ருத்தேனியம் அறுபுளோரைடு
ருத்தேனியம் அறுபுளோரைடு (Ruthenium hexafluoride) என்பது RuF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதுவரை அறியப்பட்டுள்ள, ருத்தேனியம் மற்றும் புளோரின் ஆகிய இரு தனிமங்கள் மட்டும் இணைந்து உருவாகும் பதினேழு இரட்டைப் புளோரைடுகளில் இச்சேர்மமும் ஒன்றாகும். ருத்தேனியம் அறுபுளோரைடு, ருத்தேனியம்(VI) புளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. ருத்தேனியம் உலோகத்தை நேரடியாக புளோரின் வாயுக்கற்றை மற்றும் ஆர்கான் வாயுக்களுடன் 400 முதல் 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதால் ருத்தேனியம் அறுபுளோரைடு உருவாக்கப்படுகிறது. இவ்வினையில் உருவாகும் விளைபொருள் 10% அளவிற்கும் கீழாகவே உற்பத்தியளவை எட்டுகிறது.[2] Ru + 3 F2 → RuF6 பண்புகள்அடர் பழுப்பு நிறத்தில் ஒரு படிகத் திண்மமாக ருத்தேனியம் அறுபுளோரைடு காணப்படுகிறது. 54 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் உருகுகிறது[1]. இச்சேர்மத்தின் கட்டமைப்பு -140 பாகை செல்சியசு வெப்பநிலையில் சாய்சதுர அமைப்பும் Pnma இடக்குழுவும் a = 9.313 Å, b = 8.484 Å, மற்றும் c = 4.910 Å என்ற அணிக்கோவை அளபுருக்களும் கொண்டுள்ளது. ஓர் அலகு கூட்டிற்குள் இருக்கும் நான்கு அனுபவக் குறியீட்டு அலகுகள் இச்சேர்மத்தில், பிரிநிலை மூலக்கூறுகள்) 3.68 கி.செ.மீ-3 என்ற அடர்த்தியைக் கொடுக்கின்றன[2]. ருத்தேனியம் அறுபுளோரைடு மட்டும் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைக் (வாயுநிலை அல்லது திரவ நிலைக்கு ஏற்ற முக்கியமான வடிவம்) கொண்டுள்ளது. இவ்வமைப்பில் (Oh) இடக்குழுவும், Ru–F பிணைப்பின், பிணைப்பு நீளம் 1.818 Å ஆகவும் இருக்கிறது.[2] மேற்கோள்கள்
உசாத்துணை
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia