வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Vanchi Maniyachchi Junction railway station, நிலையக் குறியீடு:MEJ) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தூத்துக்குடி மாவட்டத்தில், மணியாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தெற்கிலுள்ள திருநெல்வேலியையும், கிழக்கு உள்ள தூத்துக்குடியையும் இணைக்கிறது. வரலாறுவிடுதலைப் போராட்ட வீரரான வாஞ்சிநாதனை நினைவூட்டும் வகையில் இப்பெயரை, இத்தொடருந்து நிலையத்திற்கு வைத்துள்ளனர். இந்த இடத்தில் தான், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் திருநெல்வெலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை ( Robert William Escourt Ashe) வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இந்தியாவின் 7 இரயில்வே மண்டலங்களுள் ஒன்றான, தென்மண்டல இரயில்வேயில் இது அடங்குகிறது. இத்தென்மண்டல இரயில்வேயிலுள்ள கோட்டங்களில், இது மதுரை இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. அமைவிடம்இது தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில், ஒட்டந்தம்-மணியாச்சி சாலையில் அமைந்துள்ளது. வழித்தடம்இந்த நிலையத்திலிருந்து மூன்று தடங்கள் கிளையாக பிரிகின்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia