சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்
சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Salem Junction railway station, நிலையக் குறியீடு: SA) இந்தியாவின், தமிழகத்தின், சேலம் நகரில் அமைந்துள்ள உள்ள தொடருந்து நிலையம் ஆகும். சேலத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் சேலம் டவுன் மற்றும் சேலம் மார்க்கெட் ஆகியவைகள் ஆகும். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான சேலம் மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. சேலம் சந்திப்பானது சென்னை- கோவை மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு நிலையமாகும். 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள், இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாறுஇந்த நிலையம் 1860களில் சென்னை (அப்போதைய மெட்ராஸ்) - பெய்பூர் (இன்றைய கேரளா) இரயில் பாதையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. தென்னிந்திய தொடருந்து வலையமைப்பிற்கு ஒரு இணைப்பை வழங்கும், விருதாச்சலத்திற்கு ஒரு குறுகிய இருப்புப் பாதை (மீட்டர் கேஜ்) அமைக்கப்பட்டபோது, இந்த நிலையம் சந்திப்பு நிலையம் என அந்தஸ்தைப் பெற்றது. 1990களில், இந்த தொடருந்து வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. 2000களில், விருத்தாச்சலம் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது, இதனால் நிலையம் முழுமையான அகல இருப்புப்பாதை நிலையமாக மாறியது. 1990களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கரூர் செல்வதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய அகலப்பாதை 2013இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையமானது, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு குறுகிய, நேரடி பாதைக்கு இது வழிவகுக்கிறது. இணைப்பு மற்றும் உள்கட்டமைப்புசேலம் சந்திப்பில் இருந்து, நகர பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு (புதிய பஸ் ஸ்டாண்ட்) 24 மணி நேர தொடர்ச்சியான (பேருந்து எண்: 13) பேருந்து சேவை உள்ளது. இந்நிலையத்திலிருந்து 18 கி.மீ (11 மைல்) தொலைவில் உள்ள சேலம் வானூர்தி நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். தொடருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேர டாக்ஸி சேவை உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட A - தர நிலையமாகும். இந்த நிலையத்தில் நகர்படி கொண்ட ஒவ்வொரு நடைமேடைகளுக்கு, பாலங்களுக்கும் ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. இந்த நிலையத்தில் ஆறு நடைமேடைகளும், எட்டு வழித்தடங்களும் உள்ளன.[1] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சேலம் சந்திபு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12][13] வசதிகள்இந்த தொடருந்து நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன:
வழித்தடங்கள்இந்நிலையத்திலிருந்து ஆறு வழித்தடங்கள் பிரிகின்றது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia