பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Terap; ஆங்கிலம்: Padang Terap Federal Constituency; சீனம்: 巴东特拉普联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பாடாங் தெராப் மாவட்டத்தில் (Padang Terap District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P007) ஆகும்.[5]
பாடாங் தெராப் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), மெர்போக் தொகுதி 31 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[6]
பொது
பாடாங் தெராப் மாவட்டம்
பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District) கெடா மாநிலத்தின் மூன்றாவது பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் தாய்லாந்து நாடு எல்லையாக உள்ளது. மேற்குப் பகுதியில் சிக் மாவட்டம் (Sik District) மற்றும் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் கோலா நெராங் (Kuala Nerang); நாகா (Naka) மற்றும் பெடு (Pedu) ஆகியவை முக்கிய நகரங்கள்.
நிர்வாகப் பிரிவுகள்
பாடாங் தெராப் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
பத்தாங் துங்காங் கானான் (Batang Tunggang Kanan)
பத்தாங் துங்காங் கீரி (Batang Tunggang Kiri)
பெலிம்பிங் கானான் (Belimbing Kanan)
கூரோங் ஈத்தாம் (Kurong Hitam)
பாடாங் தெமாக் (Padang Temak)
பாடாங் தெராப் கானான் (Padang Terap Kanan)
பாடாங் தெராப் கீரி (Padang Terap Kiri)
பெடு (Pedu)
தெக்காய் (Tekai)
தோலாக் (Tolak)
பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி
பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம்
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
ஜித்ரா-பாடாங் தெராப் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது
1974–1978
அகமத் சுக்ரி அப்துல் சுக்குர்' (Ahmad Shukri Abdul Shukur)