அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம்
அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Arakkonam Junction railway station, நிலையக் குறியீடு:AJJ) என்பது தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னிந்தியாவின் முதல் தொடருந்து பாதையில் அமைந்துள்ள, இந்தியாவின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் மும்பை - சென்னை வழித்தடத்தில், குண்டக்கல் - சென்னை எழும்பூர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இங்கு அதிவிரைவு இரயில்களைத் தவிர, அனைத்து இரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் இரயில்களும் இயக்கப்படுகின்றன. இது சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர், திருப்பதி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை நாளொன்றுக்கு நூறுக்கும் அதிகமான இரயில்கள் கடந்து செல்கின்றன. இது எட்டு நடைமேடைகளைக் கொண்டது. மூன்றாம், நான்காம் நடைமேடைகளை சென்னைப் புறநகர் இரயில்களில் செல்வோர் பயன்படுத்துகின்றனர். முதலாம், இரண்டாம் நடைமேடைகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9]
இரயில்கள்இங்கிருந்து செல்லும் இரயில்களின் பட்டியலை கீழே காணவும்.
அரக்கோணம் சந்திப்பிற்கு வந்தடையும் வழிதடங்கள்
நான்கு தடங்களைக் கொண்ட வழிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia