ஜெத்
![]() ஜெத் (Djet), பண்டைய எகிப்தை கிமு 2980-இல் பத்தாண்டுகள் ஆண்ட முதல் வம்சத்தின் நான்காம் மன்னர் ஆவார். ஜெத்தின் ஓரசு பெயர் பாம்பு என்பதாகும். எனவே இம்மன்னரின் பெயர் குறித்த இடங்களில் பருந்துடன் கூடிய பாம்புச் சின்னம் இருக்கும். மன்னர் ஜெர்ரின் மகனான ஜெத் தனது சகோதரிகளான மெர்நெய்த், அஹென்நெய்த் ஆகியோர்களை மணந்தவர். மன்னர் ஜெத்திற்கும்-அரசி மெர்நெய்த்திற்கும் பிறந்தவரே இளவரசன் டென். டென் சிறுவனாக இருக்கும் போதே மன்னர் ஜெத் இறந்து விடுகிறான். எனவே தனது இளம் மகன் டென்னை அரியணையில் அமர்த்திய மெர்நெய்த், டென்னின் காப்பாட்சியாராக எகிப்தை ஆட்சி செய்கிறார். கல்லறை![]() ![]() நாடு எகிப்தின் உம் எல்-காப் எனுமிடத்தில் கல்லறை எண் Z-இல் மன்னர் ஜெத் மற்றும் அரசி மெர்நெய்த் கல்லறைகள் உள்ளது. இக்கல்லறையில் மன்னர் ஜெத் உருவ சிறபம், பருந்தை சுற்றி வளைத்த பாம்பின் சிற்பம் கண்டுபிடிககப்பட்டது. மேலும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2] இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia