எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் (Third Intermediate Period of Egypt) (கிமு 1069 – கிமு 664) புது எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 1550 – 1077), பிந்தைய எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 664 - கிமு 332) இடைப்பட்ட காலத்தில் கிமு 1069 முதல் கிமு 664 முடிய நிலவிய எகிப்தியர் அல்லாத நூபியர், மெசொப்பொத்தேமியா போன்ற வெளிநாட்டவர்கள் எகிப்தை ஆண்ட நிலையற்ற ஆட்சிக் காலமாகும்[1] [2] எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் முடிவில் நிறுவப்பட்ட புது எகிப்திய இராச்சியத்தின் பார்வோன் பதினொன்றாம் இராமேசியம் கிமு 1070-இல் [3] இறந்த பின்னர் புது எகிப்து இராச்சியம் வீழ்ச்சி காணத் துவங்கிய போது, எகிப்தில் அரசியல் நிலையின்மையால் பண்டைய எகிப்தை கிமு 1069 முதல் கிமு 664 முடிய வெளிநாட்டவர்கள் குறிப்பாக நூபியா, மெசொப்பொத்தேமியா மக்களின் மூன்றாம் இடைநிலைக் கால ஆட்சி நிலவியது. மூன்றாம் இடைநிலைக் காலத்திற்கு பின்னர் கிமு 664 முதல் கிமு 332 முடிய பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்தை கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டது. ![]() ![]()
வரலாறுஎகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்சம்ஏற்கனவே எகிப்தின் இருபதாம் வம்சத்தின் பதினொன்றாம் இராமேசஸ் ஆட்சியில் தீபை நகரத்தை இழந்திருந்தது. இவ்வம்சத்தின் ஒரு பார்வோன் கீழ் எகிப்தில் தனது ஆட்சியை சுருக்கிக் கொண்டார். எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்ச ஆட்சியில் பண்டைய எகிப்து சிதறுண்டது. இந்நிலையில் அமூன் கோயில் தலைமை பூசாரிகள் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். தீபை நகரத்தின் அமூன் கோயில் தலைமைப் பூசாரிக்ள் மேல் எகிப்தையும், நடு எகிப்தையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்தனர்.[4] ஒரே அரச வம்சத்தினரான பார்வோன்களும், பூசாரிகளும் ஆட்சி அதிகாரப் போட்டியில் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டனர். எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் மற்றும் இருபத்தி மூன்றாம் வம்சம்கிமு 945-இல் இருபத்தி இரண்டாம் வம்சத்தினை நிறுவிய பார்வோன் முதலாம் சோசெகிங்கு ஆட்சியில் எகிப்து இராச்சியம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. ஒன்றுபட்ட எகிப்திய இராச்சியத்தை, கிமு 818-இல் இருபத்தி இரண்டாம் வம்சத்தின் பார்வோன் மூன்றாம் சொசெகிங்கு கீழ் எகிப்தையும், இருபத்தி மூன்றாம் வம்சத்தின் பார்வோன் மூன்றாம் ஒசோர்கோன் நடு மற்றும் மேல் எகிப்தையும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். தீபை நகரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் பெடுபாஸ்டு என்ற படைத்தலைவர் தன்னை தீபையின் பார்வோனாக அறிவித்துக் கொண்டார். பின்னர் எகிப்து இராச்சியத்தில் தீபை போன்ற நகர இராச்சியங்கள் எழுச்சியடைந்து தன்னாட்சியுடன் ஆளத்துவங்கியது. எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்கீழ் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இருபத்தி நான்காம் வம்ச பார்வோன்கள் எகிப்தை 12 ஆண்டு காலம் மட்டுமே ஆண்டனர். இவ்வம்சத்தின் பார்வோன் டெப்னகத் கிமு 732 முதல் 725 முடியவும்; பார்வோன் பாகென்நரெப் கிமு 715 முத 720 முடிய எகிப்தை ஆண்டனர். 732-இல் எகிப்தின் தெற்கே உள்ள நூபியா இராச்சியத்தின் மன்னர் பியூ தலைமையில், சிதறி இருந்த எகிப்திய இராச்சியத்தின் மீது படையெடுத்து வென்று எகிப்தில் நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர். இந்த நூபிய மன்னரே எகிப்தின் எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சத்தை நிறுவினார். எகிப்தின் இருபத்தைந்தாம் வம்சம்நூபியாவின் எகிப்திய இருபத்தி ஐந்தாம் வம்ச மன்னர் பியூ, போரில் தோற்ற எகிப்திய மன்னர்களை மாநில ஆளுநர்களாக நியமித்தார். கீழ் எகிப்தின் நைல் அற்றின் சமவெளிப் பகுதிகளை வென்று எகிப்தை ஒரு குடையின் கீழ் ஆண்டார். [5][6] பிந்தைய கால எகிப்திய இராச்சியம் நிறுவப்படும் வரை இவ்வம்சத்தின் மன்னர்கள் முழு எகிப்தையும் ஆண்டனர். இருபத்தி ஐந்தாம் வம்ச பார்வோன்களில் கல்லறைகள் நூபியாவில் இருந்தது.[7][8][9][10] கிமு 670-663 வரை அசிரியர்கள் எகிப்தின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தினர்.[11] கிமு 664-இல் அசிரியர்கள் தீபை, மெம்பிசு நகரங்களை அழித்தனர். இறுதியாக கிமு 700-இல் கீழ் எகிப்தை புது அசிரியப் பேரரசினர் கைப்பற்றியதால், எகிப்தில் அசிரிய நாகரித்தின் தாக்கங்கள் ஏற்பட்டது. அசிரியாவிலிருந்து எகிப்திற்கு மரக்கட்டைகள், இரும்பை உருக்க நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டது. எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் முடிவுஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் பார்வோன்கள் கிமு 664 முதல் கிமு 525 வரை பண்டைய எகிப்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசில் எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது. இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் ஆட்சியில் மேல் எகிப்து இருக்கையில், கீழ் எகிப்தை கிமு 664 முதல் அசிரியர்களான எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச பார்வோன்களின் ஆட்சியில் இருந்தது. கிமு 663-இல் மேல் எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச பார்வோன் தாந்தமணி கீழ் எகிப்தின் மீது படையெடுத்து மெம்பிசு, சைஸ் நகரங்களை கைப்பற்றி அசிரியப் பேரரசர் அசூர்பனிபாலின் உறவினரும், இருபத்தி ஆறாம் வம்ச மன்னருமான நெக்கோவைக் கொன்றார். குஷ் இராச்சியத்தினரை மேல் எகிப்தின் தெற்கே உள்ள நூபியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இருபத்தாந்தாம் வம்ச சைத் மன்னர் எகிப்தை 610 முதல் 525 முடிய தொடர்ந்து ஆண்டனர். கெடுவாய்ப்பாக பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பாபிலோனைக் கைப்பற்றிய கையோடு கிமு 525-இல் எகிப்தின் மெம்பிசு நகரத்தையும் கைப்பற்றினர். எகிப்தின் இருப்பத்தி ஐந்தாம் வம்ச மன்னர்கள் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவியவுடன் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் முடிவுற்றது. பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia