2020 நவம்பர் 20-ஆம் தேதி பாசிர் கூடாங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பாசிர் கூடாங் மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பாசிர் கூடாங் மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 311 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
பொது
இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம்(Public Health);கழிவு மேலாண்மை(Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]
வளர்ச்சிப் படிகள்
பாசிர் கூடாங் ஆணையம் (மலாய்: Pihak Berkuasa Tempatan Pasir Gudang (PBTPG); ஆங்கிலம்: Pasir Gudang Local Authority (Johor Corporation)); 1 சூலை 1977
பாசிர் கூடாங் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Town Council); 1 சூலை 1985
பாசிர் கூடாங் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Municipal Council); 2 ஆகஸ்டு 2010;
பாசிர் கூடாங் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang City Council); 22 நவம்பர் 2020;[2]