கோலாலம்பூர் மாநகரத்தின் அருகிலுள்ள செராஸ் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நிலையம் செரி மாஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டது.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செராஸ் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது.[3]
அமைவு
செராஸ் என்று இந்த நிலையத்தின் பெயர் இருந்தபோதிலும், இந்த செராஸ் எல்ஆர்டி நிலையம், கோலாலம்பூர், செராஸ் நகரத்திற்குள் அமைந்திருக்கவில்லை.[4]
மாறாக, இந்த நிலையம் வடக்கு சுங்கை பீசி பகுதிக்கும், தாமான் ஈக்கான் இமாஸ் - சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், செராஸ் நகரத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
↑Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd (in மலாய்). Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.