திருத்தங்கல் தொடருந்து நிலையம்
திருத்தங்கல் தொடருந்து நிலையம் (Tiruttangal railway station, நிலையக் குறியீடு:TTL) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, திருத்தங்கல் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். வரலாறுஇத்தொடருந்து நிலையம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் இத்தொடருந்து நிலையத்தை தெற்கு இருப்புப் பாதை மண்டலம் மூடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது ஊர்மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் மூடும் முயற்சி கைவிடப்பட்டது. ஆளுகைப் பகுதிஇது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின், தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1] வழித்தடம்இந்தத் தொடருந்து நிலையம் விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[2][3] வசதிகள்இந்தத் தொடருந்து நிலையம் அகல இருப்புப் பாதையாக மாற்றப்பட்ட பின்பு, நிதிநெருக்கடியினைக் காரணம் காட்டி அதன் நடைபாதையினை உயர்த்தும் பணியினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், இந்நகர்வாசியான ஆர். சந்திரமோகன் நன்கொடையாக ₹30 இலட்சம் (ஐஅ$35,000) வழங்கியதைக் கொண்டு பயணிகளுக்கான முக்கிய வசதிகள் செய்யப்பட்டன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சரக்கு அறை, குறிகாட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.[4] அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia