திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையம்
திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையம் (Dindigul Junction railway station, நிலையக் குறியீடு:DG) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, திண்டுக்கல் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சென்னை மற்றும் வடக்கிலிருந்து மதுரை சந்திப்பை நோக்கி செல்லும் அனைத்து தொடருந்துகளும் இந்நிலையம் வழியாகச் செல்வதால், இது மதுரை சந்திப்புக்கான நுழைவாயிலாக உள்ளது. அமைவிடம்திண்டுக்கல் சந்திப்பானது, சிட்கோ தொழிற்பேட்டை தோட்டத்தை ஒட்டியுள்ள நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 62 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையமாகும்.
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6]
வழித்தடங்கள்இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia