முகமது சாபு
![]() முகமது சாபு அல்லது மாட் சாபு (மலாய்: Datuk Seri Haji Mohamad bin Sabu; ஜாவி: محمد سابو ஆங்கிலம்: Mohamad Sabu) (பிறப்பு: அக்டோபர் 14, 1954) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யின் தலைவர் ஆவார். முன்னதாக, அவர் மலேசிய இசுலாமிய கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[1] இவர் டிசம்பர் 2022 மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) (PH) நிர்வாகத்தில் மலேசிய வேளாண் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் தம்முடைய பொது மேடைப் பேச்சுத் திறனுக்காக நன்கு அறியப்படுகிறார்.[2] மலேசியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act) (ISA) கீழ் அவர் இருமுறை தடுத்து வைக்கப்பட்டார்.[2] எளிமை வாழ்க்கையை விரும்பும் இவர், நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்டவர். மலேசிய இந்தியர்களிடம் இவர் மிக அணுக்கமாகப் பழகக் கூடியவர். அவர்களின் பற்பல சமூகப் பிரசினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். மலேசிய இந்தியர்கள் பெரும்பாலோரிடம் செல்வாக்கு பெற்றுள்ள இவர், அவர்களுக்குப் மிகவும் பிடித்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்றும் அறியப்படுகிறார். பதவிகள்
கல்விமாட் சாபு, பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் தொடக்கப்பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போது மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்; (UiTM) உணவுத் தொழில்நுட்பத்தில் படிப்பைத் தொடர்ந்தார். இருப்பினும், அவர் படிப்பை முடிக்கவில்லை. கல்லூரி மாணவர்கள் இயக்கம் (1971-1975) காரணமாகக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பொதுமாட் சாபுவின் அரசியல் வாழ்க்கை, 1975-இல் அவர், மலேசிய இசுலாமிய இளைஞர் இயக்கத்தில் (Angkatan Belia Islam Malaysia) (ABIM) சேர்ந்தபோது தொடங்கியது. 1981-இல் மலேசிய இசுலாமிய கட்சியில் சேர்ந்தார்.[3] பின்னர் அவர் அதே பாஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். சிறை வாழ்க்கைலாலாங் நடவடிக்கைமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் இவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகள் அரசியல் கைதியாகச் சிறைத்தண்டனை அனுபவித்து உள்ளார். தீவிரவாத இயக்கங்களில் ஈடுபட்டதாக 1984 முதல் 1986 வரை கமுந்திங் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப் பட்டார். அடுத்து 1987 முதல் 1989 வரை; மலேசிய அரசியலில் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான லாலாங் நடவடிக்கையின் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை களையெடுப்பு நடவடிக்கை (Operation Weeding) என்றும் அழைப்பது உண்டு. மலேசியாவில் இனக் கலவரம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இந்தத் கைது நடவடிக்கை 1987 அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி 1987 நவம்பர் 20-ஆம் தேதி வரையில் நீடித்தது.[4] லிம் கிட் சியாங்ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்; மற்றும் அவரின் மகன் லிம் குவான் எங் (பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர்) ஆகியோருடன் மாட் சாபு; கமுந்திங் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப் பட்டார். இரண்டு ஆண்டுகள் தடுப்பு மையத்தில் இருந்த போது, லிம் கிட் சியாங்; லிம் குவான் எங் இருவருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். 2017-இல் அவர்கள் மீது சுமத்தப்பட்ட இனவெறி குற்றச்சாட்டுகளில் இருந்து இருவரையும் தற்காத்தார்; தவிர அந்தக் கட்டத்தில் ஜனநாயக செயல் கட்சியையும் பாதுகாத்தார்.[5] புக்கிட் கெப்போங் நிகழ்ச்சி21 ஆகஸ்டு 2011 அன்று, பினாங்கு தாசேக் குளுகோரில் மாட் சாபு நிகழ்த்திய ஒரு மேடைப் பேச்சின் வழியாக ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 1950-இல் நடைபெற்ற மூவார், புக்கிட் கெப்போங் நிகழ்ச்சியில் (Bukit Kepong incident) பங்கேற்ற முகமது இந்திரா (Muhammad Indera) என்பவரும்; மற்றும் 200 மலாயா பொதுவுடைமை கட்சியின் (Malayan Communist Party) போராளிகளும் தான் தேசியச் சாதனையாளர்கள் என்றும்; புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தின் காவலர்கள் அல்ல என்றும்; அந்த மேடைப் பேச்சில் கூறினார். உண்மையான தேசிய வீரர்கள்மேலும் அவர் உரையாற்றும் போது, புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தின் அதிகாரிகள் அனைவரும் பிரித்தானிய அதிகாரிகள் ஆவார்கள்; புக்கிட் கெப்போங் நிகழ்ச்சியில், மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள்; பிரித்தானியர்களுடன் போரிட்டதால், மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள்தான் உண்மையான தேசிய வீரர்கள் என்றும் கூறினார்.[6][7] புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தைப் பாதுகாத்து இறந்த காவல்துறை அதிகாரிகள் தேசிய வீரர்கள் அல்ல என்றும் கூறினார். இந்த உரையின் காணொளி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் அந்தக் காணொளி எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது. மாட் சாபுவின் பேச்சு காவல் நிலையத்தில் இறந்த காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களையும், மற்றும் பிற தேசிய வீரர்களையும் அவமதித்ததாகக் கருதப்பட்டது.[8] மாட் சாபுவின் வீடு எரிப்புபினாங்கு தாசேக் குளுகோரில் மாட் சாபுவின் மேடைப் பேச்சிற்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து 20 செப்டம்பர் 2011 அன்று, சா ஆலாம், பிரிவு 19-இல் இருந்த அவரின் வீடு மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அவரின் மனைவி நோர்மா அல்வி (57) பெர்லிஸ் கங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 21 செப்டம்பர் 2011 அன்று, பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500-இன் கீழ் மாட் சாபு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆகஸ்டு 21, 2011 அன்று, பினாங்கு பாடாங் மெனோராவில் நடந்த ஒரு மேடைப் பேச்சில், காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தோற்றத்தை இழிவு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கோத்தா ராஜா தேர்தல் முடிவுகள்![]()
கோத்தா ராஜா வேட்பாளர் விவரங்கள்
விருதுகள்மலேசிய விருதுகள்
வெளிநாட்டு விருதுகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia