மெர்போக் மக்களவைத் தொகுதி
மெர்போக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Merbok; ஆங்கிலம்: Merbok Federal Constituency; சீனம்: 植联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P014) ஆகும்.[4] மெர்போக் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்போக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), மெர்போக் தொகுதி 40 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5] பொதுகோலா மூடா மாவட்டம்கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது. மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது.[6] 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. வரலாறுசுங்கை மூடா (Sungai Muda) ஆறு, கெடா மாநிலத்தின் தென்பகுதியை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7] சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன. மூடா ஆறு, மெர்போக் ஆறு (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரிகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது. மெர்போக் மக்களவைத் தொகுதி
தேர்தல் முடிவுகள்
மெர்போக் வேட்பாளர் விவரங்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia