குபாங் பாசு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Pasu; ஆங்கிலம்: Kubang Pasu Federal Constituency; சீனம்: 巴东特拉普联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P006) ஆகும்.[4]
குபாங் பாசு தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து குபாங் பாசு தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), குபாங் பாசு தொகுதி 31 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
பொது
குபாங் பாசு மாவட்டம்
மலேசியா-தாய்லாந்து எல்லை(Malaysia–Thailand border) நகரமான புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) இந்த குபாங் பாசு மாவட்டத்தில் தான் உள்ளது. அத்துடன் சாங்லூன் (Changlun) கல்வி வளாகம்; மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான ஜித்ரா (Jitra) நகரமும் இங்குதான் உள்ளன.