யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம்
யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம் அல்லது யூஎஸ்ஜே 21 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: USJ 21 LRT Station; மலாய்: Stesen LRT USJ 21; சீனம்: USJ 21 轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2] இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 17, யூஎஸ்ஜே 18, யூஎஸ்ஜே 21 சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[3] இந்த நிலையம் மெயின் பேலஸ் வணிக வளாகத்திற்கு (Main Place Mall) அருகில் அமைந்துள்ளது. அமைவுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. இந்த நிலையம் சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 21 அருகில் (USJ 21) அமைந்து இருப்பதால், யூஎஸ்ஜே 21 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா யூஎஸ்ஜே 21சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த யூஎஸ்ஜே 13, யூஎஸ்ஜே 14, யூஎஸ்ஜே 17, யூஎஸ்ஜே 18, யூஎஸ்ஜே 19, யூஎஸ்ஜே 21 குடியிருப்புப் பகுதிகளை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது. யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ Subang Jaya) அல்லது யூஇபி சுபாங் ஜெயா (UEP Subang Jaya) என்பது சுபாங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்பகுதியாகும். யுனைடெட் புராஜெக்ட்ஸ் எஸ்டேட்ஸ் - சுபாங் ஜெயா (United Projects Estates Bhd. Subang Jaya) என்பதன் சுருக்கமே யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ) ஆகும். கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[4] ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[5] பேருந்து சேவைகள்
காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia