பண்டார் பாரு மாவட்டம்
பண்டார் பாரு மாவட்டம் (ஆங்கிலம்: Bandar Baharu District அல்லது Bandaq Baqhu அல்லது Bandaq Baru; மலாய்: Daerah Bandar Baharu; சீனம்: 万拉峇鲁县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு ஒரு கட்டத்தில் பண்டார் கரஸ்டேசியா (Bandar Crustacea) என மறுபெயரிட முன்மொழியப்பட்டது. அத்துடன் பண்டார் பாரு ஒரு நகரம், ஒரு மாவட்டம் மற்றும் ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும். கெடா மாநிலத்தின் தெற்கு முனையில் உள்ளது.[1]) கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில், கெடா - பினாங்கு - பேராக் மாநிலங்களின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது. பொதுபண்டார் பாரு மாவட்ட உள்ளூராட்சி (ஆங்கிலம்: Bandar Baharu District Council; மலாய்: Majlis Daerah Bandar Baharu) (சுருக்கம்: MDBB) பண்டார் பாரு மாவட்டம் முழுவதையும் நிர்வகிக்கிறது. இதன் அதிகார வரம்பு 169.3 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது. பண்டார் பாரு நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள செர்டாங் நகரம்தான் பண்டார் பாரு மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும். பண்டார் பாரு மாவட்டத்தின் கிழக்கில் தென் செபராங் பிறை மாவட்டம்; தெற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் மற்றும் கிரியான் மாவட்டம்; வடக்கில் கூலிம் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் எல்லைகளைக் கொண்டுள்ளன. நிர்வாகப் பிரிவுகள்பண்டார் பாரு மாவட்டம் 6 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பண்டார் பாரு மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
கெடா மாநிலச் சட்டமன்றம்கெடா மாநிலச் சட்டமன்றத்தில் பண்டார் பாரு மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
போக்குவரத்து![]() சீருந்துவடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway Northern Route) பொது போக்குவரத்துகே.டி.எம். இன்டர்சிட்டி (KTM Intercity) பண்டார் பாரு நகருக்கு தொடருந்து சேவைகளை வழங்கவில்லை. மிக அருகாமையில் பேராக் மாநிலத்தின் உள்ள பாரிட் புந்தார் தொடருந்து நிலையம் உள்ளது. மேலும் காண்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia