ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆரா டாமன்சாரா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம் : Ara Damansara LRT Station ; மலாய் : Stesen LRT Ara Damansara ; சீனம் : 阿拉白沙罗) என்பது மலேசியா , கோலாலம்பூர் , கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[ 2] [ 3]
இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது.[ 4]
அமைவு
கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
ஆரா டாமன்சாரா பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், ஆரா டாமன்சாரா எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
காத்திருக்கும் நேரம்
PJU 1A/46 சாலை; PJU 1A சாலை , ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.
ஆரா டாமன்சாரா
ஆரா டாமன்சாரா (Ara Damansara ); என்பது சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது.
துரோபிக்கானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது.
தாமான் துன் டாக்டர் இசுமாயில்
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில்; புஞ்சாக் ஆலாம் நெடுஞ்சாலைக்கு (Puncak Alam Highway) கிழக்கிலும்; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் (New Klang Valley Expressway - NKVE) வடக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara) , கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன.
சுபாங் வானூர்தி நிலையம்
லெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது.[ 5] சுபாங் ஜெயா , கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ , குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன.
இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport ) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆசிய நெடுஞ்சாலை
ஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை ; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை
AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலை மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
ஆரா டாமன்சாரா இரண்டு எல்ஆர்டி (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது.
2016 சூன் மாதம் கிளானா ஜெயா வழித்தடம் (LRT Kelana Jaya Line) கட்டி முடிக்கப்பட்டது.
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services" . MyRapid . Retrieved 15 November 2024 .
↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang" . Rapid Rail Explorer . Retrieved 17 November 2024 .
↑ "Ara Damansara LRT Station serving Taman Mayang Emas neighborhoods" . klia2.info . 10 October 2017. Retrieved 17 November 2024 .
↑ "Ara Damansara LRT Station is a Light Rapid Transit station at Ara Damansara that is served by Rapid KL's Kelana Jaya Line. Like most other LRT stations operating in the Klang Valley, this Station is elevated" . mrt.com.my . Retrieved 17 November 2024 .
↑ "Pekan Subang Shah Alam, Selangor" . Google Maps . Retrieved 2 January 2022 .
வெளி இணைப்புகள்
மலேசியாவில் முதன்மையான பேருந்து நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
வடக்கு பகுதி மத்திய பகுதி தென் பகுதி சபா பேருந்து சேவைகள் பொது
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு
பெரும் கோலாலம்பூர்/கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து நிலையங்கள்
கட்டம் 1
திறப்பு 2025
கட்டம் 2
சாய்வு எழுத்துகளில் உள்ள நிலையங்களும் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது கட்டுமானத்தில் உள்ளன