பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம் அல்லது பண்டாராயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Bandaraya LRT Station; மலாய்: Stesen LRT Bandaraya; சீனம்: 市政局站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3][4] பண்டாராயா எல்ஆர்டி நிலையம், 1996-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி, அம்பாங் நிலையத்திற்கும் இந்த நிலையத்திற்கும் இடையே 13 நிலையங்கள் வழியாகச் சென்ற இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) வழித்தடத்தின் (தற்போது செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திற்கும், செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இஸ்டார் எல்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாவது பிரிவின் தொடக்கத்துடன் அந்தப் புதியச் சேவை தொடங்கியது. அமைவுஇந்த பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் கிழக்குக் கரையிலும், ராஜா லாவுட் சாலைக்கு அருகிலும் உள்ளது. பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள கடைசி இலகு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் பல வணிக வளாகங்கள்; தற்போதைய கோலாலம்பூர் மாநகராட்சி கட்டிடம், பேங்க் நெகாரா (Bank Negara) தலைமையகம்; மற்றும் லிட்டில் இந்தியா வளாகத்திற்கும் (Little India Precinct) அருகாமையில் உள்ளது. பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்இந்த நிலையம் KA03 பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையத்திலிருந்து 140 மீ தொலைவில் உள்ளது. இரண்டு நிலையங்களும் ஒரு மேம்பால நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கட்டணம் அல்லது பயணச் சீட்டு அடிப்படையில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு வழங்கப்படவில்லை. ராஜா லாவுட் சாலை (Jalan Raja Laut), டாங் வாங்கி சாலை (Jalan Dang Wangi), மற்றும் துவாங்கு அப்துல் ரகுமான் சாலைகளின் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட அடுக்கு நிலையமாகும். இந்த நிலையத்தில் செரி பெட்டாலிங் வழித்தடம்அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[6] காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia