சண்டக்கான் மக்களவைத் தொகுதி
சண்டக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sandakan; ஆங்கிலம்: Sandakan Federal Constituency; சீனம்: 山打根国会议席) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P186) ஆகும்.[5] சண்டக்கான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து சண்டக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சண்டக்கான் பிரிவுசண்டக்கான் பிரிவு என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். சபா; சரவாக் மாநிலங்களில் மட்டுமே பிரிவு எனும் முறைமையைப் பயன்படுத்துகிறார்கள். சபா மாநிலத்தின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து மாநிலத்தின் மத்தியப் பகுதி வரை நெடுக்காக நீண்டுள்ளது. 28,205 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சபா மாநிலத்தில் 38.3% நிலப் பகுதியைக் கொண்டு உள்ளது. மேலும் இந்தப் பிரிவு சபாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரிய பிரிவு ஆகும். சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 19.4% மக்களைக் கொண்டது. பெரும்பாலும் சீனர்கள், ஒராங் சுங்கை, கடசான் - டூசுன், சுலுக் மற்றும் பஜாவ் ஆகிய இனக் குழுவினரைக் கொண்டது.[7] சண்டக்கான் மக்களவைத் தொகுதிசண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (23.5%) மலாயர் (26.6%) சீனர் (44.2%) இதர இனத்தவர் (5.6%)
சண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.43%) பெண் (48.57%)
சண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.58%) 21-29 (22.33%) 30-39 (20.55%) 40-49 (15.72%) 50-59 (11.61%) 60-69 (8.12%) 70-79 (3.24%) 80-89 (1.17%) + 90 (0.62%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia