விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Virudhunagar Junction Railway Station) தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் நகரிலுள்ள ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப் பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இத்தொடருந்து நிலையக் குறியீடு VPT ஆகும். அமைவிடம்விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையமானது நகரின் கிழக்குப் பகுதியில் சிட்கோ தொழிற்பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையம் நான்கு கிளைகளை இணைக்கும் இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்களாவன:
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையமானது, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 46 கி.மீ. (29 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து விருதுநகர் பழைய பேருந்து நிலையமானது 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6][7] இருப்புப்பாதை வழித் தடங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia