கிரிப்டான் இருபுளோரைடு(Krypton difluoride) என்பது KrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கிரிப்டான் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மமே முதலில் கண்டறியப்பட்ட கிரிப்டான் சேர்மமாகும்.[2] நிறமற்ற திண்மமான இச்சேர்மம் துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்டதாகும். கிரிப்டான் இருபுளோரைடின் மூலக்கூற்று வடிவமைப்பில் மூலக்கூறுகள் நேரியல் வடிவில் காணப்படுகின்றன. Kr−F பிணைப்புகளுக்கு இடையில் 188.9 பை.மீ இடைவெளி உள்ளது. வலிமையான இலூயிக் அமிலங்களுடன் கிரிப்டான் இருபுளோரைடு வினைபுரிந்து KrF+ உப்புகள் மற்றும் Kr2F+3 நேர்மின் அயனிகளை உருவாக்குகிறது.
தயாரிப்பு முறை
மின்கசிவு முறை, ஒளிவேதியியல் முறை, சூட்டுக் கம்பி முறை மற்றும் புரோட்டன் மோதல் முறை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். -265 பாகைசெல்சியசுவெப்பநிலையில்புளோரின் – ஆர்கான்வாயுக்கலைவையில், கிரிப்டான் புற ஊதாக்கதிர் வீச்சுக்குள்ளாக்கப்பட்டாலும் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். விளை பொருளை -78 பாகை வெப்பநிலையில் சிதைவடைதலின்றிச் சேமிக்க முடியும்.
மின்கசிவு முறை
கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிப்பதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட முறை மின்கசிவு முறையாகும். கிரிப்டான் நான்குபுளோரைடு தயாரிப்பதற்கான முறையாக மின்கசிவு முறை கருதப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டச் சேர்மம் கிரிப்டான் நான்குபுளோரைடு எனத் தவறுதலாக அடையாளம் காணப்பட்டது எனப் பின்னர் உணரப்பட்டது. இம்முறையில் 1:1 முதல் 2:1 வரையிலான F2 , Kr வாயுக்கலவை 40 முதல் 60 டோர் அழுத்தத்தில் உண்டாகும் மின்வில்லுக்கு இடையில் அதிகமான ஆற்றல் உண்டாகிறது. கிட்டத்தட்ட 0.25 கி/ம விளைபொருள் உருவாகிறது. உருவாகும் விளைபொருளின் அளவு உறுதியாக நம்புவதற்கில்லை என்பதுதான் இம்முறையில் உள்ள குறைபாடாகும்.[3][4]
↑Grosse, A. V.; Kirshenbaum, A. D.; Streng, A. G.; Streng, L. V. (1963). "Krypton Tetrafluoride: Preparation and Some Properties". Science139 (3559): 1047–8. doi:10.1126/science.139.3559.1047. பப்மெட்:17812982.
↑Kinkead, S. A.; Fitzpatrick, J. R.; Foropoulos, J. Jr.; Kissane, R. J.; Purson, D. (1994). "3. Photochemical and thermal Dissociation Synthesis of Krypton Difluoride". Inorganic Fluorine Chemistry: Toward the 21st Century. San Francisco, California: American Chemical Society. pp. 40–54. doi:10.1021/bk-1994-0555.ch003. ISBN978-0-8412-2869-6.