யூகேஎம் கொமுட்டர் நிலையம்
யூகேஎம் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: UKM Komuter Station; மலாய்: Stesen Komuter UKM) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு (யூகேஎம்} அருகில் அமைந்துள்ளதால இந்த நிலையத்திற்கும் பலகலைக்கழகத்தின் பெயர் வைக்கப்பட்டது.[1] சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.[2] பொதுஇந்த நிலையம் இரண்டு நடைபாதைத் தளங்களைக் கொண்டுள்ளது. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீட்டிப்புகளும் கூடுதலாக உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில்; பல்கலைக்கழக வளாகத்தின் வடகிழக்கு முனையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. நிலையத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலும் வார இறுதி நாட்களிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இந்த நிலையத்தில் இருந்து பயணிக்கின்றனர்.[3] பேருந்து சேவைகள்
மேலும் காண்க
யூகேஎம் நிலையக் காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia