2022-இல் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (0.2%)
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Kuala Selangor ; ஆங்கிலம் : Kuala Selangor Federal Constituency ; சீனம் : 大河联邦选区) என்பது மலேசியா , சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P096 ) ஆகும்.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1955-ஆம் ஆண்டில் இருந்து கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டம்
கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம் ; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம் ; கோம்பாக் மாவட்டம் ; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம் ; தெற்கில் கிள்ளான் மாவட்டம் ; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங் ; கோலா சிலாங்கூர் . இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[ 4]
கோலா சிலாங்கூர்
கோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாக இருந்தது.[ 5] பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகடததினால், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியில் கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1955 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது
P065
1955–1959
ராஜா ரசுதாம் ராஜா சாயிட் (Raja Rastam Shahrome Raja Said Tauphy)
கூட்டணி (அம்னோ )
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது
P065
1959–1963
முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali)
கூட்டணி (அம்னோ )
மலேசிய மக்களவை
1-ஆவது
P065
1963–1964
முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali)
கூட்டணி (அம்னோ )
2-ஆவது
1964–1969
ராஜா ரோம் ராஜா மாமோர் (Raja Rome Raja Ma'amor)
1969–1971
நாடாளுமன்றம் முடக்கப்பட்டது[ 6]
3-ஆவது
P065
1971–1973
ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak)
கூட்டணி (அம்னோ )
1973–1974
கூட்டணி (அம்னோ )
4-ஆவது
P076
1974–1978
ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak)
5-ஆவது
1978–1982
அபு அசன் ஒமார் (Abu Hassan Omar)
6-ஆவது
1982–1986
7-ஆவது
P085
1986–1990
8-ஆவது
1990–1995
9-ஆவது
P089
1995–1997
1997–1999
ஜமாலுதீன் அட்னான் (Jamaluddin Adnan)
10-ஆவது
1999–2004
மொகமட் சயூதி சாயிட் (Mohamed Sayuti Said)
11-ஆவது
P096
2004–2008
முகமட் தாவுத் தாரிகெப் (Mohd Daud Tarihep)
12-ஆவது
2008–2013
சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad)
பி.கே.ஆர் (பாஸ் )
13-ஆவது
2013–2018
இர்மோகிசாம் இப்ராகிம் (Irmohizam Ibrahim)
பாரிசான் (அம்னோ )
14-ஆவது
2018–2022
சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad)
பாக்காத்தான் (அமாணா )
15-ஆவது
2022–தற்போது
கோலா சிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகள்
நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
1955–59*
1959–1974
1974–1986
1986–1995
1995–2004
2004–2018
2018–தற்போது
கோலா சிலாங்கூர்
அசாம் ஜாவா
புக்கிட் மெலாவத்தி
ஈஜோக்
ஜெராம்
ஜெராம்
கோலா சிலாங்கூர்
பெக்கான் கோலா சிலாங்கூர்
bஎர்மாத்தாங்
செரி சகாயா
சுங்கை திங்கி
தஞ்சோங் காராங்
கோலா சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
சட்டமன்ற தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N10
புக்கிட் மெலாவத்தி
நூராசிலே யகாயா (Noorazley Yahya)
பெரிக்காத்தான் (பெர்சத்து )
N11
ஈஜோக்
ஜெப்ரி மேசன் (Jefri Mejan)
பெரிக்காத்தான் (பாஸ் )
N12
ஜெராம்
அரிசன் அசான் (Harrison Hassan )
பெரிக்காத்தான் (பெர்சத்து )
கோலா சிலாங்கூர் தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
102,951
வாக்களித்தவர்கள் (Turnout )
87,685
84.00%
▼ 3.67
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
86,481
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
132
செல்லாத வாக்குகள் (Rejected Ballots )
1,072
பெரும்பான்மை (Majority )
1,002
1.15%
▼ 12.85
வெற்றி பெற்ற கட்சி
பாக்காத்தான்
[ 7]
கோலா சிலாங்கூர் வேட்பாளர் விவரங்கள்
கோலா சிலாங்கூர் உள்ளாட்சி மன்றங்கள்
மலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்