் கொண்டு வந்ததற்காக கசனவியர் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். இந்தியா மீதான படையெடுப்பானது 1000-ஆம் ஆண்டில் கசனவிய ஆட்சியாளர் மகுமூதுவால் நடத்தப்பட்டது. இது பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இவர்களால் இந்தியாவில் நீண்ட காலத்திற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்க இயலவில்லை. குறிப்பாக, 1030-இல் மகுமூதுவின் இறப்பிற்குப் பிறகு இந்நிலை ஏற்பட்டது. 1040 வாக்கில் ஈரானிலிருந்த கசனவிய நிலங்களை செல்யூக்குகள் கைப்பற்றிக் கொண்டனர்.[77] கசனவியரைப் போலவே செல்யூக்கியரும் பாரசீகமயமாக்கப்பட்டவர்களாகவும், துருக்கியப் பூர்வீகத்தையுடையவர்களாகவும் இருந்தனர். 11-ஆம் நூற்றாண்டின் போக்கில் ஈரானை செல்யூக்கியர் மெதுவாக வென்றனர்.[75] இந்த அரசமரபானது தன் பூர்வீகத்தை நடு ஆசியாவின் துருக்கோமென் பழங்குடியினக் கூட்டமைப்புகளில் கொண்டிருந்தது. மத்திய கிழக்கில் துருக்கிய சக்தியின் தொடக்கத்தை இது குறித்தது. 11 முதல் 14-ஆம் நூற்றாண்டுகள் வரை நடு ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகள் மீது இவர்கள் ஒரு சன்னி முசுலிம் ஆட்சியை நிறுவினர். மேற்கே அனத்தோலியாவிலிருந்து கிழக்கே மேற்கு ஆப்கானித்தான் வரையிலும், வட-கிழக்கே நவீன கால சீனாவின் மேற்கு எல்லைகள் வரையிலும் விரிவடைந்திருந்த செல்யூக் பேரரசை இவர்கள் நிறுவினர். முதலாம் சிலுவைப் போரின் இலக்காகவும் இப்பேரரசு இருந்தது. துருக்கி, அசர்பைசான் மற்றும் துருக்மெனித்தான் ஆகிய நாடுகளின் தற்கால மக்களான மேற்கு துருக்கியர்களின் பண்பாட்டு ரீதியிலான முன்னோர்களாக செல்யூக்கியர் தற்காலத்தில் கருதப்படுகின்றனர். பாரசீகப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மொழிக்குப் பெரும் புரவலர்களாகத் திகழ்ந்ததற்காக இவர்கள் நினைவுபடுத்தப்படுகின்றனர்.[94][95][96] ![]() இந்த அரசமரபைத் தோற்றுவித்தவரான துக்ரில் பெக் குராசானில் கசனவியருக்கு எதிராகத் தன்னுடைய இராணுவத்தைத் திருப்பினார். தெற்கு நோக்கி நகர்ந்தார். பிறகு மேற்கு நோக்கிச் சென்றார். தன்னுடைய பாதையில் இருந்த நகரங்களை வென்றார். ஆனால் அவற்றை அழிக்கவில்லை. 1055-இல் பகுதாதுவிலிருந்த கலீபா துக்ரில் பெக்கிற்கு அங்கிகளையும், பரிசுகளையும், கிழக்கின் மன்னன் என்ற பட்டத்தையும் வழங்கினார். துக்ரில் பெக்கிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மாலிக் ஷாவின் (1072–1092) ஆட்சியின் கீழ் ஈரான் ஒரு பண்பாட்டு மற்றும் அறிவியல் மறுமலர்ச்சியைக் கண்டது. இதற்குப் பெரும்பங்குக் காரணம் அவரது சிறந்த ஈரானிய விசியரான (உயர் அதிகாரி) நிசாம் அல் முல்க் ஆவார். இந்த தலைவர்கள் வானியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினர். இங்கு தான் ஒமர் கய்யாம் ஒரு புதிய நாட்காட்டிக்காகத் தன்னுடைய ஆய்வுகளில் பெரும்பாலானவற்றைச் செய்தார். அனைத்து முதன்மையான பட்டணங்களிலும் இவர்கள் சமயப் பள்ளிகளைக் கட்டினர். இசுலாமிய இறையியலாளர்களிலேயே மிகச் சிறந்தவர்களில் ஒருவரான அபு அமீத் கசாலியையும், பிற முக்கியமான அறிஞர்களையும் செல்யூக் தலைநகரான பகுதாதுவிற்கு இவர்கள் கொண்டு வந்தனர். அவர்களது பணிகளுக்கு ஊக்குவிப்பையும், ஆதரவையும் அளித்தனர்.[75] 1092-இல் முதலாம் மாலிக் ஷா இறந்த போது அவரது சகோதரரும், நான்கு மகன்களும் தங்களுக்கிடையே பேரரசைப் பிரித்துக் கொள்வதில் சண்டையிட்டதன் காரணமாக பேரரசானது பிரிந்தது. அனத்தோலியாவில் முதலாம் மாலிக் ஷாவிற்குப் பிறகு முதலாம் கிலிச் அர்சலான் பதவிக்கு வந்தார். அவர் உரூம் சுல்தானகத்தை நிறுவினார். சிரியாவில் மாலிக் ஷாவின் தம்பி முதலாம் துதுசு ஆட்சிக்கு வந்தார். பாரசீகத்தில் மாலிக் ஷாவின் மகன் முதலாம் மகுமூது ஆட்சிக்கு வந்தார். ஈராக்கில் பர்கியருக், பகுதாதுவில் முதலாம் முகம்மது மற்றும் குராசனில் அகமது சஞ்சார் ஆகிய முதலாம் மகுமூதுவின் பிற மூன்று சகோதரர்கள் முதலாம் மகுமூதுவின் ஆட்சிக்குச் சவால் விடுத்தனர். ஈரானில் செல்யூக் சக்தியானது பலவீனமடைந்து கொண்டிருந்த போது பிற அரசமரபுகள் இதன் இடத்தை பிடிக்கத் தொடங்கின. இதில் மீண்டும் புத்தெழுச்சி பெற்ற அப்பாசியக் கலீபகமும், குவாரசமிய ஷாக்களும் அடங்குவர். குவாரசமியப் பேரரசானது பாரசீகமயமாக்கப்பட்ட ஒரு சன்னி முசுலிம் அரசமரபாகும். இது கிழக்கு துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டிருந்தது. நடு ஆசியாவை ஆட்சி செய்தது. உண்மையில் செல்யூக்கியர்களிடம் அடி பணிந்தவர்களாக இருந்த இவர்கள் செல்யூக்கியரின் வீழ்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரானுக்குள் விரிவடைந்தனர்.[97] 1194-இல் குவாரசமிய ஷா அலா அத்-தின் தெகீசு செல்யூக் சுல்தான் மூன்றாம் தொகுருலை யுத்தத்தில் தோற்கடித்தார். ஈரானில் இருந்த செல்யூக் பேரரசானது இவ்வாறு வீழ்ச்சியடைந்தது. முந்தைய செல்யூக் பேரரசைப் பொறுத்த வரையில் அனத்தோலியாவிலிருந்த உரூம் சுல்தானகம் மட்டுமே எஞ்சியிருந்தது. செல்யூக்கியரின் ஆட்சிக் காலத்தின் போது அவர்களுக்கு எதிரான ஒரு முக்கிய உள்நாட்டு அச்சுறுத்தலானது நிசாரி இசுமாயிலிகளிடமிருந்து வந்தது. இரசுத்து மற்றும் தெகுரானுக்கு இடையிலிருந்த அலமுத் கோட்டையில் தங்களது தலைமையகத்தைக் கொண்டிருந்த ஓர் இரகசியப் பிரிவினர் இவர்கள் ஆவர். இவர்கள் தங்களைச் சுற்றியிருந்த பகுதிகளை 150-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முக்கியமான அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் தங்களது ஆட்சியை வலிமைப்படுத்துவதற்காக கொலையாளிகளை அவ்வப்போது இவர்கள் அனுப்பி வந்தனர். ஆங்கிலத்தில் அசாசின் என்ற வார்த்தையின் பெயர்க் காரணம் குறித்த பல வேறுபட்ட கருத்துக்களானவை இந்தக் கொலையாளிகளிடமிருந்து பெறப்படுகின்றன.[75] வடமேற்கு ஈரானின் பகுதிகளானவை 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசர் தமரால் தலைமை தாங்கப்பட்ட சார்சியா இராச்சியத்தால் வெல்லப்பட்டது.[98] மங்கோலியப் படையெடுப்பும், ஆட்சியும் (1219–1358)மங்கோலியப் படையெடுப்பு (1219–1221)![]() ![]() குவாரசமிய அரசமரபானது மங்கோலியர்களின் வருகை வரை சில தசாப்தங்களுக்கு மட்டுமே நீடித்தது. செங்கிஸ் கான் மங்கோலியர்களை ஒன்றிணைத்திருந்தார். அவரின் தலைமையின் கீழ் மங்கோலியப் பேரரசானது பல திசைகளில் வேகமாக விரிவடைந்தது. 1218-இல் இப்பேரரசு குவாரசமியப் பேரரசுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் குவாரசமியப் பேரரசானது அலாவுதீன் முகம்மதுவால் (1200–1220) ஆளப்பட்டது. செங்கிஸ் கானைப் போலவே முகம்மதுவும் தன்னுடைய நிலங்களை விரிவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். பெரும்பாலான ஈரானை அடிபணிய வைத்தார். தன்னைத் தானே ஷாவாக அறிவித்துக் கொண்டார். அப்பாசியக் கலீபா அல்-நசீரிடமிருந்து அலுவல் பூர்வமான அங்கீகாரத்தைக் கோரினார். கலீபா இவரது கோரிக்கைகளை நிராகரித்த போது அலாவுதீன் முகம்மது தன்னுடைய உயர் குடியினரில் ஒருவரை கலீபாவாக அறிவித்தார். அல்-நசீரைப் பதவியிலிருந்து நீக்கும் அவரது முயற்சியானது வெற்றிகரமாக அமையவில்லை. ஈரான் மீதான மங்கோலியப் படையெடுப்பானது செங்கிஸ் கானால் குவாரசமியப் பேரரசுக்கு அனுப்பப்பட்ட இரு தூதுக் குழுக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு 1219-ஆம் ஆண்டு தொடங்கியது. 1220-21-ஆம் ஆண்டின் போது புகாரா, சமர்கந்து, ஹெறாத், துசு மற்றும் நிசாபூர் ஆகிய நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஒட்டு மொத்த மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். குவாரசமியய ஷா தப்பித்து ஓடினார். காசுபியன் கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு தீவில் இறந்தார்.[99] 1219-இல் திரான்சாக்சியானா படையெடுப்பு என்பது முதன்மையான மங்கோலியப் படையுடன் சேர்த்து செங்கிஸ் கான் யுத்தத்தில் ஒரு சீன சிறப்பு பெரிய கவண் வில்களையுடைய பிரிவினரைப் பயன்படுத்தினார். திரான்சாக்சியானாவில் இப்பிரிவினர் 1220-ஆம் ஆண்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டனர். இந்நேரத்தில் சீனர்களிடம் ஏற்கனவே இருந்ததன் காரணமாக வெடிமருந்து குண்டுகளை தூக்கியெறியும் பெரிய கவண் வில்களைச் சீனர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[100] திரான்சாக்சியானா மற்றும் பாரசீகத்தை செங்கிஸ் கான் வென்று கொண்டிருந்த நேரத்தில் வெடிமருந்தை பழக்கமாகத் தெரிந்திருந்த பல சீனர்கள் செங்கிஸ் கானின் இராணுவத்தில் பணியாற்றினர்.[101] ஈரான் படையெடுப்பின் போது வெடிகுண்டுகளை எரியும் கவண் விற்களை இயக்க சீனர்களை முழுவதுமாகக் கொண்டிருந்த "ஒட்டு மொத்த பிரிவினரை" மங்கோலியர்கள் பயன்படுத்தினர்.[102] மங்கோலியப் படையெடுப்பானது நடு ஆசியாவுக்கு சீன வெடிமருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்தது என வரலாற்றாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் ஓர் ஆயுதம் குவோசோங் எனப்படும் ஒரு சீன சிறு வகை பீரங்கியாகும்.[103] இப்படையெடுப்புக்குப் பிறகு இப்பகுதியைச் சுற்றி எழுதப்பட்ட நூல்களில் சீனாவில் உள்ள ஆயுதங்களை ஒத்த வெடிமருந்து ஆயுதங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன.[104] மங்கோலியர்களுக்குக் கீழ் அழிவு1227-இல் தன் இறப்பிற்கு முன்னர் செங்கிஸ் கான் மேற்கு அசர்பைசானை அடைந்திருந்தார். வடகிழக்குப் பகுதியிலிருந்து ஈரானுக்குள் நுழைந்ததற்குப் பிறகு தான் செல்லும் வழியில் பல நகரங்களைச் சூறையாடி எரித்தார். மங்கோலியப் படையெடுப்பானது ஈரானியர்களுக்குப் பெரும் அழிவாக இருந்தது. மங்கோலியப் படையெடுப்பையாளர்கள் இறுதியாக இசுலாமுக்கு மாறி ஈரானின் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட போதும், இசுலாமிய மையப் பகுதியின் பிற பகுதிகள் (குறிப்பாக வரலாற்று ரீதியிலான குராசான் பகுதி, முதன்மையாக நடு ஆசியா) அப்பகுதிகளின் போக்கு பெருமளவுக்கு மாற்றம் அடைந்ததைக் குறித்தது. படையெடுப்பாளர்கள் நகரங்களைத் தரைமட்டமாக்கி, நூலகங்களை எரித்து, மற்றும் சில நேரங்களில் மசூதிகளை பௌத்த கோயில்களைக் கொண்டு இடம் மாற்றியதனால் ஆறு நூற்றாண்டுகளில் பெரும்பாலும் உருவாக்கப்பட்ட இசுலாமிய கல்வி சாதனைகள், பண்பாடு மற்றும் உட்கட்டமைப்பானது அழிக்கப்பட்டது.[105][106][107] மங்கோலியர்கள் பல ஈரானியக் குடிமக்களைக் கொன்றனர். வடகிழக்கு ஈரானில் கனத் நீர்ப்பாசன அமைப்புகளை அழித்ததானது ஒப்பீட்டளவில் தொடர்ச்சியாக இருந்த குடியிருப்புகளை அழித்தது. நீர்ப் பாசன அமைப்பு மற்றும் வேளாண்மையுடன் ஒப்பீட்டளவில் நன்முறையில் இருந்தவற்றை பல கைவிடப்பட்ட பட்டணங்களாக உருவாக்கியது.[108] 1221-இல் செங்கிஸ் கான் குர்கஞ்ச் நகரத்தை அழித்தார். அனைவரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பண்டைக்கால ஈரானிய குவாரசமிய மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர். குவாரசமியா துருக்கியமயமாக்கப்படுவதற்கு இது வழியமைத்துக் கொடுத்தது. ஈல்கானரசு (1256–1335)![]() செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு ஈரான் பல மங்கோலியத் தளபதிகளால் ஆளப்பட்டது. செங்கிஸ் கானின் பேரனான குலாகு கானிடம் அவரது அண்ணன் மோங்கே கான் மங்கோலியப் பேரரசை மேற்கு நோக்கி விரிவாக்கும் பணியை ஒப்படைத்தார். எனினும், குலாகு கான் அதிகாரத்திற்கு வந்த நேரம் வாக்கில் மங்கோலியப் பேரரசானது ஏற்கனவே கலைக்கப்பட்டு விட்டது. வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஓர் இராணுவத்துடன் வந்த குலாகு கான் இப்பகுதியில் தன்னைத் தானே நிறுவிக் கொண்டார். ஈல்கானரசை உருவாக்கினார். மங்கோலியப் பேரரசிலிருந்து பிரிந்த ஓர் அரசு இதுவாகும். அடுத்த 80 ஆண்டுகளுக்கு ஈரானை இந்த அரசு ஆண்டது. காலப் போக்கில் பாரசீகமயமாக்கப்பட்டது. குலாகு கான் 1258-இல் பகுதாதுவைக் கைப்பற்றினார். கடைசி அப்பாசிய கலீபாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். எனினும், இவரது படைகளின் மேற்கு நோக்கிய முன்னேற்றமானது மம்லுக்குகளால் 1260-ஆம் ஆண்டு பாலத்தீனத்தில் நடைபெற்ற ஐன் ஜலுட் போரில் தடுத்து நிறுத்தப்பட்டது. முசுலிம்களுக்கு எதிரான குலாகுவின் படையெடுப்புகளானவை இசுலாமிற்கு மதம் மாறியவரும், தங்க நாடோடிக் கூட்டத்தின் கானுமாகிய பெர்கேவைக் கோபப்படுத்தியது. குலாகுவும், பெர்கேயும் ஒருவரை எதிர்த்து ஒருவர் சண்டையிட்டனர். மங்கோலியப் பேரரசின் ஒற்றுமை பலவீனமடைந்ததை இது வெளிக்காட்டியது. குலாகுவின் கொள்ளுப் பேரனாகிய கசனின் (1295–1304) ஆட்சியானது ஈல்கானரசின் சமயமாக இசுலாம் நிறுவப்படுவதைக் கண்டது. கசனும், அவரது புகழ் பெற்ற ஈரானிய உயர் அதிகாரியான ரசீத்தல்தீனும் ஈரானுக்கு பகுதியளவு மற்றும் குறுகிய பொருளாதார புத்தெழுச்சியைக் கொண்டு வந்தனர். மங்கோலியர்கள் கைவினைஞர்களுக்கு வரிகளைக் குறைத்தனர். வேளாண்மையை ஊக்குவித்தனர். நீர்ப்பாசன அமைப்புகளை மீண்டும் கட்டமைத்து விரிவாக்கினர். வணிக வழிகளின் பாதுகாப்பை மேம்படுத்தினர். இதன் விளைவாக வணிகமானது பெருமளவுக்கு அதிகரித்தது. இந்தியா, சீனா மற்றும் ஈரானிலிருந்து வந்த பொருட்கள் எளிதாக ஆசியப் புல்வெளிகள் வழியாகக் கடந்தன. இந்தத் தொடர்புகளானவை ஈரானை பண்பாட்டு ரீதியாக செழிப்பாக்கின. எடுத்துக்காட்டாக, ஈரானியர்கள் வலிமையான இரு பரிமாண மெசொபொத்தேமிய ஓவிய பாணியை சீனாவின் இறகு போன்ற மெல்லிய தூரிகை கோடுகள் மற்றும் பிற உருவ இயல்புகளை அடிப்படையாகக் கொண்ட ஓவிய பாணியுடன் இணைத்து ஒரு தனித்துவமான புதிய ஓவிய பாணியை உருவாக்கினர். எனினும், கசனின் தம்பி மகனான அபு சயித் 1335-ஆம் ஆண்டு இறந்ததற்குப் பிறகு ஈல்கானரசானது உள்நாட்டுப் போரில் மூழ்கியது. பல்வேறு சிறிய அரசமரபுகளால் பிரித்துக் கொள்ளப்பட்டது. இதில் மிக முக்கியமானவை சலயிர்கள், முசபரியர்கள், சர்பதர்கள் மற்றும் கர்தியர்கள் ஆகியோராவர். 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈரானில் பரவிய கறுப்புச் சாவானது இந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30% பேரைக் கொன்றது.[109] தைமூரியப் பேரரசு (1370–1507)தடவியல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட துருக்கிய-மங்கோலியத் துரந்தரரான தைமூரின் முகம் தைமூரியப் பேரரசுக்குத் திறை செலுத்திய அரசுகள் மற்றும் தைமூரியப் பேரரசின் செல்வாக்குப் பகுதியுடன் சேர்த்து, விவரங்களையுடைய வரைபடத்துடன் மேற்கு-நடு ஆசியாவில் தைமூரியப் பேரரசானது காட்டப்பட்டுள்ளது. ஆண்டு 1402–1403. தைமூரிய அரசமரபைச் சேர்ந்த ஒரு துருக்கிய-மங்கோலியரான தைமூரின்[110] வருகை வரை ஈரான் தொடர்ந்து பிரிந்திருந்தது. அதற்கு முன்னிருந்த பேரரசுகளைப் போலவே தைமூரியப் பேரரசு பாரசீக உலகத்தின் ஒரு பகுதியாகவும் கூட இருந்தது. திரான்சோக்சியானாவில் தனது அதிகார அடித்தளத்தை நிறுவியதற்குப் பிறகு 1381-ஆம் இரண்டு தைமூர் ஈரான் மீது படையெடுத்தார். இறுதியாக, பெரும்பாலான ஈரானைக் கைப்பற்றினார். தைமூரின் படையெடுப்புகளானவை அவற்றின் மிருகத்தனத்திற்காக அறியப்படுகின்றன; பல மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; பல நகரங்கள் அழிக்கப்பட்டன.[111] இவரது ஆட்சியானது கொடுங்கோன்மை மற்றும் இரத்தம் சிந்த வைத்தல் ஆகியவற்றை இயல்பாகக் கொண்டிருந்தது. ஆனால், நிர்வாகப் பதவிகளில் ஈரானியர்களை இணைத்துக் கொண்டது, மற்றும் கட்டடக்கலை மற்றும் கவிதைக்கான அதன் ஊக்குவிப்பையும் கூட இது இயல்பாகக் கொண்டிருந்தது. தைமூருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்களான தைமூரியர்கள் 1452 வரை பெரும்பாலான ஈரான் மீதான தங்களது கட்டுப்பாட்டைப் பேணி வந்தனர். அந்த ஆண்டு காரா கோயுன்லுவிடம் தங்களது நிலப்பரப்புகளில் பெரும்பாலானவற்றை இழந்தனர். 1468 உசுன் அசன் தலைமையிலான அக் கோயுன்லு காரா கோயுன்லுக்களை வென்றனர். சபாவியர்கள் வளர்ச்சியடையும் வரை ஈரானில் ஆட்சி செய்தவர்களாக உசுன் அசனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்களும் திகழ்ந்தனர்.[111] சூபிக் கவிஞரான அபீசுவின் பிரபலமானது தைமூரிய சகாப்தத்தில் உறுதியாக நிறுவப்பட்டது. இந்த சகாப்தமானது இவரது திவான் தொகுக்கப்படுவதையும், பரவலாக நகல் எடுக்கப்படுவதையும் கண்டது. மரபுவாத முசுலிம்களால் சூபிக்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் சூபிக்களின் போதனைகளை இறை நிந்தனையாகக் கருதினர். சினமூட்டும் தத்துவ போதனைகளைப் புரியாததாக்குவதற்காக கவிதைக் குறிப்பு உருவகங்களைச் செழிப்பாகக் கொண்டிருந்த ஒரு குறியீட்டு மொழியை சூபித்துவமானது உருவாக்கியது. தன்னுடைய சொந்த வேலைப்பாடுகளில் சூபித்துவத்தின் இரகசிய மொழியை (நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டது) அபீசு பயன்படுத்திய போதும் அவர் தன்னுடைய சொந்த சூபி நம்பிக்கையை மறைத்தார். "இதைக் குறைபாடற்றதாக மாற்றியதற்காக" சில நேரங்களில் இவர் குறிப்பிடப்படுகிறார்.[112] இவரது வேலைப்பாடுகளை சமி பின்பற்றினார். சமியின் சொந்த பிரபலத் தன்மையானது பாரசீகத்தின் முழு அகலத்திற்கும் பரவும் அளவுக்கு வளர்ந்தது.[113] காரா கோயுன்லு![]() காரா கோயுன்லு என்பவர்கள் துருக்மென்களின் ஒரு பழங்குடியினக் கூட்டமைப்பு ஆவர்.[114] 1374 முதல் 1468 வரை வடமேற்கு ஈரான் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளை இவர்கள் ஆண்டனர். காரா கோயுன்லு தங்களது படையெடுப்புகளை பகுதாதுவிற்கு விரிவாக்கினர். எனினும், உட்சண்டைகள், தைமூரியர்களிடம் அடைந்த தோல்விகள், தாங்கள் ஒடுக்கப்பட்டதற்கு எதிர் வினையாக ஆர்மீனியர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சிகள்,[115] மற்றும் அக் கோயுன்லுவுடனான தோல்வியடைந்த போராட்டங்கள் ஆகியவை இவர்களது இறுதி வீழ்ச்சிக்குக் காரணமாயின.[116] அக் கோயுன்லுஅக் கோயுன்லு என்பவர்கள் துருக்மென்கள் ஆவர்.[117][118] இவர்கள் பயந்தூர் பழங்குடியினத்தின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டனர்.[119] இது சன்னி முசுலிம்களின் ஒரு பழங்குடியினக் கூட்டமைப்பாகும். 1378 முதல் 1501 வரை ஈரானின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சுற்றியிருந்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை இவர்கள் ஆண்டனர். தற்கால துருக்கியில் தியார்பக்கீரின் அனைத்து பகுதிகளையும் தைமூர் இவர்களுக்கு வழங்கிய போது அக் கோயுன்லு தோன்றினர். இதற்குப் பிறகு இவர்கள் தங்களது எதிரிகளான ஒகுசு துருக்கியர்களின் காரா கோயுன்லுவுடன் சண்டையிட்டனர். காரா கோயுன்லுவைத் தோற்கடிப்பதில் அக் கோயுன்லு வெற்றிகரமாகத் திகழ்ந்த அதே நேரத்தில் புதிதாக உருவாகி வந்த சபாவிய அரசமரபுடனான இவர்களது போராட்டமானது இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானது.[120] தொடக்க நவீன காலம்பாரசீகமானது சபாவிய அரசமரபின் (1502–1736) கீழ் ஒரு புத்தெழுச்சியைக் கண்டது. இதில் மிக முக்கியமான நபர் ஷா முதலாம் அப்பாசு ஆவார். சில வரலாற்றாளர்கள் ஈரானின் நவீன தேச-அரசை நிறுவியதாக சபாவிய அரசமரபைக் குறிப்பிடுகின்றனர். ஈரானின் சமகால சியா இயல்பு மற்றும் தற்போதைய எல்லைகளில் குறிப்பிடத்தக்க அளவு பகுதிகள் ஆகியவை இந்த சகாப்தத்தின் போது தான் தோன்றின (எ. கா. சுகப் ஒப்பந்தம்). சபாவியப் பேரரசு (1501–1736)![]() ![]() சபாவிய அரசமரபானது ஈரானை ஆட்சி செய்த அரசமரபுகளிலேயே மிக முக்கியமான அரசமரபுகளில் ஒன்றாகும். இந்த அரசமரபின் ஆட்சிக் காலமே "பொதுவாக நவீன பாரசீக வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது".[121] பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பிறகு மிகச் சிறந்த ஈரானியப் பேரரசுகளில் ஒன்றை இவர்கள் ஆட்சி செய்தனர்.[122] தங்களது பேரரசின் அதிகாரப்பூர்வ சமயமாக சியா இசுலாமின் பன்னிருவர் பிரிவை நிறுவினர்.[18] முசுலிம் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பு முனைகளில் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. 1501 முதல் 1722 வரை (1729 முதல் 1736 வரையிலான ஒரு குறுகிய காலம் மீண்டும் ஆட்சி செய்தனர்) சபாவியர்கள் ஆட்சி செய்தனர். தங்களது உச்சபட்ச நிலையில் இவர்கள் நவீன ஈரான், அசர்பைசான் மற்றும் ஆர்மீனியாவின் அனைத்து பகுதிகளையும், பெரும்பாலான சார்சியா, வடக்கு காக்கேசியா, ஈராக்கு, குவைத்து மற்றும் ஆப்கானித்தான், மேலும், துருக்கி, சிரியா, பாக்கித்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தானின் பகுதிகளையும் கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் முதன்மையான எதிரியான உதுமானியப் பேரரசு மற்றும் கிழக்கே இருந்த முகலாயப் பேரரசு ஆகிய அண்டை நாடுகளுடன் சேர்த்து சபாவிய ஈரானானது இசுலாமிய "வெடிமருந்துப் பேரரசுகளில்" ஒன்றாகும். சபாவிய ஆட்சி செய்த அரசமரபானது இசுமாயிலால் நிறுவப்பட்டது. அவர் ஷா முதலாம் இசுமாயில் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார்.[123] நடைமுறை ரீதியில் தனது கிசில்பாசு ஆதரவாளர்களால் வழிபடப்பட்ட இவர் தன்னுடைய தந்தை சய்க் அய்தரின் இறப்புக்குப் பழி வாங்குவதற்காக சிர்வான் மீது படையெடுத்தார். தாகெஸ்தானின் தெர்பெந்து மீதான அய்தரின் முற்றுகையின் போது அய்தர் கொல்லப்பட்டிருந்தார். இதற்குப் பிறகு வெற்றி கொள்ளும் படையெடுப்புகளை இவர் தொடங்கினார். சூலை 1501-இல் தப்ரீசுவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஈரானின் ஷாவாக முடிசூட்டிக் கொண்டார்.[124]:324[125][126] தன் பெயரில் நாணயங்களை அச்சிட்டார். தன்னுடைய ஆட்சிப் பரப்பின் அதிகாரப்பூர்வ சமயமாக சியா இசுலாமை அறிவித்தார்.[18] தொடக்கத்தில் அசர்பைசான் மற்றும் தெற்கு தாகெஸ்தானை மட்டுமே கட்டுப்பாட்டில் கொண்டிருந்தாலும், உண்மையில் சபாவியர்கள், காரா கோயுன்லு மற்றும் அக் கோயுன்லு ஆகிய அரசுகளின் சிதைவடைதலைத் தொடர்ந்து பல்வேறு அரச மரபுகள் மற்றும் அரசியல் சக்திகளுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு ஈரானில் நடந்து கொண்டிருந்த அதிகாரப் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். தப்ரீசுவில் தனது வெற்றிக்குப் பிறகு ஓர் ஆண்டு கழித்து இசுமாயில் பெரும்பாலான ஈரானை தன்னுடைய ஆட்சிப் பரப்பாக அறிவித்தார்.[18] சீக்கிரமே ஈரானை வென்று தனது ஆட்சியின் கீழ் ஒருங்கிணைத்தார். இதற்குப் பிறகு சீக்கிரமே புதிய சபாவியப் பேரரசானது துரிதமாக பகுதிகள், தேசங்கள் மற்றும் மக்களை அனைத்து திசைகளிலும் வென்றது. இதில் ஆர்மீனியா, அசர்பைசான், சார்சியாவின் பகுதிகள், மெசொப்பொத்தேமியா (ஈராக்கு), குவைத்து, சிரியா, தாகெஸ்தான், தற்போதைய ஆப்கானித்தானின் பெரும் பகுதிகள், துருக்மெனித்தானின் பகுதிகள், மற்றும் அனத்தோலியாவின் பெரும் பகுதிகள் ஆகியவை அடங்கும். பேரரசு மீதே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய இதன் பல-இன இயல்புக்கான அடித்தளத்தை இவை அமைத்தன (குறிப்பாக காக்கேசியா மற்றும் அதன் மக்களை இதில் குறிப்பிடலாம்). முதலாம் இசுமாயிலின் மகனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான முதலாம் தமஸ்ப் காக்கேசியாவில் பல படையெடுப்புகளை நடத்தினார். காக்கேசியாவானது ஷா முதலாம் இசுமாயிலின் காலத்திலிருந்து சபாவியப் பேரரசுடன் இணைக்கப்பட்டு வந்தது. இதற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்தும் இது தொடர்ந்தது. ஈரானிய மையப் பகுதிகளுக்குள் இலட்சக்கணக்கான சிர்காசியர்கள், சார்சியர்கள் மற்றும் ஆர்மீனியர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தும் பணியுடன் இது தொடங்கியது. தொடக்கத்தில் இவர்கள் மன்னரின் அந்தப்புரங்கள், பாதுகாவலர்கள் மற்றும் பேரரசின் சிறிய பிற பிரிவுகளில் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஈரானிய சமூகத்தில் ஒரு புதிய அடுக்கை உருவாக்கி, முழுவதுமாக இணைப்பதன் மூலம் கிசில்பாசு பிரிவினரின் சக்தியை இறுதியாகக் குறைக்க முடியும் என்று தமஸ்ப் நம்பினார். ஈரானிய கலைக்களஞ்சியம் குறிப்பிடுவதன்படி கிசில்பாசு என்றழைக்கப்பட்ட பேரரசின் இராணுவப் பழங்குடியின உயர்குடியினரைச் சுற்றி பிரச்சினைகள் திகழ்ந்தன. உடனடி சபாவிய குடும்பத்தின் ஓர் உறுப்பினரின் அருகிலேயே இருப்பது மற்றும் அவரைக் கட்டுப்படுத்துவது என்பது ஆன்மிக அனுகூலங்கள், அரசியல் அதிர்ஷ்டங்கள் மற்றும் பொருளியல் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளித்தது என்று கிசில்பாசு பிரிவினர் நம்பினர்.[127] ஈரானிய சமூகத்தில் இந்த புதிய காக்கேசிய அடுக்குடன், சமூகமானது முழுமையாக தகுதியை அடிப்படையாகக் கொண்டதாக மாறுவதால் கிசில்பாசு பிரிவினரைக் (அண்டை நாடான உதுமானியப் பேரரசின் காசிகளை போல கிசில்பாசி செயல்பட்டனர் என்று குறிப்பிடப்படுகிறது) கேள்வி எழுப்ப முடியாத நிலை என்ற வலிமையானது கேள்விக்குட்படுத்தப்பட்டு, முழுமையாக முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று தமஸ்ப் நம்பினார். ![]() தமஸ்ப்பால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கொள்கை மற்றும் திட்டத்தை ஷா முதலாம் அப்பாசும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவாக்கினர். அப்பாசின் ஆட்சிக் காலத்தின் போது மட்டும் சுமார் 2 இலட்சம் சார்சியர்கள், 3 இலட்சம் ஆர்மீனியர்கள் மற்றும் 1 முதல் 1.50 இலட்சம் சிர்காசியர்கள் ஈரானுக்குக் கொண்டு வரப்பட்டனர். ஈரானிய சமூகத்தில் ஒரு புதிய அடுக்கின் அடித்தளத்தை முழுமைப்படுத்தினர். இது மற்றும் அப்பாசின் தனிநபர் ஆணைகளால் கிசில்பாசு முழுவதுமாக அமைப்பு ரீதியில் கலைக்கப்பட்டது ஆகியவற்றின் மூலம் அப்பாசு இறுதியாக கிசில்பாசு அதிகாரத்தை இடமாற்றம் செய்வதில் முழுமையாக வெற்றி கண்டார். கிசில்பாசுவுக்குப் பதிலாக காக்கேசிய குலாம்கள் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய காக்கேசிய ஆக்கக் கூறுகள் (கில்மன் / غِلْمَان / "பணியாளர்கள்") சியாவுக்கு மதம் மாறியதற்குப் பிறகு கிட்டத்தட்ட எப்போதுமே முழுமையான விசுவாசத்தை தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியைப் பொறுத்து ஷாவை மட்டுமே சார்ந்திருந்தனர். கிசில்பாசுவிடமிருந்து இவ்வாறாக மாறுபட்டிருந்தனர். காக்கேசியர்களில் பிற பெரும்பாலானவர்கள் பேரரசில் கிடைக்கப் பெற்ற பிற அனைத்து சாத்தியமான செயல்பாடுகள் மற்றும் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். மேலும், அந்தப்புரம், வழக்கமான இராணுவம், கைவினைஞர்கள், விவசாயிகள் போன்றவர்களாக நியமிக்கப்பட்டனர். காக்கேசிய குடிமக்களைப் பெருமளவுக்கு பயன்படுத்திய இந்த அமைப்பானது கஜர் அரசமரபின் வீழ்ச்சி வரை தொடர்ந்து நீடித்திருந்தது. சபாவிய முடியரசர்களிலேயே மிகச் சிறந்தவரான பேரரசர் அப்பாசு (1587–1629) 1587-ஆம் ஆண்டு தனது 16-ஆம் வயதில் ஆட்சிக்கு வந்தார். முதலாம் அப்பாசு முதலில் உசுபெக் இனத்தவர்களுக்கு எதிராகச் சண்டையிட்டார். 1598-இல் ஹெறாத் மற்றும் மஸ்சாத் ஆகிய நகரங்களை மீண்டும் கைப்பற்றினார். உதுமானிய-சபாவியப் போரால் (1578-1590) இவருக்கு முன்னிருந்த ஆட்சியாளரான மொகம்மது கோதாபந்தாவால் இவை இழக்கப்பட்டிருந்தன. பிறகு அப்பாசு சபாவியரின் முதன்மையான எதிரிகளான உதுமானியர்களுக்கு எதிராகத் திரும்பினார். பகுதாது, கிழக்கு ஈராக்கு, காக்கேசிய மாகாணங்கள் மற்றும் அதைத் தாண்டிய பகுதிகள் ஆகியவற்றை மீண்டும் 1618 வாக்கில் மீண்டும் கைப்பற்றினார். 1616 மற்றும் 1618 க்கு இடையில் தனக்கு மிகுந்த விசுவாசமுடைய சார்சிய அடிபணிந்தவர்களான முதலாம் தெய்முரசு மற்றும் இரண்டாம் லுவார்சப் ஆகியோரின் கீழ்ப்படியாமையைத் தொடர்ந்து சார்சியாவில் இருந்த தனது நிலப்பரப்புகளில் ஒரு தண்டனை கொடுக்கும் படையெடுப்பை அப்பாசு நடத்தினார். ககேதி மற்றும் திபிலீசி ஆகிய பகுதிகளை அழிவுக்கு உட்படுத்தினார். 1.30[129] முதல் 2 இலட்சம்[130][131] வரையிலான சார்சிய கைதிகளை முதன்மையான ஈரானுக்குப் பிடித்துச் சென்றார். ஐரோப்பாவுக்கான முதலாவது தூதுக்குழுவைத் தொடர்ந்து இராபர்ட் சிர்லே மற்றும் அவரது சகோதரர்களின் வருகையால் பெருமளவுக்கு மேம்படுத்தப்பட்டிருந்த இவரது புதிய இராணுவமானது மேலே குறிப்பிட்ட 1603-1618-ஆம் ஆண்டுப் போரில் சபாவியரின் முதன்மையான எதிரிகளான உதுமானியர்களுக்கு எதிரான போரில் அவர்களை நொறுக்கி வெற்றி பெற்றனர். இவரது இராணுவமானது வலிமையில் உதுமானியர்களை முந்தியது. பாரசீக வளைகுடாவில் ஆங்கிலேயக் கடற்படையின் உதவியுடன் பகுரைன் (1602) மற்றும் ஓர்முசுவிலிருந்து (1622) போர்த்துகேயரை வெளியேற்ற இவரது புதிய படையானது பயன்படுத்தப்பட்டது. இவர் இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் வணிகத் தொடர்புகளை விரிவாக்கினார். ஐரோப்பிய அரச குடும்பங்களுடன் ஒரு விரிவான தொடர்புகளை நிறுவினார். இந்த உறவு முறைகளானவை முதலாம் இசுமாயிலால் ஆப்சுபர்க்கு-பாரசீகக் கூட்டணி மூலம் முன்னர் தொடங்கி வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக இராணுவ வலிமைக்காக கிசில்பாசைச் சார்ந்திருப்பதை முதலாம் அப்பாசால் உடைக்க முடிந்தது. எனவே, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை அவரால் பெற முடிந்தது. சபாவிய அரசமரபானது ஷா முதலாம் இசுமாயிலின் காலத்தின் போதே ஏற்கனவே தன்னைத் தானே நிறுவிக் கொண்டிருந்தது. ஆனால், முதலாம் அப்பாசுக்குக் கீழ் இதன் முதன்மையான எதிரியான உதுமானியப் பேரரசுடன் சேர்த்து உலகின் ஒரு முதன்மையான சக்தியாக இது உண்மையிலேயே உருவானது. உதுமானியப் பேரரசுக்கு எதிராக சமமான அளவுக்கு இப்பேரரசால் போட்டியிட முடிந்தது. ஈரானில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதையும் கூட இப்பேரரசு தொடங்கியது. இவர்களின் ஆட்சிக் காலத்தின் போது பாரசீகக் கட்டடக் கலையானது மீண்டும் செழித்தோங்கியது. பல ஈரானிய நகரங்களில் பல புதிய நினைவுச் சின்னங்கள் கட்டப்படுவதை இவர்களது ஆட்சிக் காலமானது கண்டது. இதில் இசுபகான் மிகக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக உள்ளது. ஷா முதலாம் அப்பாசு, ஷா முதலாம் இசுமாயில், ஷா முதலாம் தமஸ்ப் மற்றும் ஷா இரண்டாம் அப்பாசு ஆகியோரைத் தவிர்த்து சபாவிய ஆட்சியாளர்களில் பலர் திறன் வாய்ந்தவர்களாக இல்லை. தங்களது மாது, மது மற்றும் பிற கழிப்புச் செயல்பாடுகளில் பொதுவாக அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர். 1666-இல் இரண்டாம் அப்பாசின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்ததானது சபாவிய அரசமரபு முடிவுக்கு வந்ததின் தொடக்கத்தைக் குறித்தது. வருவாய் வீழ்ச்சியடைந்தது மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் பிந்தைய ஷாக்களில் பலர் ஆடம்பர வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினர். குறிப்பாக, ஷா சொல்தான் கொசைன் (1694–1722) மதுவுக்கான தனது விருப்பம் மற்றும் அரசை நிர்வகிப்பதில் ஈடுபாடற்ற தன்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.[132] வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நாடானது இதன் எல்லைப் புறங்களில் தொடர்ச்சியாக ஊடுருவல்களுக்கு உள்ளானது. இறுதியாக கல்சி பசுதூன் தலைவரான மிர் வைசு கான் காந்தாரத்தில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினார். அப்பகுதியின் ஈரானிய சார்சிய ஆளுநரான குர்கின் கானின் கீழான சபாவிய இராணுவத்தைத் தோற்கடித்தார். 1722-இல் அண்டை நாடான உருசியப் பேரரசின் மன்னரான முதலாம் பேதுரு உருசிய-பாரசீகப் போரைத் (1722-1723) தொடங்கினார். தெர்பெந்து, சகி, பக்கூ, ஆனால் மேலும் கிலான், மாசாந்தரான் மற்றும் அசுதிராபாத் உள்ளிட்ட ஈரானின் காக்கேசியா நிலப்பரப்புகளில் பலவற்றைக் கைப்பற்றினார். இந்த அமைதியின்மைக்கு நடுவில் அதே 1722-ஆம் ஆண்டு மிர் வைசுவின் மகனான மகுமூதுவால் தலைமை தாங்கப்பட்ட ஓர் ஆப்கான் இராணுவமானது கிழக்கு ஈரான் வழியாக அணி வகுத்து வந்தது. இசுபகானை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. மகுமூது பாரசீகத்தின் 'ஷாவாக' தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். இடைப்பட்ட வேளையில், பாரசீகத்தின் ஏகாதிபத்திய எதிரிகளான உதுமானியர்களும், உருசியர்களும் இந்நாட்டின் அமைதியின்மையைத் தங்களுக்கு மேற்கொண்ட நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொள்ள தக்க தருணமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.[133] இந்த நிகழ்வுகளின் காரணமாக சபாவிய அரசமரபானது ஆற்றல் வாய்ந்த முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 1724-இல் கான்சுடாண்டினோபிள் ஒப்பந்தத்திற்கு ஏற்றவாறு உதுமானியர்களும், உருசியர்களும் ஈரானில் புதிதாக தங்களால் வெல்லப்பட்ட நிலப்பரப்புகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.[134] நாதிர் ஷாவும், பின் வந்த ஆட்சியாளர்களும்![]() ![]() குராசானைச் சேர்ந்த ஒரு பூர்வீக ஈரானிய துருக்கிய அப்சரியப் போர்ப் பிரபுவான நாதிர் ஷாவால் ஈரானின் நிலப்பரப்பு ஒற்றுமைத் தன்மையானது மீண்டும் நிறுவப்பட்டது. இவர் ஆப்கானியர்களைத் தோற்கடித்து வெளியேற்றினார். உதுமானியர்களைத் தோற்கடித்தார். சபாவியர்களை அரியணையில் மீண்டும் அமர வைத்தார். ரெசத் மற்றும் கஞ்சா ஒப்பந்தங்களுடன் ஈரானின் காக்கேசியா நிலப்பரப்புகளில் இருந்து உருசியர்களைப் பின் வாங்கச் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார். 1736 வாக்கில் சபாவியர்களைப் பதவியிலிருந்து நீக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்ற சக்தி வாய்ந்தவராக நாதிர் உருவானார். தனக்குத் தானே ஷா பட்டத்தை முடிசூட்டிக் கொண்டார். ஆசியாவின் கடைசி மிகப்பெரிய துரந்தரர்களில் ஒருவர் நாதிர் ஷா ஆவார். அநேகமாக, உலகின் மிக சக்தி வாய்ந்த இராணுவப் படைக்கு குறுகிய காலத்திற்கு இவர் தலைமை தாங்கியிருந்தார்.[135] ஈரானின் முதன்மையான எதிரியான உதுமானியப் பேரரசுக்கு எதிராகத் தன்னுடைய போர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பெற கிழக்கே இருந்த பலவீனமான, ஆனால் செல்வச் செழிப்பு மிக்க முகலாயப் பேரரசு மீது தன்னுடைய பார்வையைத் திருப்பினார். 1739-இல் இரண்டாம் எராக்ளியசு[136][137]:55 உள்ளிட்ட தன்னுடைய விசுவாசமான காக்கேசிய அடிபணிந்தவர்களுடன் சேர்ந்து முகலாய இந்தியா மீது இவர் படையெடுத்தார். எண்ணிக்கையளவில் பெரியதாக இருந்த முகலாய இராணுவத்தை 3 மணி நேரங்களுக்குள்ளாகவே தோற்கடித்தார். தில்லியை முழுவதுமாக சூறையாடிக் கொள்ளையடித்தார். ஈரானுக்குப் பெருமளவு செல்வத்தைக் கொண்டு வந்தார். தான் திரும்பி வரும் வழியில் கோகண்ட் தவிர அனைத்து உசுபெக்கு கானரசுகளையும் கூட இவர் வென்றார். உசுபெக்குகளை தனக்கு அடி பணிந்தவர்களாக மாற்றினார். ஒட்டு மொத்த காக்கேசியா, பாகுரைன், மேலும் அனத்தோலியா மற்றும் மெசபொத்தேமியாவின் பெரும் பகுதிகள் மீது ஈரானிய ஆட்சியை உறுதியாக மீண்டும் நிறுவவும் கூட இவர் செய்தார். ஆண்டுகளுக்குத் தோற்கடிக்கப்படாமல் இருந்த இவர், லெசுகினியர்களால் நடத்தப்பட்ட கரந்தடிப் போர்முறை கிளர்ச்சிகளைத் தொடர்ந்து தாகெஸ்தானில் இவர் அடைந்த தோல்வி மற்றும் மாசாந்தரானுக்கு அருகில் இவர் மீது நடத்தப்பட்ட அரசியல் கொலை முயற்சி ஆகியவை நாதிர் ஷாவின் சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக பொதுவாகக் கருதப்படுகிறது. இவரது எரிச்சலை அதிகப்படுத்தும் விதமாக, தாகெஸ்தானியர் கரந்தடிப் போர் முறையில் ஈடுபடத் தொடங்கினர். தன்னுடைய மரபுவாத இராணுவத்துடன் அவர்களுக்கு எதிராக சிறிதளவே முன்னேற்றமடைய நாதிர் ஷாவால் முடிந்தது.[138] அந்தலால் மற்றும் அவாரியா யுத்தங்களில் நாதிரின் இராணுவமானது நொறுக்கப்பட்டு தோல்வியை அடைந்தது. தன்னுடைய ஒட்டு மொத்த படையில் பாதி பேரை இவர் இழந்தார். மேலும், மலைகளுக்குத் தப்பியோடு நிலைக்குத் தள்ளப்பட்டார்.[139][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது] இந்தப் படையெடுப்பின் போது பெரும்பாலான தாகெஸ்தானைப் பெற நாதிரால் முடிந்தாலும், லெசுகினியர் மேலும் ஆவர்கள் மற்றும் லாக்குகளாலும் நடத்தப்பட்ட ஆற்றல் வாய்ந்த கரந்தடிப் போர் முறையானது குறிப்பாக வடக்கு காக்கேசியப் பகுதியை தற்போது ஈரான் மீண்டும் வென்றதானது ஒரு குறுகிய காலமே நீடித்திருந்த ஒன்றானது. பல ஆண்டுகள் கழித்து நாதிர் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதே நேரத்தில், மாசாந்தரானுக்கு அருகில் இவர் மீது அரசியல் கொலை முயற்சி நடத்தப்பட்டது. வரலாற்றின் போக்கை இது வேகப்படுத்தியது. இவர் படிப்படியாக உடல் நலம் குன்றினார். இவருக்கு அதிகப்படியான அதிகார வெறியும், தனது சக்தி அல்லது முக்கியத்துவம் குறித்த போலியான நம்பிக்கையும் ஏற்படத் தொடங்கியது. அரசியல் கொலை முயற்சிகளுக்குக் காரணமானவர்கள் என சந்தேகித்து தன் மகன்களைத் தண்டித்தார். தன்னுடைய குடிமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அதிகரித்து வந்த குரூரத் தன்மையை வெளிக்காட்டத் தொடங்கினார். இவரது பிந்தைய ஆண்டுகளில் இது இறுதியாக பல கிளர்ச்சிகளைத் தூண்டியது. இறுதியாக, 1747-இல் நாதிர் ஷா அரசியல் கொலை செய்யப்படுவதில் இது முடிவடைந்தது.[140] எதிரி இராணுவத் தளபதிகள் அதிகாரத்திற்காகச் சண்டையிட்டதால் நாதிர் ஷாவின் இறப்பிற்குப் பிறகு ஈரானில் அரசற்ற நிலையின் ஒரு காலமானது ஏற்பட்டது. நாதிரின் சொந்த குடும்பமான அப்சரியர்கள் குராசானில் ஒரு சிறிய நிலப்பரப்பை மட்டுமே கொண்ட நிலைக்கு சீக்கிரமே வீழ்ந்தனர். காக்கேசிய நிலப்பரப்புகளில் பல பல்வேறு காக்கேசிய கானரசுகளாகப் பிரிந்து சென்றன. அனத்தோலியா மற்றும் மெசொப்பொத்தேமியாவில் இழந்த நிலப்பரப்புகளை உதுமானியர்கள் மீண்டும் பெற்றனர். ஓமான் மற்றும் உசுபெக்கு கானரசுகளான புகாரா மற்றும் கிவா ஆகியவை தங்களது சுதந்திரத்தை மீண்டும் பெற்றன. நாதிரின் அதிகாரிகளில் ஒருவரான அகமது ஷா துரானி ஒரு சுதந்திரமான அரசை நிறுவினார். இது இறுதியாக நவீன ஆப்கானித்தானாக உருவானது. அவர்களது விசுவாசமான சேவைக்காக நாதிராலேயே ககேதி மற்றும் கர்த்லியின் மன்னர்களாக 1744-இல் முறையே ஆக்கப்பட்ட இரண்டாம் எராக்ளியசு மற்றும் இரண்டாம் தெய்முரசு ஆகியோர்[137]:55 நிலையற்ற தன்மை ஏற்பட்டதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். நடைமுறை ரீதியிலான தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். இரண்டாம் தெய்முரசுவின் இறப்பிற்குப் பிறகு கர்த்லி மீதான கட்டுப்பாட்டை இரண்டாம் எராக்ளியசு பெற்றார். இவ்வாறாக இரு அரசுகளையும் கர்த்லி-ககேதி இராச்சியமாக இவர் இணைத்தார். ஓர் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்த கிழக்கு சார்சியாவை மூன்று நூற்றாண்டுகளில் முதல் முறையாக ஆட்சி செய்த சார்சிய ஆட்சியாளராக உருவானார்.[141] முதன்மையான ஈரானில் நிகழ்வுகளின் பரபரப்பான திருப்பு முனை காரணமாக சாந்து அரசமரபின் காலத்திலும் கூட நடைமுறை ரீதியிலான தன்னாட்சியுடைய ஆட்சியாளராக இவரால் தொடர முடிந்தது.[142] தன்னுடைய தலைநகரான சீராசுவிலிருந்து சாந்து அரசமரபின் கரீம் கான் "பொதுவாக குருதி தோய்ந்த மற்றும் அழிவு ஏற்பட்ட காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியான ஒரு தீவு போன்ற பகுதியை ஆண்டார்".[143] எனினும், சாந்து அதிகாரத்தின் விரிவானது சமகால ஈரான் மற்றும் காக்கேசியாவின் பகுதிகளுக்குள் மட்டுமே அடங்கியிருந்தது. 1779-இல் கரீம் கானின் இறப்பானது மற்றொரு உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்தது. இதில் கஜர் அரசமரபானது வெற்றி பெற்றது. ஈரானின் மன்னர்களாக அவர்கள் உருவாயினர். உள்நாட்டுப் போரின் போது ஈரான் 1779-இல் பசுராவை உதுமானியர்களிடம் நிரந்தரமாக இழந்தது. பசுராவை உதுமானிய-பாரசீகப் போரின் (1775-1776) போது ஈரானியர் கைப்பற்றியிருந்தனர்.[144] 1783-இல் பானி உத்பா படையெடுப்புக்குப் பிறகு அல் கலிபா குடும்பத்திடம் பகுரைனை ஈரான் இழந்தது.[சான்று தேவை] பிந்தைய நவீன காலம்கஜர் அரசமரபு (1796–1925)
கடைசி சாந்து மன்னரின் இறப்புடன் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் அகா மொகம்மது கான் வெற்றி பெற்றாவராக உருவானார். ஒரு மைய நிர்வாகத்தால் தலைமை தாங்கப்பட்ட ஒன்றிணைந்த ஈரான் மீண்டும் தோன்றுவதைக் கண்டதாக இவரது ஆட்சிக் காலமானது குறிக்கப்படுகிறது. நாதிர் ஷாவின் இறப்பு மற்றும் கடைசி சாந்துகளைத் தொடர்ந்து ஈரானின் காக்கேசியா நிலப்பரப்புகளில் பெரும்பாலானவை பல்வேறு காக்கேசியக் கானரசுகளாகப் பிரிந்து சென்றன. தனக்கு முன்னிருந்த சபாவிய மன்னர்கள் மற்றும் நாதிர் ஷாவைப் போல அகா மொகம்மது கான் இப்பகுதியை முதன்மையான ஈரானில் உள்ள நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் காணவில்லை. முதன்மையான ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்ததற்குப் பிறகு இவரது முதல் இலக்கானது காக்கேசியப் பகுதியை ஈரானுடன் மீண்டும் இணைப்பதாக இருந்தது.[145] ஈரானுடன் மிகவும் ஒன்றிணைந்த நிலப்பரப்புகளில் ஒன்றாக சார்சியாவை இவர் கண்டார்.[142] அகா மொகம்மது கானைப் பொறுத்த வரையில் சார்சியாவை மீண்டும் அடிபணிய வைத்து ஈரானியப் பேரரசுக்குள் இணைப்பது என்பது சீராசு, இசுபகான் மற்றும் தப்ரீசு ஆகிய பகுதிகளை இவரது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அதே செயல் முறையின் ஒரு பகுதியாகும்.[142] ஈரானின் கேம்பிரிட்ச் வரலாறு குறிப்பிடுவதன்படி அப்பகுதி நிரந்தரமாகப் பிரிந்து சென்றது நினைக்க முடியாததாக இருந்தது. பார்சு அல்லது கிலான் பகுதிகள் பிரிந்து செல்லும் முயற்சியை ஒருவர் எவ்வாறு எதிர்ப்பார் என்ற அதே வழியில் இதையும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.[142] நாதிர் ஷாவின் இறப்பு மற்றும் சாந்துகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சமீபத்தில் இழந்த பகுதிகளை அடி பணிய வைத்து மீண்டும் இணைக்கும் பொருட்டு தேவையான அனைத்தையும் காக்கேசியாவில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை அகா மொகம்மது கான் இயற்கையாகவே கொண்டிருந்தார். இது சார்சியாவின் வாலி (அரச அதிகாரி) செய்த ஒரு தேச துரோகம் என்ற எண்ணம் மற்றும் அதை ஒடுக்க வேண்டும் என்பது ஈரானியப் பார்வையாக இருந்தது. அரச அதிகாரியாக சார்சிய மன்னர் இரண்டாம் எரேக்ளே (இரண்டாம் எராக்ளியசு) இருந்தார். அரச அதிகாரியாக நாதிர் ஷாவாலேயே இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.[142] உருசியாவுடனான சார்சியாவின் 1783-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து இரண்டாம் எராக்ளியசு விலக வேண்டும் என்று இறுதியாக அகா மொகம்மது கான் கோரினார். ஈரானிய மேலாண்மைக்குக் கீழ் மீண்டும் அடிபணிய வேண்டும் என்று கூறினார்.[145] இதற்குக் கைமாறாக அவரது இராச்சியத்துக்கு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பெறலாம் என்று குறிப்பிட்டார். ஈரானின் அண்டை நாட்டு எதிரிகளான உதுமானியர்கள் நான்கு நூற்றாண்டுகளில் முதல் முறையாக கர்த்லி மற்றும் ககேதி ஆகிய பகுதிகள் மீதான ஈரானின் உரிமைகளை அங்கீகரித்தனர்.[146] பிறகு எராக்ளியசு தன்னுடைய கோட்பாட்டு ரீதியான பாதுகாப்பாளரான உருசியாவின் பேரரசி இரண்டாம் கத்தரீனிடம் முறையிட்டார். குறைந்தது 3,000 உருசிய துருப்புக்களைக் கொடுக்குமாறு மன்றாடினார்.[146] ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாரசீக அச்சுறுத்தலை தனியாக முறியடிக்கும் நிலைக்கு சார்சியா விடப்பட்டது.[147] எவ்வாறாயினும், கானின் இறுதி எச்சரிக்கையை இரண்டாம் எராக்ளியசு இன்னும் நிராகரித்தார்.[148] இதற்கு எதிர் வினையாக, ஆரசு ஆற்றைக் கடந்ததற்குப் பிறகு காக்கேசிய பகுதி மீது அகா மொகம்மது கான் படையெடுத்தார். சார்சியாவுக்கு தான் செல்லும் வழியில் ஈரானிய நிலப்பரப்புகளான எரிவான் கானரசு, சிர்வாண், நக்சிவான் கானரசு, கஞ்சா கானரசு, தெர்பெந்து கானரசு, பகு கானரசு, தல்யிசு கானரசு, சகி கானரசு, கரபக் கானரசு ஆகியவற்றை இவர் மீண்டும் அடி பணியச் செய்தார். நவீன கால ஆர்மீனியா, அசர்பைசான், தாகெஸ்தான் மற்றும் இக்திர் ஆகியவற்றை இக்கானரசுகள் உள்ளடக்கியிருந்தன. தன்னுடைய பெரிய இராணுவத்துடன் சார்சியாவை அடைந்ததற்குப் பிறகு கர்த்சனிசி யுத்தத்தில் இவர் வெற்றி பெற்றார். திபிலீசி கைப்பற்றப்பட்டு சூறையாடுவதில் இந்த யுத்தம் முடிவடைந்தது. மேலும், ஆற்றல் வாய்ந்த முறையில் சார்சியா அடிபணிய வைக்கப்பட்டது.[149][150] திபிலீசியில் இருந்து தன்னுடைய வெற்றிகரமான படையெடுப்பு மற்றும் அடி பணிந்த சார்சியாவின் கட்டுப்பாட்டைப் பெற்றது ஆகியவற்றிலிருந்து திரும்பி வரும் போது இவர் தன்னுடன் சுமார் 15,000 சார்சிய கைதிகளை முதன்மையான ஈரானுக்குக் கொண்டு வந்தார்.[147] முகான் சமவெளியில் 1796-இல் அகா மொகம்மது அதிகாரப்பூர்வமாக ஷாவாகப் பட்டம் சூட்டிக் கொண்டார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு முன் ஆட்சி செய்த நாதிர் ஷாவைப் போலவே இவ்வாறு பட்டம் சூட்டிக் கொண்டார். சூசாவில்[151] (தற்போது அசர்பைசானின் பகுதி) அதன் மன்னர் இரண்டாம் எராக்ளியசுவுக்கும், சார்சியாவுக்கும் எதிராக இவரது இரண்டாவது படையெடுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரத்தில் 1797-இல் அகா மொகம்மது கான் பின்னர் அரசியல் கொலை செய்யப்பட்டார். சார்சியா மீதான ஈரானின் மேலாண்மை மீண்டும் நிறுவப்பட்டதானது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. 1779-இல் உருசியர்கள் திபிலீசிக்கு அணி வகுத்தனர்.[152] 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்களுக்குத் தெற்கு இருந்த உதுமானியப் பேரரசு மற்றும் பின் வந்த ஈரானிய இராச்சியங்கள் ஆகிய தனது அண்டைப் பேரரசுகளை நோக்கி ஒரு பரப்பளவு விரிவாக்கக் கொள்கையுடன் உருசியர்கள் ஏற்கனவே செயல்பாட்டு ரீதியில் ஈடுபட்டிருந்தனர். திபிலீசிக்குள் உருசியா நுழைந்ததைத் தொடர்ந்து அடுத்த இரு ஆண்டுகளானவை குழப்பமான ஒரு காலமாக இருந்தன. சார்சியா இராச்சியமானது பலவீனமாகி அழிவுக்குட்பட்டது. அதன் தலைநகரத்தில் பாதியானது சிதிலங்களானது. 1801-இல் உருசியாவுடன் எளிதாக இணைத்துக் கொள்ளப்பட்டது.[147][148] ஈரானின் ஒன்றிணைந்த பகுதிகளாக நூற்றாண்டுகளாக திகழ்ந்ததால், தென்காக்கேசியா மற்றும் தாகெஸ்தான் பிரிந்து செல்வதை அனுமதிக்க ஈரானால் முடியாதென்பதால்,[153] இவை பல ஆண்டுகள் கழித்து நடந்த போர்களுக்கு நேரடியாக இட்டுச் சென்றது. இப்போர்கள் 1804-1813 மற்றும் 1826-1828-ஆம் ஆண்டுகளின் உருசிய-பாரசீகப் போர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு போர்களின் விளைவானது (முறையே குலிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் துருக்மென்சாய் ஒப்பந்தம்) மீள இயலாத கட்டாயப்படுத்தப்பட்ட பிரிவினை என்று நிரூபணமானது. மேலும், ஏகாதிபத்திய உருசியாவுக்கு தற்போதைய கிழக்கு சார்சியா, தாகெஸ்தான், ஆர்மீனியா மற்றும் அசர்பைசான் ஆகியவை இழக்கப்பட்டன.[154][149] தற்கால அசர்பைசான் குடியரசு, கிழக்கு சார்சியா, தாகெஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றின் நிலப்பரப்புக்கு மத்தியில் ஆரசு ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதியானது 19-ஆம் நூற்றாண்டின் போக்கில் உருசியாவால் ஆக்கிரமிக்கப்படும் வரை ஈரானிய நிலப்பரப்பாகத் திகழ்ந்தன.[155]
காக்கேசிய முசுலிம்களின் புலப்பெயர்வு![]() காக்கேசியாவில் பரந்த நிலப்பரப்புகளை அதிகாரப்பூர்வமாக இழந்ததைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் தொகை மாற்றங்களானவை நிகழத் தயாராக இருந்தன. 1804-1814-ஆம் ஆண்டின் போரைத் தொடர்ந்து, ஆனால், 1826-1828-ஆம் ஆண்டின் கடைசி நிலப்பரப்புகளை விட்டுக் கொடுத்த போரையும் கூட சார்ந்து, காக்கேசிய முகசிர்கள் என்று அழைக்கப்பட்ட பெருமளவிலான புலப்பெயர்வுகளானவை ஈரானின் முதன்மை நிலப்பகுதிக்கு மக்கள் புலம்பெயர்வதைத் தொடங்கி வைத்தன. அய்ரும்கள், கரபபகக்கள், சிர்காசியர், சியா லெசுகின்கள் மற்றும் பிற தென் காக்கேசியா முசுலிம்கள் உள்ளிட்டவை இந்தப் புலம்பெயர்ந்த குழுக்களில் சிலவாகும்.[156] உருசிய பாரசீகப் போர்களின் போது 1804-ஆம் ஆண்டில் கஞ்சா யுத்தத்திற்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான அய்ரும்களும், கரபபகக்களும் தப்ரீசுவில் குடியமர்ந்தனர். 1804-1811-ஆம் ஆண்டின் எஞ்சிய பகுதி போரின் போது, மேலும் 1826-1828-ஆம் ஆண்டு போரின் மூலமாகவும் கூட ஒரு பெரும் எண்ணிக்கையிலான அய்ரும்களும், கரபபகக்களும் புதிதாக வெல்லப்பட்ட உருசிய நிலப்பரப்புகளில் இன்னும் தொடர்ந்து தங்கியிருந்தனர். இவர்கள் நவீன கால ஈரானின் மேற்கு அசர்பைசான் மாகாணத்தில் உள்ள சோல்துசுவில் குடியமர்ந்தனர் அல்லது சோல்துசுவுக்குக் புலம்பெயர்ந்தனர்.[157] ஈரானின் கேம்பிரிட்ச் வரலாறு நூல் குறிப்பிடுவதன்படி "காக்கேசியாவில் போர் முனைக்கு நெடுகில் உருசிய துருப்புகளால் நடத்தப்பட்ட நிலையான நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு, தளபதி எர்மலோவின் மிருகத் தனமான தண்டனை கொடுத்த படையெடுப்புகள் மற்றும் அரசு நிர்வாகம் சரியற்ற நிலை ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான முசுலிம்களை மற்றும் சில சார்சிய கிறித்தவர்களையும் கூட ஈரானுக்கு நாடு கடந்து செல்வதற்குக் காரணமாயின".[158] 1864 முதல் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை காக்கேசியப் போரில் உருசிய வெற்றியின் விளைவாக காக்கேசிய முசுலிம்களின் மற்றுமொரு பெருமளவு வெளியேற்றுதலானது நடைபெற்றது. பிறர் வெறுமனே கிறித்தவ உருசிய ஆட்சியின் கீழ் வாழ தாமாக முன் வந்து மறுத்தனர். இவ்வாறாக துருக்கி அல்லது ஈரானுக்குப் புறப்பட்டனர். இந்தப் புலப்பெயர்வுகள் மீண்டும் ஒரு முறை ஈரானை நோக்கி நடைபெற்றன. இவை காக்கேசிய அசர்பைசானியர்கள், பிற தென் காக்கேசிய முசுலிம்கள், மேலும் சிர்காசியர்கள், சியா லெசுகினியர்கள் மற்றும் லக்குகள் போன்ற பல வட காக்கேசிய முசுலிம்கள் பெருமளவுக்கு புலம்பெயர்வதை உள்ளடக்கியிருந்தன.[156][159] மேற்கொண்ட ஈரானிய வரலாற்றில் இந்தப் புலம்பெயர்ந்தவர்களில் பலர் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுவதென்பதை நிரூபித்தனர். பாரசீக கொசக் இராணுவப் பிரிவின் பெரும்பாலான உயர்நிலைப் பகுதிகளில் இவர்கள் பணியாற்றினர். இப்பிரிவானது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டதாகும்.[160] இந்த இராணுவப் பிரிவின் தொடக்க கால உயர்நிலைகளானவை ஒட்டு மொத்தமாக சிர்காசியர்கள் மற்றும் பிற காக்கேசிய முகாசிர்களால் நிரப்பப்பட்டிருந்தன.[160] கஜர் வரலாற்றில் பின் வந்த தசாப்தங்களில் இந்த இராணுவப் பிரிவானது தீர்க்கமான பங்கை ஆற்றுவதென்பதை நிரூபித்தது. மேற்கொண்டு, 1828-ஆம் ஆண்டின் துருக்மென்சாய் ஒப்பந்தமானது புதிதாக வெல்லப்பட்ட உருசிய நிலப்பரப்புகளில் ஈரானிலிருந்து ஆர்மீனியர்களைக் குடியமர வைப்பதை உருசியப் பேரரசு ஊக்குவிப்பதற்கான அதிகாரப்பூர்வ உரிமைகளை உள்ளடக்கியிருந்தது.[161][162] 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கிழக்கு ஆர்மீனியாவில் ஆர்மீனியர்கள் ஒரு பெரும்பான்மையினராகத் திகழ்ந்தனர்.[163] 14-ஆம் நூற்றாண்டின் முடிவில் தைமூரின் படையெடுப்புகளுக்குப் பிறகு தைமூரிய மறுமலர்ச்சியானது செழித்திருந்தது. இப்பகுதியில் இசுலாமானது பெரும்பான்மையை நம்பிக்கையாக மாறியது. கிழக்கு ஆர்மீனியாவில் ஆர்மீனியர்கள் சிறுபான்மையினராக மாறினர்.[163] ஆர்மீனிய மேட்டு நிலங்களில் நூற்றாண்டுகளுக்கு நடைபெற்ற தொடர்ச்சியான போர்களுக்குப் பிறகு பல ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியமர்வதைத் தேர்ந்தெடுத்தனர். 1604-1605-இல் ஆர்மீனியர்கள் மற்றும் முசுலிம்களைப் பெருமளவுக்கு இடம் மாற்றிய பேரரசர் அப்பாசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து[164] இவர்களது எண்ணிக்கையானது மேலும் வீழ்ச்சியடைந்தது. ஈரான் மீது உருசியப் படையெடுப்பு நடைபெற்ற நேரத்தில், ஈரானிய ஆர்மீனியாவில் இருந்த மக்களில் சுமார் 80% முசுலிம்களாகவும் (பாரசீகர்கள், துருக்கியர்கள் மற்றும் குர்துகள்), அதே நேரத்தில், கிறித்தவ ஆர்மீனியர்கள் சிறுபான்மையினராக சுமார் 20% ஆக இருந்தனர்.[165] குலிஸ்தான் ஒப்பந்தம் (1813) மற்றும் துருக்மென்சாய் ஒப்பந்தம் (1828) ஆகியவற்றின் விளைவாக ஈரானிய ஆர்மீனியாவை உருசியர்களிடம் (தற்கால ஆர்மீனியாவையும் இது உள்ளடக்கியிருந்தது) விட்டுக் கொடுக்கும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது.[166][167] ஈரானிய ஆர்மீனியாவை உருசிய நிர்வாகமானது பெற்றதற்குப் பிறகு மக்கள் தொலையின் இன சதவீதமானது மாறியது. இவ்வாறாக முதல் முறையாக நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் வரலாற்று ரீதியிலான ஆர்மீனியாவின் ஒரு பகுதியில் ஆர்மீனியர்கள் ஒரு பெரும்பான்மையினராக மாறத் தொடங்கினர்.[168] உண்மையான ஈரான் மற்றும் உதுமானியத் துருக்கியிலிருந்து ஆர்மீனிய இனத்தவர்கள் குடியமர வருவதை புதிய உருசிய நிர்வாகமானது ஊக்குவித்தது. இதன் விளைவாக, 1832 வாக்கில், ஆர்மீனிய இனத்தவர்களின் எண்ணிக்கையானது முசுலிம்களின் எண்ணிக்கைக்குச் சமமாக ஆனது.[165] கிரிமியப் போர், மற்றும் துருக்கிய ஆர்மீனியர்களை மற்றுமொரு முறை திரளாக வர வைத்த 1877-1878-ஆம் ஆண்டின் உருசிய-துருக்கியப் போருக்குப் பிறகு தான் கிழக்கு ஆர்மீனியாவில் ஒரு நிலையான பெரும்பான்மையை ஆர்மீனிய இனத்தவர்களால் மீண்டும் ஒரு முறை நிறுவ முடிந்தது.[169] எவ்வறாயினும், எரிவான் நகரமானது இருபதாம் நூற்றாண்டு வரை ஒரு முசுலிம் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது.[169] பயணி எச். எஃப். பி. லிஞ்சின் கூற்றுப்படி, 1890 களின் தொடக்கத்தில் எரிவான் நகரமானது சுமார் 50% ஆர்மீனியர் மற்றும் 50% முசுலிம்களைக் (தாதர்கள்[a] அதாவது அசேரிகள் மற்றும் பாரசீகர்கள்) கொண்டிருந்தது.[172] பத் அலி ஷாவின் ஆட்சிக் காலமானது மேற்குலகத்துடன் அதிகரித்து வந்த தூதரகத் தொடர்புகளைக் கண்டது. ஈரான் மீதான செறிவான ஐரோப்பிய தூதரக எதிர்ப்புகளைத் தொடங்கியது. 1834-ஆம் ஆண்டு இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவரது பேரன் மொகம்மது ஷா உருசிய செல்வாக்கின் கீழ் வந்தார். ஹெறாத்தைக் கைப்பற்ற இரு தோல்வியடைந்த முயற்சிகளை மேற்கொண்டார். 1848-இல் மொகம்மது ஷா இறந்த போது அவரது மகன் நசேர் அல்-தீன் ஷா கஜர் ஆட்சிக்கு வந்தார். கஜர் அரசமரபின் இறையாண்மையுடைய ஆட்சியாளர்களிலேயே மிக ஆற்றல் வாய்ந்தவர் மற்றும் மிக வெற்றிகரமானவர் என இவர் நிரூபித்தார். ஈரானில் முதல் நவீன மருத்துவமனையை இவர் தொடங்கி வைத்தார்.[173] அரசியலமைப்புப் புரட்சியும், பதவி நீக்கமும்1870-1871-ஆம் ஆண்டின் பெரும் பாரசீகப் பஞ்சமானது 20 இலட்சம் மக்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[174] 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகளில் ஷாவுக்கு எதிராக நடைபெற்ற பாரசீக அரசியலமைப்புப் புரட்சியுடன் ஈரானின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமானது உதித்தது. ஷா தனது சக்தியைத் தக்க வைத்துக் கொண்டார். 1906-இல் ஒரு வரம்புக்குட்பட்ட அரசியலமைப்பை அளித்தார் (இது நாட்டை ஓர் அரசியல் சட்ட முடியாட்சியாக்கியது). நாட்டின் முதல் மச்லிசு (நாடாளுமன்றம்) ஆனது 7 அக்டோபர் 1906 அன்று கூட்டப்பட்டது. 1908-இல் பிரித்தானியரால் கூசித்தானில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பாரசீகத்தின் மீது செறிவான மீண்டும் தோன்றிய ஆர்வத்தை பிரித்தானியப் பேரரசுக்கு இது அதிகப்படுத்தியது. பாரசீகத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான போட்டியானது தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் உருசியாவுக்கு இடையில் நடைபெற்றறது. இதுவே பிற்காலத்தில் பெரும் விளையாட்டு என்று அறியப்பட்டது. 1907-ஆம் ஆண்டில் ஆங்கிலேய உருசிய கூட்டத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் தேசிய இறையாண்மையைப் பொருட்படுத்தாமல் மேற்குறிப்பிட்ட இரு நாடுகளின் செல்வாக்குப் பகுதிகளாக ஈரானை இது பிரித்தது. முதலாம் உலகப் போரில் ஈரானானது பிரித்தானிய, உதுமானிய மற்றும் உருசியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து நடு நிலை வகித்தது. உருசியப் புரட்சி மற்றும் 1919-இல் உருசியர்களின் பின்வாங்கலுக்குப் பிறகு, ஈரானில் தங்களது ஒரு பாதுகாப்புப் பகுதியை நிறுவ பிரித்தானியர் முயற்சித்தனர். ஆனால், இம்முயற்சி தோல்வியடைந்தது. இறுதியாக, கிலான் அரசியலமைப்புவாத இயக்கம் மற்றும் கஜர் அரசாங்கத்தின் நிலையற்ற தன்மையால் ஏற்பட்ட மைய சக்தி வெற்றிடம் ஆகியவை ரெசா கானின் வளர்ச்சிக்குக் காரணமாயின. இவர் பிற்காலத்தில் ரெசா ஷா பகலவி என்று அழைக்கப்பட்டார். 1925-இல் பகலவி அரசமரபை இவர் நிறுவினார். 1921-இல் பாரசீக கொசக் இராணுவப் பிரிவின் ஓர் அதிகாரியான ரெசா கான் (செய்யெது சியாவேதின் தபதபையுடன் சேர்ந்து) அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தலைமை தாங்கினார். இதில் அரசின் பெயரளவு தலைமைத்துவமானது கஜர் முடியாட்சியிடமே விடப்பட்டது.[175] 1925-இல் இரு ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்ததற்குப் பிறகு ரெசா கான் கஜர் அரசமரபைப் பதவியிலிருந்து நீக்கினார். பகலவி அரசமரபின் முதல் ஷாவாகப் பதவிக்கு வந்தார். பகலவி காலம் (1925–1979)ரெசா சா (1925–1941)16 செப்டம்பர் 1941 வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு ரெசா ஷா பகலவி ஆட்சி செய்தார். அந்நாளில் ஈரான் மீதான ஆங்கிலேய-சோவியத் படையெடுப்பால் பதவியில் இருந்து விலகும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். தேசியவாதம், இராணுவவாதம், சமயச் சார்பின்மை மற்றும் பொதுவுடைமைவாதத்திற்கு எதிரான நிலை ஆகியவற்றுக்கு மதிப்பளித்த ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை இவர் நிறுவினார். இதனுடன் கடுமையான தணிக்கை மற்றும் பரப்புரையிலும் இவரது அரசாங்கம் ஈடுபட்டது.[176] ரெசா ஷா பல சமூக-பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இராணுவம், அரசாங்க நிர்வாகம் மற்றும் நிதித்துறை ஆகியவற்றை மீண்டும் ஒருங்கிணைத்தார்.[177] இவரது ஆதரவாளர்களைப் பொறுத்த வரையில் இவரது ஆட்சிக் காலமானது "சட்டம் மற்றும் ஒழுங்கு, ஒழுக்கம், மைய அதிகாரம், மற்றும் நவீன வசதிகள் - பள்ளிகள், தொடருந்துகள், பேருந்துகள், வானொலிகள், திரையரங்குகள் மற்றும் தொலைபேசிகள்" ஆகியவற்றைக் கொண்டு வந்தது.[178] எனினும், நவீனமயமாக்கத்திற்கான இவரது முயற்சிகளானவை "மிக வேகமாக"[179] மற்றும் "மேலோட்டமாக"[180] இருந்ததாக விமர்சிக்கப்பட்டன. இவரது ஆட்சிக் காலமானது "காவல் அரசை ஒத்த பாதுகாப்புடன்" சேர்த்து "ஒடுக்கு முறை, இலஞ்ச ஊழல், அதிகப்படியான வரி விதிப்பு, உண்மைத் தன்மை இல்லாத நிலை" ஆகியவற்றின் ஒரு காலமாகத் திகழ்ந்தது.[178] புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளில் பல சமய ஈடுபாடு மிக்க முசுலிம்கள் மற்றும் மதகுருமார்கள் மத்தியில் வெறுப்புணர்ச்ச்சியை உருவாக்கியது. எடுத்துக்காட்டாக, மசூதிகளில் இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அகலமான அடிப்பகுதியையுடைய ஒரு தொப்பியுடன் கூடிய சட்டை உள்ளிட்ட மேற்குலக பாணி உடைகளைப் பெரும்பாலான ஆண்கள் அணிய வேண்டியிருந்தது. ஹிஜாப்பைத் தவிர்க்கப் பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ஹிஜாப் இறுதியாகத் தடை செய்யப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக இணைந்து கலந்திருக்க அனுமதியளிக்கப்பட்டது. பாலினங்கள் கலந்திருப்பதைத் தவிர்க்கும் இசுலாமிய பழக்க வழக்கத்தை மீறியதாக இது இருந்தது. 1935-இல் பதற்றங்களானவை அதிகரித்தன. அப்போது பசாரியரும், கிராமத்தினரும் மஸ்சாத்தில் உள்ள இமாம் ரெசா சன்னிதியில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர். ஹிஜாப் தடைக்கான திட்டங்களுக்கு எதிராகப் போராடினர். "ஷா ஒரு புதிய எசித்" போன்ற முழக்கங்களை எழுப்பினர். துருப்புகள் இறுதியாக அமைதியின்மையை ஒடுக்கிய போது தசம கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் இருந்தனர்.[181] இரண்டாம் உலகப் போர்1943 இல் தெகுரான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் பிராங்ளின் டிலானோ ரூசவெல்டுடன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக செருமானிய இராணுவங்களானவை அதிக அளவு வெற்றிகரமாகத் திகழ்ந்த அதே நேரத்தில், செருமனி போரை வென்று தனது எல்லைகளில் ஒரு சக்தி வாய்ந்த நாட்டை நிறுவும் என ஈரானிய அரசாங்கமானது எதிர்பார்த்தது. ஈரானிலிருந்து செருமானிய மக்களை வெளியேற்ற பிரித்தானியா மற்றும் சோவியத் ஒன்றிய கோரிக்கைகளை ஈரான் நிராகரித்தது. இதற்கு எதிர் வினையாக ஆகத்து 1941-இல் இரு நேச நாடுகளும் ஈரான் மீது படையெடுத்தன. ஈரான் மீதான ஆங்கிலேய-சோவியத் படையெடுப்பில் பலவீனமான ஈரானிய இராணுவத்தை எளிதாகத் திணறடித்தன. சோவியத் ஒன்றியத்திற்கு உதவியளித்த நேச நாடுகளின் கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான வழியாக ஈரான் உருவானது. ஈரானிய கச்சா எண்ணெய் வயல்களைப் பாதுகாப்பது மற்றும் நேச நாடுகளுக்கு இராணுவப் பொருட்கள் வழங்கும் வழிகளை உறுதி செய்வது ஆகியவை இதன் குறிக்கோள்களாக இருந்தன. ஈரான் அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து நடுநிலை வகித்தது. பின் தொடர்ந்த ஆக்கிரமிப்பின் போது ஈரானின் முடியரசரான ரேசா ஷா பகலவி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அவரது இளைய மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி அரியணையில் அமர வைக்கப்பட்டார்.[182] 1943-ஆம் ஆண்டின் தெகுரான் மாநாட்டில் நேச நாடுகள் தெகுரான் அறிவிப்பை வெளியிட்டன. போருக்குப் பிந்தைய ஈரானின் விடுதலை மற்றும் எல்லைகளுக்கு இது உத்திரவாதம் அளித்தது. எனினும், போர் உண்மையில் முடிவுக்கு வந்த போது வடமேற்கு ஈரானில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சோவியத் துருப்புகள் பின் வாங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் குறுகிய காலமே நீடித்திருந்த நாடுகளை நிறுவிய கிளர்ச்சிகளுக்கு ஆதரவும் அளித்தன. அசர்பைசான் மற்றும் ஈரானிய குர்திசுதானின் வடக்குப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட முறையே அசர்பைசான் மக்கள் அரசாங்கம் மற்றும் குர்திசுதான் குடியரசு போன்ற இந்தப் பிரிவினைவாத தேசிய அரசுகள் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவாக இருந்தன. இவை 1945 இன் பிந்தைய பகுதியில் உருவாக்கப்பட்டன. மே 1946-இல் கச்சா எண்ணெய் சலுகைகள் கொடுக்கப்படும் என ஓர் உத்திரவாதத்தை பிறகு பெறும் வரை முதன்மையான ஈரான் பகுதியில் இருந்து சோவியத் துருப்புக்கள் பின் வாங்கவில்லை. வடக்கில் உருவாக்கப்பட்ட சோவியத் குடியரசுகள் சீக்கிரமே ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டன. கச்சா எண்ணெய் சலுகைகளுக்குக் கொடுக்கப்பட்ட உறுதி மொழியானது திரும்பப் பெறப்பட்டது.[183][184] மொகம்மது-ரெசா சா (1941–1979)இரண்டாம் உலகப் போரின் ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய ஈரானானது ஓர் அரசியல் சட்ட முடியாட்சியாக மாறும் என தொடக்கத்தில் மேற்குலக நாடுகள் எண்ணின. புதிய இளம் ஷா முகம்மத் ரிசா ஷா பஹ்லவி அரசாங்கத்தில் தொடக்கத்தில் தலையிடவில்லை. நாடாளுமன்றம் அதன் அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு அனுமதியளித்தார். முதல் நிலையத்த ஆண்டுகளில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் சில தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிறகு நாடாளுமன்றமானது நிலையற்றதானது. 1947 முதல் 1951 வரையிலான காலகட்டத்தில் ஆறு வெவ்வேறு பிரதமர்கள் பதவிக்கு வருவதையும், விலகுவதையும் ஈரான் கண்டது. 1949-இல் ஈரான் அரசியலமைப்பு மன்றத்தைக் கூட்டியதன் மூலம் தன்னுடைய அரசியல் அதிகாரத்தைப் பகலவி அதிகரித்தார். இந்த மன்றமானது ஈரானின் மேலவையை இறுதியாக உருவாக்கியது. 1906-ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் அனுமதியளிக்கப்பட்டு இருந்த ஒரு சட்டமன்ற மேலவை இதுவாகும். ஆனால், அந்நேரம் வரை இந்த அவை கொண்டு வரப்படவில்லை. பகலவி நினைத்ததைப் போலவே புதிய மேலவை உறுப்பினர்கள் பெரும்பாலும் பகலவிக்கு ஆதரவாக இருந்தனர். 1951-இல் பிரதமர் மொகம்மெது மொசாத்தேக் பிரித்தானியரின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெய்த் தொழிற்துறையை தேசியமயமாக்க நாடாளுமன்றத்தில் தேவைப்பட்ட வாக்குகளைப் பெற்றார். பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பிரித்தானிய அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தேசியமயமாக்கல் தொடர்ந்தது. 1952-இல் மொசாத்தேக் குறுகிய காலத்திற்கு அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், சீக்கிரமே ஷாவால் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்குக் காரணம் மக்கள் மத்தியில் பிரதமருக்கு ஆதரவாக ஏற்பட்ட போராட்டங்களே ஆகும். ஏகாதிபத்திய பாதுகாவலர்களின் கர்னலான நெமத்தோல்லா நசீரியால் மொசாத்தேக்குக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு தோல்வியடைந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ஆகத்து 1953-இல் குறுகிய காலம் நாடு கடந்து வாழும் நிலைக்கு சா தள்ளப்பட்டார். 1953: மொசாத்தேக்கை நீக்க அமெரிக்க உதவியுடன் ஆட்சிக் கவிழ்ப்புஇதற்குப் பிறகு சீக்கிரமே 19 ஆகத்து அன்று ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி பசுலோல்லா சகேதியால் ஒரு வெற்றிகரமான ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஐக்கிய அமெரிக்கா (நடுவண் ஒற்று முகமை)[185] உதவி புரிந்தது. பிரித்தானிய எம்ஐ6 ஒற்று அமைப்பு செயல்பாட்டு ரீதியிலான ஆதரவைக் கொடுத்தது.[186] மொசாத்தேக்குக்கு எதிராக மக்களைத் திசை திருப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருப்பு பிரச்சார வகையின் (இப்பிரச்சாரத்தால் பாதிக்கப்படுபவர்கள் தான் இப்பிரச்சாரத்தை உருவாக்கினர் என நம்ப வைத்தல்) மூலம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பானது மொசாத்தேக்கைப் பதவியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளியது.[187] மொசாத்தேக் கைது செய்யப்பட்டார். தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது குடும்பப் பண்ணையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில், இவரது வெளியுறவு அமைச்சர் கொசேன் பதேமி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். சகேதி மொசாத்தேக்குக்குப் பிறகு பிரதமராகப் பதவிக்கு வந்தார். ஷாவுக்கு எதிராக நடந்த போராட்டங்களை ஒடுக்கினார். குறிப்பாக, தேசிய முன்னணி மற்றும் பொதுவுடமைவாத துதே கட்சி ஆகிய கட்சிகளை ஒடுக்கினார். 1979-இல் இசுலாமியப் புரட்சி நடைபெறும் காலம் வரையில் அமெரிக்க ஆதரவுடன் ஷாவுக்குக் கீழ் ஈரான் ஒரு சர்வாதிகார நாடாக ஆளப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஈரானிய எண்ணெய்த் தொழிற்துறையை இயக்கிய அயல்நாட்டு நிறுவனங்களின் ஒரு பன்னாட்டுக் கூட்டமைப்புடன் ஈரானிய அரசாங்கமானது ஒப்பந்தத்தில் நுழைந்தது. இருவருக்கும் 50% மற்றும் 50% ஆக இலாபத்தைப் பிரித்துக் கொள்வது என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தங்களது கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்ய அந்நிறுவனங்கள் ஈரானை அனுமதிக்கவில்லை. தங்களது இயக்குநர்களின் வாரியத்தில் உறுப்பினர்களாக ஈரானியர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 1957-இல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவச் சட்ட அமல்படுத்தலானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஈரான் மேற்குலகத்துக்கு நெருங்கிய நாடானது. பாக்தாத் உடன்படிக்கையில் இணைந்தது. ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து இராணுவ மற்றும் பொருளாதார உதவியைப் பெறத் தொடங்கியது. 1961-இல் ஷாவின் வெள்ளைப் புரட்சி என்று அறியப்பட்ட நாட்டை நவீனமாக்கும் ஒரு தொடர்ச்சியான பொருளாதார, சமூக, வேளாண்மை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஈரான் தொடங்கியது. சீர்திருத்தங்களில் மையமாக நிலச்சீர்திருத்தமானது திகழ்ந்தது. நவீனமயமாக்கலும், பொருளாதார வளர்ச்சியும் அதற்கு முன்னர் இருந்திராத வீதத்தில் நடைபெற்றன. உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஈரானின் பரந்த கச்சா எண்ணெய் வளங்களால் இது உந்தப்பட்டது. எனினும், வெள்ளைப் புரட்சி உள்ளிட்ட சீர்திருத்தங்களானவை பொருளாதார நிலைகளைப் பெரும் அளவுக்கு முன்னேற்றவில்லை. தாராண்மை மேற்குலக-சார்புக் கொள்கைகளானவை சில இசுலாமிய சமய மற்றும் அரசியல் குழுக்களை ஒதுக்கின. சூன் 1963 இன் தொடக்கத்தில் ஷாவைத் தாக்கிப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட அயதோல்லா ரூகொல்லா கொமெய்னிக்கு ஆதரவாகப் பெருமளவு ஆர்ப்பாட்டங்களானவை பல நாட்களுக்கு நடைபெற்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் அசன் அலி மன்சூர் அரசியல் கொலை செய்யப்பட்டார். உள்நாட்டு பாதுகாப்பு சேவைத் துறையான சவாக் அதிகப்படியாக வன்முறை ரீதியில் செயல்படத் தொடங்கியது. 1970 களில் முசாகிதீன்-இ-கல்க் போன்ற இடது சாரி கரந்தடிப் போர் முறைக் குழுக்களானவை தோன்றின. 1979-ஆம் ஆண்டின் ஈரானியப் புரட்சி என்பது ஷாவைப் பதவியில் இருந்து தூக்கி எறிவதற்குப் பங்களித்தன. ஈரானியப் புரட்சிக்கு முந்தைய தசாப்தத்தின் போது கிட்டத்தட்ட 100 ஈரானிய அரசியல் கைதிகள் சவாக்கால் கொல்லப்பட்டனர். பலர் மேலும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.[188] 1964-இல் நாடு கடந்து வாழத் தொடங்கிய அயதோல்லா ரூகொல்லா கொமெய்னியால் தலைமை தாங்கப்பட்ட இசுலாமிய மத குருமார்கள் தமது கருத்துகளை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடத் தொடங்கினர். ஈரான் தனது இராணுவச் செலவீனத்தைப் பெருமளவுக்கு அதிகரித்தது. 1970 களின் தொடக்கம் வாக்கில் இப்பிராந்தியத்தின் மிக வலிமையான இராணுவ சக்தியாக உருவானது. ஈராக்குடனான இரு தரப்பு உறவு முறைகளானவை நன்முறையில் இல்லை. இதற்கு முதன்மையான காரணம் சாட் அல் அராப் ஆற்று நீர்வழி குறித்து இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையே ஆகும். நவம்பர் 1971-இல் பாரசீக வளைகுடாவின் கழிமுகத்தில் இருந்த மூன்று தீவுகளின் கட்டுப்பாட்டை ஈரானியப் படைகள் கைப்பற்றின. பதிலுக்கு ஈராக் ஆயிரக்கணக்கான ஈரானிய நாட்டவர்களை வெளியேற்றியது. ஏப்ரல் 1969-இல் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிரச்சினைகளைத் தொடர்ந்து 1937-ஆம் ஆண்டின் சாதபாத் உடன்படிக்கையை ஈரான் இரத்து செய்தது. அந்த உடன்படிக்கைக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டது. 1973-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கச்சா எண்ணெய் தொழிற்துறையை நாட்டின் கட்டுப்பாட்டுக்கே ஷா மீண்டும் திருப்பியளித்தார். 1973 அக்டோபரின் அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து மேற்குலகம் மற்றும் இசுரேலுக்கு எதிரான அரேபிய கச்சா எண்ணெய் ஏற்றுமதித் தடையில் ஈரான் இணையவில்லை. மாறாக, இச்சூழ்நிலையை கச்சா எண்ணெய் விலைகளை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தியது. நவீனமயமாக்கத்திற்கும், இராணுவச் செலவீனத்தை அதிகரிப்பதற்கும் இதிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தியது. 6 மார்ச்சு 1975 அன்று கையொப்பமிடப்பட்ட அல்சியேர்சு ஒப்பந்தத்துடன் ஈராக்கு மற்றும் ஈரானுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையானது தீர்க்கப்பட்டது. சமகாலம்புரட்சியும், இசுலாமியக் குடியரசும் (1979-தற்காலம்)![]() இசுலாமியப் புரட்சி[189] என்றும் கூட அறியப்படும் ஈரானியப் புரட்சியானது ஷா முகம்மத் ரிசா ஷா பஹ்லவியின் கீழான ஓர் ஒட்டு மொத்த முடியாட்சியிலிருந்து அயதோல்லா ரூகொல்லா கொமெய்னிக்குக் கீழான ஓர் இசுலாமியக் குடியரசாக ஈரானை மாற்றிய புரட்சியாகும். ரூகொல்லா கொமெய்னி புரட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், இசுலாமியக் குடியரசை நிறுவியவராகவும் உள்ளார்.[23] இப்புரட்சியின் காலமானது சனவரி 1978-இல் முதல் முதன்மையான போராட்டங்களுடன் தொடங்கியதாகக் குறிப்பிடலாம்.[190] திசம்பர் 1979-இல் புதிய சமயச் சார்பாட்சி அரசியலமைப்பின் அங்கீகாரத்துடன் இது முடிவடைந்தது. இதில் அயதோல்லா கொமெய்னி நாட்டின் அதியுயர் தலைவரானார்.[191] இதற்கிடையில் நாட்டை வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் முடக்கியதற்குப் பிறகு சனவரி 1979-இல் நாடு கடந்து வாழ்வதற்காக முகம்மத் ரிசா ஷா பஹ்லவி நாட்டை விட்டு வெளியேறினார். 1 பெப்ரவரி 1979 ஒன்று அயதோல்லா கொமெய்னி தெகுரானுக்குத் திரும்பி வந்தார்.[191] ஆயுதமேந்திய தெருச் சண்டையில் ஷாவுக்கு விசுவாசமான துருப்புக்களை கரந்தடிப் போர் முறையினர் மற்றும் புரட்சியாளர் துருப்புக்கள் திணறடித்ததற்குப் பிறகு ஈரானின் இராணுவமானது "நடுநிலை" வகிப்பதாக 11 பெப்ரவரி அன்று அறிவித்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே பகலவி அரசமரபின் இறுதி வீழ்ச்சியானது நடைபெற்றது. 1 ஏப்ரல் 1979 அன்று ஓர் இசுலாமியக் குடியரசாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உருவானது. ஒரு நாளுக்கு முன்னர் ஒரு தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பில் ஈரானியர்கள் பெரும்பான்மையாக இந்த மாற்றத்தை அங்கீகரித்ததற்குப் பிறகே இசுலாமியக் குடியரசானது.[192] 1979 ஈரானியப் புரட்சியின் சித்தாந்தம்இந்நாட்டின் தனித்துவமான அரசியல் அமைப்பானது வெலாயத்-இ பகிக் என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டதாகும். முசுலிம்கள் முன்னணி இசுலாமிய சட்டவியலாளர் அல்லது சட்டவியலாளர்களால் ஆட்சி அல்லது மேற்பார்வையிடுதல் வழியாக "பாதுகாப்பைக்" கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துருவை இது முன் வைத்தது.[193] கொமெய்னி 1989-ஆம் ஆண்டில் அவரது இறப்பு வரை இந்நாட்டின் ஆட்சி செய்யும் சட்டவியலராக அல்லது அதியுயர் தலைவராகச் சேவையாற்றினார். ஈரானின் துரிதமாக நவீனமயமாக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரமானது இசுலாமிய பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கொள்கைகளால் இடமாற்றம் செய்யப்பட்டது. பெரும்பாலான தொழிற்துறையானது தேசியமயமாக்கப்பட்டது, சட்டங்களும், பள்ளிகளும் இசுலாமியமயமாக்கப்பட்டன மற்றும் மேற்குலகத் தாக்கங்களானவை தடை செய்யப்பட்டன. இசுலாமியப் புரட்சியானது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தையும் கூட ஏற்படுத்தியது. முசுலிம்கள் சாராத உலகத்தில் இசுலாம் குறித்த கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. இசுலாமின் அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்த பெருமளவு ஆர்வத்தை அந்நாடுகளில் தூண்டியது.[194] கொமெய்னி (1979–1989)1979 முதல் 3 சூன் 1989 அன்று இவரது இறப்பு வரை கொமெய்னி புரட்சியின் தலைவர் அல்லது அதியுயர் தலைவராகச் சேவையாற்றினார். கொமெய்னிக்குக் கீழ் ஒரு சமயச் சார்பாட்சி குடியரசாக புரட்சியானது நிலை நிறுத்தப்பட்டது, மற்றும் ஈராக்குடனான செலவீனத்தை ஏற்படுத்திய மற்றும் குருதி தோய்ந்த போராலும் இக்காலமானது குறிக்கப்படுகிறது. இந்த நிலை நிறுத்துதலானது 1982-3 வரை நீடித்தது.[195][196] இந்நாட்டின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் அரசு எந்திரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஈரான் வெற்றிகரமாக சமாளித்தது. முன்னர் புரட்சியாளர்களின் கூட்டாளிகளாக இருந்து தற்போது எதிரிகளாக மாறிய சமயச் சார்பற்றவர்கள், இடதுசாரிகள் மற்றும் அதிகப்படியான பழமை வாத முசுலிம்கள் ஆகியோரால் நடத்தப்பட்ட போராட்டங்களும், கிளர்ச்சிகளும் ஆற்றல் வாய்ந்த தன்மையுடன் ஒடுக்கப்பட்டன. புதிய அரசால் பல அரசியல் எதிரிகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். புரட்சியின் நிகழ்வுகளைத் தொடர்ந்து மார்க்சிய கரந்தடிப் போர் முறையினர் மற்றும் கூட்டாட்சிக் கட்சிகள் கூசித்தான், குர்திஸ்தான் மற்றும் கோன்பத்-இ கபுசு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியாளர்கள் மற்றும் புரட்சிப் படையினருக்கு இடையில் கடுமையான சண்டைக்கு இது வழி வகுத்தது. இச்சண்டைகள் ஏப்ரல் 1979 தொடங்கின. பல மாதங்கள் முதல் ஓர் ஆண்டுக்கும் மேலாக சண்டைகளானவை மாகாணத்தைப் பொறுத்து நீடித்தன. ஈரானிய குர்திஸ்தானின் சனநாயகக் கட்சியால் நடத்தப்பட்ட குர்திய கிளர்ச்சியானது இதில் மிக வன்முறை நிகழ்ந்ததாக இருந்தது. இது 1983-ஆம் ஆண்டு வரை நீடித்தது. 10,000 பேர் இறப்பதற்குக் காரணமானது. அரசியலமைப்பின் நிபுணர்களின் மன்றத்தால் வடிவமைக்கப்பட்டதன் படி 1979-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு புதிய அரசியல் அமைப்பானது கொமெய்னிக்கு பாதுகாப்பு சட்டவியல் அதியுயர் தலைவர்[197] என்ற சக்தி வாய்ந்த பதவியையும், சட்டமியற்றும் அவைகள் மற்றும் தேர்தல்கள் மீது பாதுகாவலர்களின் ஒரு மதகுரு மன்றத்தின் சக்தியையும் கொடுத்தது. திசம்பர் 1979-இல் பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியல் அமைப்பானது அங்கீகரிக்கப்பட்டது. ஈரான் பிணையக் கைதி பிரச்சினை (1979–1981)இசுலாமியக் குடியரசின் வரலாற்றில் ஒரு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்திய தொடக்க கால நிகழ்வானது ஈரானிய பிணையக் கைதி பிரச்சினையாகும். புற்றுநோய் சிகிச்சைக்காக ஐக்கிய அமெரிக்காவுக்குள் ஈரானின் முந்தைய ஷாவை அனுமதித்ததைத் தொடர்ந்து 4 நவம்பர் 1979 அன்று ஈரானிய மாணவர்கள் ஐக்கிய அமெரிக்க தூதரக ஊழியர்களைப் பிடித்தனர். ஷாவை விசாரணைக்காக ஈரானிடம் ஒப்படைக்குமாறு கூறினர். தூதரகத்தை "ஒற்றர்களின் குகை" என்று அழைத்தனர்.[198] சனவரி 1981 வரை 444 நாட்களுக்கு 52 பிணையக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.[199] பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கு நடத்தப்பட்ட ஓர் அமெரிக்க இராணுவ முயற்சியானது தோல்வியில் முடிந்தது.[200] தூதரகத்தைக் கைப்பற்றியது ஈரானில் பெருமளவுக்குப் பிரபலமானதாக இருந்தது. பிணையக் கைதிகளை பிடித்தவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு ஒன்று கூடினர். ரூகொல்லா கொமெய்னியின் மதிப்பை வலிமைப்படுத்தியதாகவும், அமெரிக்கவாதத்திற்கு எதிரான நிலையை உறுதிப்படுத்தியதாகவும் இந்நிகழ்வு கருதப்படுகிறது. இந்நேரத்தில் இருந்து தான் கொமெய்னி அமெரிக்காவை "மிகப் பெரிய சாத்தான்" என்று குறிப்பிடத் தொடங்கினார். தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்படலாம், ஆனால் பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டக் கூடாது என்று நீண்ட காலம் நீடித்திருந்த பன்னாட்டு சட்டத்தின் கொள்கையை மீறியதாக இது அமெரிக்காவில் கருதப்பட்டது. ஈரானுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த எதிர் வினையை அமெரிக்காவில் உருவாக்கியது. இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவு முறைகளானவை தொடர்ந்து ஆழமாக எதிர்ப்பு நிலையிலேயே உள்ளன. அமெரிக்க பன்னாட்டு பொருளாதாரத் தடைகளானவை ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளன.[201] ஈரான் – ஈராக் போர் (1980–1988)![]() இந்த அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையின் போது ஈராக்கியத் தலைவர் சதாம் உசேன் புரட்சியின் ஒழுங்கு குலைந்த நிலை, ஈரானிய இராணுவத்தின் பலவீனம் மற்றும் மேற்குலக அரசாங்கங்களுடனான புரட்சியின் பகைமை உணர்வு ஆகியவற்றைத் தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஒரு காலத்தில் வலிமையாக இருந்த ஈரானிய இராணுவமானது புரட்சியின் போது கலைக்கப்பட்டிருந்தது. ஷா வெளியேற்றப்பட்டதுடன் சேர்த்து மத்திய கிழக்கின் ஒரு வலிமையான தலைவராக தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ள உசேனுக்கு எண்ணங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஷாவின் ஆட்சியின் போது ஈரானிடமிருந்து தொடக்கத்தில் ஈராக்கு கோரிய நிலப்பரப்புகளை தற்போது பெற்றதன் மூலம் பாரசீக வளைகுடாவுக்கு ஈராக்கின் வழியை விரிவாக்க உசேன் விரும்பினார் என்று கூறப்பட்டது. ஈராக்குக்கு மிக முக்கியமாகக் கருதப்பட்ட பகுதியாக கூசித்தான் திகழ்ந்தது. இப்பகுதி பெருமளவுக்கு அரேபிய மக்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, வளமான கச்சா எண்ணெய் வயல்களையும் கூட கொண்டிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு மூசா, மற்றும் பெரிய மற்றும் சிறிய துன்புகள் ஆகிய தீவுகளும் கூட இலக்காயின. இந்த குறிக்கோள்களுடன் உசேன் ஈரான் மீது ஒரு முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டார். மூன்று நாட்களுக்குள் ஈரானின் தலைநகரத்தைத் தனது படைகள் அடையும் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். 22 செப்டம்பர் 1980 அன்று கூசித்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் ஈரான் மீது ஈராக்கிய இராணுவமானது படையெடுத்தது. ஈரான்-ஈராக் போரைத் தொடங்கி வைத்தது. இந்தத் தாக்குதலானது புரட்சிகர ஈரானை முழுவதுமாக திகைப்புக்கு உள்ளாக்கியது. சதாம் உசேனின் படைகள் பல தொடக்க முன்னேற்றங்களை அடைந்த போதிலும் 1982 வாக்கில் ஈரானியப் படைகளானவை ஈராக்கிய இராணுவத்தை ஈராக்குக்குள் உந்தித் தள்ளின. ஈராக்கில் பெரும்பான்மையினராக சியா அரேபியர்கள் வாழ்ந்து வந்ததன் காரணமாக மேற்கு நோக்கி ஈராக்குக்கு இசுலாமியப் புரட்சியை ஏற்படுத்த கொமெய்னி விரும்பினார் என்று கூறப்பட்டது. 1988 வரை மேற்கொண்ட ஆறு ஆண்டுகளுக்கு இப்போரானது தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தை ஈரான் ஒப்புக் கொண்டது. இது "விஷக் கோப்பையைப் பருகியதைப்" போல் இருந்ததாகக் கொமெய்னி தன் சொந்த வார்த்தைகளில் குறிப்பிட்டார். ஈராக் தனது போர் முறையில் வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்திய போது ஆயிரக்கணக்கான ஈரானியக் குடிமக்களும், இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். எகிப்து, பாரசீக வளைகுடாவின் அரேபிய நாடுகள், சோவியத் ஒன்றியம் மற்றும் வார்சா உடன்பாட்டு நாடுகள், ஐக்கிய அமெரிக்கா (1983-இல் தொடங்கி), பிரான்சு, ஐக்கிய இராச்சியம், செருமனி, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈராக்குக்குப் பொருளாதார உதவிகளை அளித்தன. செருமனி, எசுப்பானியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் ஈராக்குக்கு வேதியியல் ஆயுதங்களை விற்றன. இப்போரில் 1,82,000 க்கும் மேற்பட்ட குர்திய மக்கள்[202] ஈராக்கின் வேதியியல் ஆயுதங்கள் இந்த எட்டு-ஆண்டுப் போரின் போது பயன்படுத்தப்பட்டதனால் இறந்தனர். போரில் மொத்த ஈரானிய இறப்புகளானவை 5 முதல் 10 இலட்சத்துக்கு இடையில் என்று மதிப்பிடப்பட்டது. ஈரானிய மனித அலைத் தாக்குதல்களை மட்டுப்படுத்தவதற்காக வேதியியல் போர்முறையில் சதாம் ஈடுபட்டார் என்று கிட்டத்தட்ட அனைத்து தொடர்புடைய பன்னாட்டு முகமைகளும் உறுதிப்படுத்தின. இந்த முகமைகள் ஒற்றைக் குரலில் ஈரான் என்றுமே இப்போரின் போது வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்தின.[203][204][205][206] 19 சூலை 1988-இல் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு நீடித்த இந்நிகழ்வில் அரசாங்கமானது அமைப்பு ரீதியாக ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தியது. இது 1988 ஈரானிய அரசியல் கைதிகளின் மரண தண்டனைகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. ஈரானின் மக்கள் முசாகிதீன் அமைப்பின் உறுப்பினர்கள் இதில் முதன்மையான இலக்காக இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டது. ஈரானின் துதே கட்சி (பொதுவுடைமைவாதக் கட்சி)[207][208] உள்ளிட்ட பிற இடதுசாரி குழுக்களைச் சேர்ந்த அரசியல் கைதிகளும் ஒரு குறைவான அளவில் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,400[209] முதல் 30,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[210][211] காமெனி (1989–தற்போது)1989-இல் தன் மரணப் படுக்கையில், ரூகொல்லா கொமெய்னி ஒரு 25-பேரைக் கொண்ட அரசியலமைப்பு சீர்திருத்த மன்றத்தை நியமித்தார். இம்மன்றம் அலி காமெனியை அடுத்த அதியுயர் தலைவராகப் பெயரிட்டது. ஈரானின் அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாற்றங்களைச் செய்தது.[212] 3 சூன் 1989 அன்று கொமெய்னியின் இறப்பைத் தொடர்ந்து சிக்கலற்ற அதிகார மாற்றம் நடைபெற்றது. காமெனி கொமெய்னியின் "வசீகரம் மற்றும் சமயச் சார்பு நிலையைக்" கொண்டிருக்காத அதே நேரத்தில், ஈரானின் ஆயுதப் படைகள் மற்றும் அதன் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த சமய அடிப்படைத் தளங்களுக்குள் ஆதரவாளர்களின் ஓர் இணையத்தை உருவாக்கினார்.[213] இவரின் ஆட்சியின் கீழ் ஈரானானது குறைந்தது ஒரு பார்வையாளரால் "ஒரு சர்வாதிகார நாட்டைப் போல் இல்லாமல் ... ஒரு சமயச் சார்புடைய சிலவர் ஆட்சியாக" உள்ளது என்று குறிப்பிடப்பட்டது.[213] ரப்சஞ்சானி (1989–1997)![]() அலி-அக்பர் அசேமி ரப்சஞ்சானி 3 ஆகத்து 1989 அன்று காமெனிக்குப் பிறகு அடுத்த அதிபராகப் பதவிக்கு வந்தார். ஒரு நடைமுறைவாத பழைமைவாதியான இவர் இரு நான்கு-ஆண்டு காலங்களில் அதிபராகச் சேவையாற்றினார். போரால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டமைப்பதில் தனது முயற்சிகளைக் கவனம் செலுத்தச் செய்தார். இந்த முயற்சிகள் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கடினமாக்கப்பட்டாலும் இவ்வாறு செயலாற்றினார். இசுலாமியக் குடியரசின் முதல் சில ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்கியதன் மூலம் பொது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த ரப்சஞ்சானி விரும்பினார். மேலும், பொருளாதாரத்தை மேலாண்மை செய்ய தகுதி பெற்ற தொழில்நுட்பவாதிகளையும் கூட அழைத்து வந்தார். உலகளவில் தங்களது தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கிய அரசாங்கத்தின் நகர்வுக்குக் காரணமாக இவர்களது பொருளாதாரத்தின் நிலையும் கூட அமைந்தது. சவூதி அரேபியா போன்ற அண்டை நாடுகளுடன் நல்ல உறவு முறைகளை மீண்டும் நிறுவுதல் மற்றும் பிற நாடுகளுக்கு இந்நாட்டின் புரட்சியானது ஏற்றுமதி செய்யப்படாது போன்ற உறுதிகளுடன் இப்பகுதியில் இந்நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் ஒரு முயற்சி ஆகியவற்றின் வழியாக இது செய்யப்பட்டது.[214] 1991-இல் பாரசீக வளைகுடா போரின் போது ஈரான் தொடர்ந்து நடு நிலை வகித்தது. ஐக்கிய அமெரிக்காவைக் கண்டித்தது மற்றும் தப்பித்து வந்த ஈராக்கியப் போர் விமானங்கள் மற்றும் அகதிகளுக்கு ஈரானுடுக்குள் அனுமதியளித்தது ஆகியவற்றுடன் தன்னுடைய செயல்பாடுகளை வரம்புக்குட்படுத்திக் கொண்டது.[மேற்கோள் தேவை] 1990 களில் ஈரானானது முந்தைய தசாப்தங்களை விட மேற்குலகப் பண்பாடு குறித்து ஒரு மிகப் பெரிய சமயச் சார்பின்மை நடத்தை மற்றும் மதிப்பைக் கொண்டிருந்தது. தங்கள் உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய இசுலாமியக் கொள்கைகளுக்கு எதிரான தங்களது அதிருப்தியை நகர்ப்புற மக்கள் வெளிப்படுத்த ஒரு வழியாக இந்த மேற்குலகப் பண்பாட்டுக்கு அளித்த மதிப்பு கருதப்பட்டது.[215] புதிய அதியுயர் தலைவர் அயதோல்லா அலி காமெனிக்குக் கொடுக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்த இந்த அழுத்தங்களானவை அவருக்கும், அதிபர் அக்பர் அசேமி ரப்சஞ்சானிக்கும் இடையில் ஓர் அசௌகரிய கூட்டணிக்கு வழி வகுத்தது. அரசு மீது மேற்கொண்ட கட்டுப்பாட்டைப் பெறும் உலேமாவின் ஆற்றலைத் தடுக்க இந்தக் கூட்டணி மூலம் இவர்கள் முயற்சித்தனர். 1989-இல் பிரதமரின் அலுவலகத்தை நீக்கிய மற்றும் அதிபரின் சக்தியின் வாய்ப்பு நிலையை அதிகரித்த அரசியலமைப்புத் திருத்தங்களின் ஒரு தொடர்ச்சியை இவர்கள் உருவாக்கினர். எனினும், இந்த புதிய திருத்தங்கள் ஈரானின் அதியுயர் தலைவரின் சக்திகளை எந்த வழியிலும் குறைக்கவில்லை. ஆயுதமேந்திய படைகள், போர் மற்றும் அமைதியை உருவாக்குவது, அயல்நாட்டுக் கொள்கையில் இறுதி முடிவெடுப்பது, மற்றும் எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறது என்று கருதப்படுகிறதோ அப்போதெல்லாம் சட்டமியற்றும் செயல்பாடுகளில் தலையிடும் உரிமை ஆகியவற்றில் உச்சபட்ச அதிகாரத்தை அதியுயர் தலைவரின் பதவியானது இன்னும் கொண்டிருந்தது.[215] கதாமி (1997–2005)![]() அதிபர் ரப்சஞ்சானியின் பொருளாதாரக் கொள்கைகளானவை வெளியுலகத்துடன் வலிமையான உறவு முறைகளுக்கு வழி வகுத்தன. ஆனால், சமூக நடத்தை குறித்த சில ஒழுங்கு முறைகள் அமல்படுத்தப்படுவதில் இவரது அரசாங்கத்தின் தளர்த்துதலானது உலேமாவை நாட்டின் ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பொது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியின் சில எதிர் வினைகளுக்குக் காரணமானது.[215] இது 1997-இல் அதிபர் பதவிக்கான அரசாங்கத்தின் வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதற்கு வழி வகுத்தது. இந்த வேட்பாளர் அதியுயர் இசுலாமிய சட்டவியலாளரின் ஆதரவைப் பெற்றிருந்தார். சீர்திருத்தவாதிகளில் ஒருவரான சுயேச்சை வேட்பாளரான மொகம்மது கதாமியால் தோற்கடிக்கப்பட்டார். கதாமி 69% வாக்குகளைப் பெற்றார். அரசின் செயல்பாடுகளால் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கருதிய பொதுமக்களில் இரு குழுக்களின் ஆதரவை குறிப்பாக இவர் பெற்றிருந்தார். அக்குழுக்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர். இந்நாட்டில் இளம் தலைமுறையினர் ஷாவின் ஆட்சியையோ அல்லது அதை முடிவுக்குக் கொண்டு வந்த புரட்சியையோ கண்டிருப்பதற்கு மிகவும் இளையவர்களாக இருந்தனர். இசுலாமியக் குடியரசின் கீழ் தங்களது அன்றாட வாழ்வின் மீது வைக்கப்பட்ட வரம்புகளுக்கு எதிராக தற்போது சினம் கொண்டானர். சீர்திருத்த மனப்பான்மையுடைய அரசாங்கம், மற்றும் அதிகரித்து வந்த பழமைவாத மற்றும் தடையின்றீ கருத்துக்களைத் தெரிவித்த மத குருமார்களுக்கு இடையிலான பதற்றங்களால் மொகம்மது கதாமியின் அதிபர் காலமானது சீக்கிரமே குறிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையானது சூலை 1999-இல் இறுதிக் கட்டத்தை அடைந்தது. அப்போது, தெகுரானின் வீதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் போராட்டங்கள் வெடித்தன. காவல் துறையினர் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான ஊர்க்காப்புப் பிரிவினர் கூட்டங்களைக் கலைப்பதற்கு முன்னர் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பிரச்சினைகள் நீடித்திருந்தன. கதாமி சூன் 2001-இல் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது முயற்சிகளானவை நாடாளுமன்றத்தில் பழமைவாதிகளால் தொடர்ந்து தடுக்கப்பட்டன. ஈரானிய அரசாங்கத்துக்குள் இருந்த பழமைவாதிகள் சீர்திருத்தவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சித்தனர். தாராண்மை செய்தித் தாள்களைத் தடை செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் சீர்திருத்தவாத வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தனர். அரசாங்கத்தைச் சீர்திருத்துவதில் கதாமி அடைந்த தோல்வியுடன் சேர்த்து, எதிர்க்கட்சி மீதான இந்த ஒடுக்குமுறைகளானவை ஈரானிய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வந்த அரசியல் ஈடுபாடற்ற நிலைக்கு வழி வகுத்தன. சூன் 2003-இல் தெகுரானில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.[216][217] 2006-இல் பல மனித உரிமை சார்ந்த போராட்டங்களும் கூட நடைபெற்றன. அகமதிநெச்சாத் (2005–2013)![]() 2005 ஈரானிய அதிபர் தேர்தலில் தெகுரானின் நகரத் தந்தையான மகுமூத் அகமதிநெச்சாத் ஈரானின் ஆறாவது அதிபராக உருவானார். முந்தைய அதிபர் அலி-அக்பர் அசேமி ரப்சஞ்சானிக்கு எதிரான இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 62% வாக்குகளைப் பெற்று வென்றார்.[218] பதவியேற்கும் விழாவில் காமெனிக்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக காமெனியின் கையில் இவர் முத்தமிட்டார்.[219][220] இக்காலகட்டத்தின் போது ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு, சதாம் உசேனின் அரசாங்கமானது பதவியில் இருந்து நீக்கப்படுதல், மற்றும் ஈராக்கின் சியா பெரும்பான்மையினர் அதிகாரம் பெற்றது ஆகிய அனைத்தும் இப்பிராந்தியத்தில் ஈரானின் நிலையை வலிமைப்படுத்தின. குறிப்பாக, பெரும்பாலும் சியா மக்கள் வாழ்ந்த ஈராக்கின் தெற்குப் பகுதியில் வலிமைப்படுத்தின. அங்கு 3 செப்டம்பர் 2006 வாரத்தில் ஒரு முன்னணி சியா தலைவர் தன்னாட்சியுடைய சியா பகுதிக்கான கோரிக்கைகளை மீண்டும் வைக்கத் தொடங்கினார்.[221] குறைந்தது ஒரு பார்வையாளர் (முன்னாள் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் வில்லியம் எஸ். கோகன்) குறிப்பிட்டதன்படி 2009-ஆம் ஆண்டு நிலவரப்படி இப்பிராந்தியத்தில் ஈரானின் அதிகரித்து வந்த சக்தியானது மத்திய கிழக்கில் முதன்மையான வெளியுறவுக் கொள்கை பிரச்சினையாக சியோனிய எதிர்ப்பைப் பின்னுக்குத் தள்ளியது.[222] 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளின் போது ஐக்கிய அமெரிக்காவும், இசுரேலும் ஈரானைத் தாக்கத் திட்டம் தீட்டுவதாகத் தகவல்கள் பரவின. இதற்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட்ட காரணமானது ஈரானின் குடிசார் அணு ஆற்றல் திட்டமாகும். இது ஓர் அணு ஆயுதத் திட்டத்திற்கு வழி வகுக்கும் என ஐக்கிய அமெரிக்காவும், சில பிற அரசுகளும் எண்ணின. எந்த விதத்திலும் இராணுவ நடவடிக்கையையோ மற்றும் பொருளாதாரத் தடைகளையோ சீனாவும், உருசியாவும் எதிர்த்தன. உற்பத்தியைத் தடை செய்து, அணுக்கரு ஆயுதங்களைக் கையிருப்பு வைத்துப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு பத்வாவைக் காமெனி வெளியிட்டார். ஆகத்து 2005-இல் வியன்னாவில் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் சந்திப்பில் ஈரானிய அரசாங்கத்தால் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த பத்வாவானது குறிப்பிடப்பட்டது.[223][224] 2009-இல் அகமதிநெச்சாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. முந்தைய "30 ஆண்டுகளில்" இசுலாமியக் குடியரசின் தலைமைத்துவத்திற்கு "மிகப் பெரிய உள்நாட்டுச் சவாலை" உருவாக்கிய பெருமளவிலான போராட்டங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சமூக அமைதியின்மையானது ஈரானிய பச்சை இயக்கம் என்று பரவலாக அறியப்பட்டது.[225] சீர்திருத்தவாதியான எதிர் வேட்பாளர் மி-கொசெய்ன் மௌசாவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்களிப்பில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதாரம் இல்லாவிட்டாலும் குற்றம் சுமத்தினர். 1 சூலை 2009 வாக்கில் தெரு பிரச்சாரங்களில் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர், 20 பேர் கொல்லப்பட்டனர்.[226] அதியுயர் தலைவர் அலி காமெனி மற்றும் பிற இசுலாமிய அதிகாரிகள் போராட்டங்களைத் தூண்டியதாக அயல்நாட்டு சக்திகளின் மீது குற்றம் சுமத்தினர்.[227] ரூகானி (2013–2021)![]() ![]() 15 சூன் 2013 அன்று ஈரானின் அதிபர் தேர்தலில் அசன் ரூகானி வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 3,67,04,156 வாக்குகள் பதிவிடப்பட்டன. ரூகானி 1,86,13,329 வாக்குகளைப் பெற்றார். தேர்தலுக்கு அடுத்த நாள் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் ரூகானி உலகுடன் ஈரானின் உறவு முறைகளை மறுபரிசீலிக்க தனது உத்தரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.[228] 2 ஏப்ரல் 2015 அன்று சுவிட்சர்லாந்தில் எட்டு நாட்கள், இரவு முழுவதும் கூட தொடர்ந்து, நடைபெற்ற சிக்கலான விவாதங்களைத் தொடர்ந்து ஈரானும், ஆறு உலக சக்திகளும் (ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சீனா மற்றும் உருசியாவுடன் சேர்த்து செருமனி) ஈரானின் அணுசக்தித் திட்டங்களை வை வரம்புக்குட்படுத்தும் ஒரு புரிதலின் மேலோட்டங்களுக்கு ஒப்புக் கொண்டன. பேச்சு வார்த்தை நடந்தியவர்கள் வெளிப்படுத்தியதன்படி இரு பிரிவினரும் அறிவிப்புகளுக்குத் தயாராயினர். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொகம்மது சாவத் சரீப் "தீர்வுகளைக் கண்டுவிட்டோம். உடனடியாக முன் வரைவைத் தொடங்கத் தயாராகி விட்டோம்" என்று எழுதினார். அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏழு நாடுகளின் ஓர் இறுதி சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சரீப்புடன் சேர்ந்து சந்திப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான பெதேரிகா மொகேரினி "நல்ல செய்தி" என்று எழுதினார். ஒரு தசாப்தத்துக்கும் மேலான வேலைப்பாடுகளுக்குப் பிறகு தான் ஒரு "தீர்க்கமான அடி" என்று அழைத்த ஓர் ஒன்றிணைந்த அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் பெதேரிகா மொகேரினி படித்தார். இதைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொகம்மது சாவத் சரீப் அதே அறிக்கையை பாரசீக மொழியில் படித்தார். ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் யோவான் கெர்ரியும், பிரித்தானியா, பிரான்சு மற்றும் செருமனியின் உயர்நிலை தூதர்களும் இவர்களுக்குப் பின்னால் குறுகிய நேரம் மேடையில் நின்றும் கூட இருந்தனர். ஒரு அகல் விரிவான ஒப்பந்தத்திற்கு ஒரு தற்காலிக ஏற்பாடான உருவரைச் சட்டமாக இருக்குமென இந்த ஒப்பந்தம் திட்டமிடப்பட்டது. 2015-ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டது. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து ஈரானுடனான 12 ஆண்டு கால பேச்சுவார்த்தை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முடிவைக் குறித்தது.[229] ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட டோனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்த போது ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தான் கைவிடுவேன் என்று அவர் அடிக்கடி குறிப்பிட்டார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு 8 மே 2018 அன்று இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.[230] 3 சனவரி 2020 அன்று பகுதாது விமான நிலையம் மீது ஓர் ஆளில்லா விமானத்தைக் கொண்டு ஐக்கிய அமெரிக்க இராணுவமானது தாக்கியது. இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஓர் உயர்தர பிரிவான குத்ஸ் படைகளின் தலைவரான காசிம் சுலைமானி இதில் கொல்லப்பட்டார்.[231] 3 ஆகத்து 2021 அன்று இப்ராகிம் ரையீசி ஈரானின் எட்டாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[232] இப்ராகிம் ரையீசி (2021–2024)மகசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களானவை 16 செப்டம்பர் 2022 அன்று தொடங்கின.[233][234][235] 1 ஏப்ரல் 2024 அன்று சிரிய தலைநகரான திமிஷ்குவில் ஈரானிய துணைத் தூதரகக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலானது இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் முக்கியமான மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் மொகம்மது ரெசா சகேதி கொல்லப்பட்டதற்குக் காரணமானது.[236] இசுரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இசுரேல் மீது 300 க்கும் மேற்பட்ட ஆளில்லா வானங்களையும், ஏவுகணைகளையும் கொண்டு 13 ஏப்ரல் அன்று தாக்குதல் நடத்தியது.[237] எனினும், ஈரானியத் தாக்குதலானது பெரும்பாலும் இசுரேலின் வான் எல்லைக்கு வெளியேயோ அல்லது அந்நாட்டின் மீதான வான் பரப்பிலேயோ தடுத்து முறியடிக்கப்பட்டது. ஈரானின் வரலாற்றில் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலும், இசுரேல் மீதான இந்நாட்டின் முதல் நேரடித் தாக்குதலும் இது தான். இதைத் தொடர்ந்து இசுரேல் ஈரானின் இசுபகான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.[238] 19 மே 2024 அன்று நாட்டின் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் நடந்த ஓர் உலங்கூர்தி விபத்தில் இப்ராகிம் ரையீசி இறந்தார்.[239] அதிபரை ரையீசியின் இறப்பிற்குப் பிறகு முதல் துணை அதிபரான மொகம்மது மோக்பெர் செயல்பாட்டு அதிபராக நியமிக்கப்பட்டார்.[240] மசூத் பெசஸ்கியான் (2024–தற்போது)28 சூலை 2024 அன்று ஈரானின் அதியுயர் தலைவர் அயதோல்லா அலி காமெனியால் அதிகாரப்பூர்வமாக ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டார். 5 சூலை அன்று அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான பெசஸ்கியான் வென்றார்.[241] ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானின் பதவியேற்கும் விழாவில் பங்கேற்கச் சென்ற பாலத்தீனிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பான அமாசின் அரசியல் தலைவரான இசுமாயில் அனியே ஈரானின் தலைநகரமான தெகுரானில் 31 சூலை 2024 அன்று அரசியல் கொலை செய்யப்பட்டார்.[242] அனியே, அசன் நசுரல்லா மற்றும் அப்பாசு நில்போரோசான் ஆகியோரின் அரசியல் கொலைகளுக்குப் பதிலடியாக1 அக்டோபர் 2024 அன்று ஈரான் இசுரேல் மீது 180 தொலைதூர ஏவுகணைகளை ஏவியது. இத்தாக்குதலுக்கு பதிலாக 27 அக்டோபர் அன்று ஈரானிய மாகாணமான இசுபகானில் ஓர் ஏவுகணை தற்காப்பு அமைப்பு மீது இசுரேல் தாக்குதல் நடத்தியது.[243] திசம்பர் 2024-இல் சிரியாவில் ஈரானின் ஒரு நெருங்கிய கூட்டாளியான ஆசாத்தின் வீழ்ச்சியானது இப்பிராந்தியத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கிற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்தது.[244] 13 சூன் 2025 அன்று இசுரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.[245][246] மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia