சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி
சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani Federal Constituency; சீனம்: 双溪大年联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P015) ஆகும். சுங்கை பட்டாணி தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பட்டாணி தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1] பொதுசுங்கை பட்டாணி நகரம்சுங்கை பட்டாணி' (Sungai Petani); கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜோர்ஜ் டவுன் நகரில் இருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916-ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது. அப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர். சுங்கை பட்டாணி மணிக்கூண்டு1950-ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஆங்காங் சாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஆங்காங் சாங்காய் வங்கி 1921-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. அதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (Sungai Petani Club) 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர். சுங்கை பட்டாணி நாடாளுமன்றத் தொகுதி
சுங்கை பட்டாணி தேர்தல் முடிவுகள்
சுங்கை பட்டாணி வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia