இரண்டாம் இசுகோர்ப்பியோன்
![]() இரண்டாம் இசுகோர்ப்பியோன் (Scorpion II), மூன்றாம் நக்காடா பண்பாட்டு காலத்தில் (கிமு 3320 - 3000) வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்தை ஆண்ட ஆட்சி செய்த மன்னர் ஆவார். பண்டைய எகிப்திய மொழியில் இவரை செல்க் (Selk) அல்லது வேகா (Weha) என்றும் அழைப்பர். இவர் தினீஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு மேல் எகிப்தை ஆட்சி செய்தார். இரண்டாம் இசுகோர்ப்பியோன் பெயர் நவீன எகிப்தியவியலில் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவரின் பெயர் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்த ஆறு அல்லது 6 தங்க நிற இலை அல்லது பூக்களால் அறியமுடிகிறது. இந்த சின்னத்தை எகிப்தின் பண்டைய தொல்பொருட்களில் காண முடிகிறது. ஆதாரங்கள்மன்னர் இரண்டாம் தேளின் சூலாயுதம்எகிப்தின் பண்டைய நெக்கென் தொல்லியல் களத்தில், எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. கியூபெல்லி மற்றும் பெடரிக் டபிள்யூ. கிரீன் ஆகியோர் 1897-98ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்கையில் மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல் கண்டெடுக்கப்பட்டது.[1] ரொசெட்டாக் கல்லில் இரண்டாம் இசுகோர்ப்பியோன் மன்னர் தெற்கு எகிப்திற்குரிய ஒற்றை மணிமுடி சூடியிருந்தார். அத்துடன் கையில் வேளாண்மை செய்வதற்கான கொழு போன்ற கருவியை கையில் ஏந்தியிருக்கும் காட்சியும், மன்னரின் பின்புறத்தில் (இடது பக்க்தில்) இரண்டு பேர் விசிறி ஏந்தி நிற்கும் காட்சியும் உள்ளது. மேலும் ரொசெட்டாக் கல்லில் பாபிரஸ் காகிதக்கட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரொசெட்டாக் கல்லின் மேற்பகுதியில் ஆடலரசிகள் மற்றும் பூசாரிகளின் உருவங்கள் உள்ளது. பூசாரி தம் கையில் t வடிவ பதாகை ஏந்தியிருக்கும் காட்சி உள்ளது. இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுத ரொசெட்டாக் கல்லின் அடிப்பகுதி சிதிலமடைந்துள்ளது. மன்னர் மற்றும் அவரது அவையோர் எதிரில் போர் வீரர்களின் அணிவகுப்பு காட்சி இடம் பெற்றுள்ளது. மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல்லில் சேத் கடவுள், மின் கடவுள் மற்றும் நெம்டி கடவுளர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.[2][2] ![]() படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
ஆதார நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia