கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம்

கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம்
கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம் is located in தமிழ்நாடு
கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம்
கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம்
கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°52′54″N 79°11′32″E / 10.8818°N 79.1922°E / 10.8818; 79.1922
பெயர்
வேறு பெயர்(கள்):சூலமங்கை
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:சூலமங்கலம்
சட்டமன்றத் தொகுதி:பாபநாசம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:61.91 m (203 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கிருத்திவாகேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கி.மீ. தொலைவில் சூலமங்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.[2]

இறைவன், இறைவி

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர், கரிஉரித்த நாயனார். இறைவி அலங்காரவல்லி. தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[2]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.[3]

கல்வெட்டு

சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன.[3]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  3. 3.0 3.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya