குரோமியம் ஐம்புளோரைடு(Chromium pentafluoride) என்பது CrF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல்சேர்மமாகும்[2]. குரோமியம் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. சிவப்பு நிறத் திண்மமான இச்சேர்மம் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் 30 ° செவெப்பநிலையில் உருகும் தன்மையும் கொண்டிருக்கிறது. எளிதாக நீராற்பகுப்பு அடைந்து குரோமியம்(III) மற்றும் குரோமியம்(VI) அயனிகளைத் தருகிறது[3] . வனேடியம் ஐம்புளோரைடின் படிக அமைப்பையே குரோமியம் ஐம்புளோரைடும் கொண்டிருக்கிறது[4]. பரவலாகக் கிடைக்கக்கூடிய குரோமியம் புளோரைடு, குரோமியம் ஐம்புளோரைடு ஆகும். கருத்தியாலான குரோமியம் அறுபுளோரைடு இதுவரை தயாரிக்கப்படவில்லை. [5]
↑Jacques Guertin, James A. Jacobs, Cynthia P. Avakian, ed. (2004). Chromium(VI) Handbook. CRC Press. p. 30. ISBN9780203487969.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
↑Amit Aora (2005). Text Book Of Inorganic Chemistry. Discovery Publishing House. p. 649.
↑A. G. Sharpe (1983). Advances in Inorganic Chemistry. Vol. 27. Academic Press. p. 103. ISBN9780080578767.