அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line மலாய்: Laluan LRT Ampang - Laluan LRT Sri Petaling) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. பொதுஎல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும். எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தின் கிழக்கு முனையமான அம்பாங் நிலையத்தின் பெயரில் அம்பாங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புஇந்த வழித்தடங்கள் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். இந்த வழித்தடங்களில் 36 நிலையங்கள் உள்ளன. 45.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. வரலாறுஅம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து ஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து ஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. ஒப்பந்தம்டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[3] 25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கி.மீ. - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கி.மீ. - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கி.மீ. - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன.[4][5] கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
அம்பாங் வழித்தட நிலையங்கள்
செரி பெட்டாலிங் வழித்தடம்
காட்சியகம்செரி பெட்டாலிங் வழித்தடத்தின் காட்சிப் படங்கள் மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia