பொக்கோ சேனா மாவட்டம்
பொக்கோ சேனா மாவட்டம் என்பது (மலாய்: Daerah Pokok Sena; ஆங்கிலம்: Pokok Sena District; சீனம்: 波各先那县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். அலோர் ஸ்டார் நகருக்கு கிழக்கே ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மாவட்டம் கெடாவின் 12-ஆவது மாவட்டமாகும். இது முன்பு கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் (Kota Setar District) துணை மாவட்டமாக இருந்தது; 2009-இல் கெடா சுல்தான் அப்துல் ஆலிம் (Sultan Abdul Halim Mu'adzam Shah ibni Almarhum Sultan Badlishah) அவர்களால் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.[1] பொதுபொக்கோ சேனா மாவட்டம் ஒரு வேளாண் மாவட்டம் ஆகும். 2,816 எக்டர் பரப்பளவில் நெல்; 9,883 எக்டர் பரப்பளவில் ரப்பர்; 416 எக்டர் பரப்பளவில் பழத்தோட்டங்கள்; 2.5 எக்டர் பரப்பளவில் கொக்கோ பயிரிடப் படுகிறது. பல்வேறு வகையான இலகுரக நிறுவனங்களும் (Light Enterprises) உள்ளன. மேலும் சிறு தொழில்களுக்கு (Small Industries) சுமார் 12 வளாகங்களும் உள்ளன.[2] முக்கிம் மற்றும் நகரங்கள்போகோக் சேனா மாவட்டம் ஆறு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia