சுங்கை காடுட் கொமுட்டர் நிலையம்
சுங்கை காடுட் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Sungai Gadut Komuter Station; மலாய்: Stesen Komuter Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், சுங்கை காடுட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பயணிகள் தொடருந்து நிலையம் ஆகும். சுங்கை காடுட் நகர்ப்பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், சுங்கை காடுட் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1] பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 மே 2011-ஆம் தேதி முதல் கொமுட்டர் தொடருந்து இந்த நிலையத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.[2] பொதுசிரம்பான் மற்றும் கிம்மாஸ் இடையே இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[3] தொடக்கத்தில், 2011-ஆம் ஆண்டில் மட்டுமே சிரம்பான் வழித்தடம் இந்த நிலையம் வரையில் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2012-ஆம் ஆண்டில், ரெம்பாவ் தொடருந்து நிலையம் வரையில் சிரம்பான் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் சுங்கை காடுட் தொடருந்து நிலையத்திலேயே பெரும்பாலான தொடருந்துகள் தங்களின் சேவைகளை நிறுத்திக் கொண்டன. சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை2015-ஆம் ஆண்டில் சிரம்பான் வழித்தடம் சேவை புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. அந்தச் சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை அப்போது ஓர் இடைவழிச் சேவையாக இருந்தது. 2011-ஆம் ஆண்டில் கிம்மாஸ் வரை இருந்த சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை தம்பின் வரை குறைக்கப்பட்டது.[4] புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரையிலான சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை மொத்தமாகக் கலைக்கப்பட்டது. இப்போதைய பயணிகள் தொடருந்துகள் கோலாலம்பூரில் இருந்து சுங்கை காடுட் மற்றும் தம்பின் வரை செல்கின்றன. இந்த நிலையம் சுங்கை காடுட்கிற்கு மட்டும் அல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. சுங்கை காடுட்சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது. சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையமும்; அதன் நகரப் பகுதிகளும்; மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை சுங்கை காடுட் நிலையக் காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia